வசதி குறைந்த பட்டக் கல்வி மாணவர்களுக்கு நிதி உதவி

சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தில் (என்­யு­எஸ்) பயி­லும் வசதி குறைந்த முழு­நே­ரப் பட்­டக் கல்வி மாண­வர்­க­ளுக்கு நிதி உதவி வழங்­கப்­பட இருக்­கிறது.

நிதி உதவி சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு மட்­டுமே வழங்­கப்­படும். தனி­ந­பர் வரு­மா­ன­மாக $1,000க்கும் குறை­வான தொகையை ஈட்டும் குடும்­பங்­க­ளி­லி­ருந்து வரும் பட்­டக் கல்வி மாண­வர்­கள் பல்­க­லைக்­க­ழ­கக் கல்­விக் கட்­ட­ணங்­க­ளைச் செலுத்தத் தேவை­யில்லை.

இவ்­வாண்டு ஆகஸ்ட் மாதத்­தில் புதிய கல்வி ஆண்டு தொடங்­கும்­போது ஏற்­கெ­னவே நடப்­பில் உள்ள அர­சாங்க உத­வித் தொகை போக, அதற்கு மேல் கூடு­தல் நிதி வழங்கி வசதி குறைந்த

பட்­டக் கல்வி மாண­வர்­க­ளுக்­கான பல்­க­லைக்­க­ழ­கக் கல்­விக் கட்­ட­ணங்­களை என்­யு­எஸ் செலுத்­தும்.

இந்த ஆக அண்­மைய மேம்­

ப­டுத்­தப்­பட்ட ஆத­ர­வுக்­காக ஒவ்­வோர் ஆண்­டும் $15 மில்­லி­யனை என்­யு­எஸ் ஒதுக்­கி­வைக்­கும்.

இந்த நிதி உத­வி­யால் ஏறத்­தாழ 3,300 பட்­டக் கல்வி மாண­வர்­கள் பயனடை­வர் என்று எதிர்­பார்க்­கப்

­ப­டு­கிறது.

மானு­ட­வி­யல், அறி­வி­யல் போன்ற பொதுத் துறை­களில் பயி­லும் பட்­டக் கல்வி மாண­வர்­க­ளுக்கு அவர்­க­ளது குடும்ப வரு­மா­னத்­தைப் பொறுத்து ஆண்­டுக்­குக் கூடு­த­லாக $2,300லிருந்து $7,000 வரை­யி­லான நிதி உதவி வழங்­கப்­படும்.

வசதி குறைந்த மாண­வர்­க­ளுக்­கும் உயர் கல்வி கிடைப்­பதை உறுதி செய்ய என்­யு­எஸ் இந்த முயற்­சி­யில் தீவி­ர­மாக இறங்­கி­யுள்­ளது. ஏற்­கெ­னவே நிதிச் சுமை­யால் பாதிக்­கப்­பட்­டுள்ள வசதி குறைந்த குடும்­பங்­க­ளுக்கு கொவிட்-19 நெருக்­க­டி­நிலை கூடு­தல் சிர­மத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

இந்­தக் குடும்­பங்­க­ளுக்கு ஆத­ர­வுக்­க­ரம் நீட்ட வேறு பல அமைப்­பு­ களும் கூடு­தல் நட­வ­டிக்­கை­களை எடுத்­து­வ­ரும் நிலை­யில் என்­யு­எஸ் பல்­க­லைக்­க­ழ­க­மும் கூடு­தல் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

சுய உதவி அமைப்­பான மெண்­டாக்கி அதன் துணைப்­பாட வகுப்பு ­க­ளுக்­கான வரு­டாந்­தி­ரப் பதி­வுக் கட்­ட­ணங்­களை இவ்­வாண்டு குறைத்­துள்­ளது.

மெண்­டாக்கி துணைப்­பாட வகுப்­பு­க­ளுக்கு விண்­ணப்­பிக்­கும் மலாய்/முஸ்­லிம் மாண­வர்­கள் தற்­போது $10 மட்­டுமே செலுத்த வேண்­டும். இதற்கு முன்பு அவர்­கள் $210 செலுத்த வேண்­டி­யி­ருந்­தது.

வசதி குறைந்த குடும்­பங்­க­ளி­லி­ருந்து வரும் மாண­வர்­க­ளுக்கு வழங்­கப்­படும் நிதி ஆத­ர­வுத் திட்­டத்தை விரி­வுப்­ப­டுத்­து­வ­தா­க­வும் புதிய நிதி உதவி அதில் அடங்­கும் என்று என்­யு­எஸ் கூறி­யது.

புதிய நிதி உத­வி­யைப் பெற என்­யு­எஸ் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் ஏற்­கெ­னவே பயின்­று­வ­ரும் வசதி குறைந்த மாண­வர்­களும் புதி­தாகச் சேரும் வசதி குறைந்த பட்­டக் கல்வி மாண­வர்­களும் தகுதி பெறு­வர். தனி­ந­பர் வரு­மா­ன­மாக $690க்கும் குறை­வான தொகையை ஈட்டும் குடும்­பங்­க­ளி­லி­ருந்து வரும் மாண­வர்­க­ளுக்­குக் கூடு­தல் நிதி ஆத­ரவு வழங்­கப்­படும்.

சொந்த செல­வைச் சமா­ளிக்க உத­வும் வகை­யில் தகுதி பெறும் ஒவ்­வொரு மாண­வ­ருக்­கும்

ஆண்­டு­தோ­றும் $4,000 உத­வித் தொகை வழங்­கப்­படும்.

என்­யு­எஸ் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் கல்­வி­யைத் தொட­ர­வும் வெளி­

நாட்­டுக் கல்வி அனு­ப­வத் திட்­டங்­களில் ஈடு­ப­ட­வும் விருப்­பம் இருந்­தால் புதிய வாய்ப்பு மேம்­பாட்டு மானி­யத்­தின்­கீழ் நான்கு ஆண்டு காலத்­தில் அவர்­க­ளுக்கு $10,000 வழங்­கப்­படும்.

தற்­போ­தைய நில­வ­ரப்­படி, ஏறத்­தாழ 16,000 என்­யு­எஸ் மாண­வர்­கள் நிதி உதவி பெறு­கின்­ற­னர். அப்­பல்­க­லைக்­க­ழ­கத்­தின் மொத்த பட்­டக் கல்வி மாண­வர்­களில் இது 55 விழுக்­கா­டா­கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!