2025ல் உயர் தொழில்நுட்ப குறுஞ்செயற்கைக் கோள்

உயர் தொழில்­நுட்­பம் கொண்ட மிகச் சிறிய குறுஞ்­செ­யற்­கைக் கோள் ஒன்றை உரு­வாக்­கும் முயற்­சி­யில் சிங்­கப்­பூர் இறங்­கி­யுள்­ளது. 100 கிலோ­கி­ராம் எடை­யில் சிறிய குளிர்­ப­த­னப் பெட்­டி­யின் அள­வில் அமை­ய­வி­ருக்­கும் அது, பூமிக்கு வெகு அருகே விண்­ணில் வலம் வரும்.

செயற்­கைக் கோள்­க­ளைத் தாழ்­வா­கப் பறக்க விடும் புதிய தொழில்­நுட்­பங்­க­ளைச் சோதிப்­பதே இத்­திட்­டத்­தின் இலக்கு.

வழக்­க­மான செயற்­கைக் கோள்­கள் 500 முதல் 800 கிலோ மீட்­டர் உய­ரத்­தில் பூமி­யைச் சுற்றி வரக்­கூ­டி­யவை. இந்­தக் குறுஞ்­செ­யற்­கைக் கோள் பூமி­யி­லி­ருந்து 250 கிலோ­மீட்­டர் உய­ரத்­தில் வலம் வரும்.

பூமி­யைக் கண்­கா­ணிக்­கும் கரு­வி­கள் மேலும் திறம்­ப­டச் செயல்­பட, இப்­பு­திய தொழில்­நுட்­பம் கைகொ­டுக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­கலைக் கழ­கத்­தின் (என்­டியு) தலை­மை­யி­லான புதிய கூட்­டமைப்பு, சிங்­கப்­பூ­ரின் குறுஞ்­செயற்­கைக் கோளை உரு­வாக்­கும் எனத் தெரி­விக்­கப்­பட்­டது. 2025ஆம் ஆண்­டில் அது விண்­ணில் செலுத்­தப்­படும்.

புதிய கூட்­ட­மைப்­பில் இடம்­பெறும் அமைப்­பு­கள் அதன் தொடர்­பி­லான ஆய்வு ஒத்­து­ழைப்பு உடன்­பாட்­டில் நேற்­றுக் கையெழுத்­திட்­டன. ஷெரட்­டன் டவர்­சில் நடை­பெற்ற இரண்டு நாள் அனைத்­து­லக விண்­வெளி, தொழில்­நுட்ப மாநாட்­டிற்­கி­டையே அதற்­கான புரிந்­து­ணர்­வுக் குறிப்பு கையெ­ழுத்­தா­னது.

சிங்­கப்­பூ­ரி­லேயே வடி­வ­மைக்­கப்­பட்ட முதல் விண்­வெ­ளிக் கேமரா, குறுஞ்­செ­யற்­கைக் கோளில் பொருத்­தப்­பட்­டி­ருக்­கும். அது 50 செமீ நீளம் மட்­டுமே கொண்ட சிறிய பொருள்­க­ளை­யும் மிகத் தெளி­வா­கப் பட­மெ­டுக்­கும் திறன் கொண்­டி­ருக்­கும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

சிங்­கப்­பூ­ரின் குறுஞ்­செ­யற்­கைக் கோள், பயன்­பாட்­டிற்­குப் பிறகு விண்­வெ­ளிக் குப்­பை­யாக விண்ணை மாசு­ப­டுத்­தாது. பயன்­பாடு முடிந்­த­தும் அதன் இயந்­திரம் அணைக்­கப்­படும். சில நாள்­களில் அது பூமி­யின் காற்று மண்­ட­லத்தை அடை­யும் வேளை­யில் தானா­கவே எரிந்­து­வி­டும்­படி வடி­வ­மைப்­படும் என்­பது சிறப்­பம்­சம்.

என்­டியு 2011ஆம் ஆண்­டி­லி­ருந்து ஒன்­பது விண்­க­லன்­க­ளைக் கட்­ட­மைத்து விண்­ணில் செலுத்தி­ இ­ருக்­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!