முதியோருக்கு வசதியாக பேருந்து நிறுத்தங்கள்

முதியோருக்கு வசதியாக பேருந்து நிறுத்தங்கள்

1 mins read
a2778b2b-1b94-4231-b93c-352287de082c
ஹாலந்து டிரைவ் புளோக் 46 முன்பு உள்ள இந்த பேருந்து நிறுத்தம் முதியோருக்கு ஏற்றவாறு மேம்படுத்தப்பட்டு வருகிறது. கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூ­ரின் பல்­வேறு பகு­தி­களில் அமைந்­துள்ள 360 பேருந்து நிறுத்­தங்­கள், முதி­யோ­ருக்­குக் கூடு­தல் வச­தி­யை­யும், பாது­காப்­பை­யும் தரும் நோக்­கில் மேம்­பாடு காண­வி­ருக்­கின்­றன.

படி­களை அகற்­று­தல், பேருந்­தி­னுள் எளி­தாக ஏற வச­தி­யாக நடை­பாதை உய­ரத்­தை சரி­செய்­தல், நிறுத்­தங்­களில் வெளிச்­சத்தை அதி­க­ரித்­தல் போன்­றவை மேம்­பாட்டு அம்­சங்­களில் சில என்று போக்­கு­வ­ரத்­திற்­கான மூத்த துணை அ­மைச்­சர் சீ ஹொங் டாட் நேற்று தெரி­வித்­தார்.

நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம், சாத்­தி­ய­மான இடங்­களில், கூடு­தல் இருக்­கை­களை அமைப்­ப­து­டன், பேருந்து நிறுத்­தங்­க­ளின் இட­வ­ச­தி­யை­யும் அதி­க­ரிக்­கும் என்­றார் அவர்.

மூத்­தோ­ருக்­கும் சக்­கர நாற்­கா­லி­க­ளைப் பயன்­ப­டுத்­தும் பய­ணி­க­ளுக்­கும் அது உத­வும் என்று திரு. சீ தமது ஃபேஸ்புக்­கில் பதி­விட்­டார். பேருந்து நிறுத்த உள்­கட்­ட­மைப்பு மேம்­பாட்­டுத் திட்­டத்­தின்கீழ் மேற்­கொள்­ளப்­படும் அத்­த­கைய நட­ வடிக்­கை­களில், மழை­யில் அதி­கம் நனை­யா­மல் இருக்க தடுப்­பு­களும் அமைக்­கப்­படும்.

மேம்­பாட்­டுப் பணி­க­ளுக்கு முத­லில் அடை­யா­ளம் காணப்­பட்ட 117 பேருந்து நிறுத்­தங்­களில் சென்ற ஆண்டு பணி தொடங்­கி­யது.

அடுத்த ஆண்டு இறு­திக்­குள் அது நிறை­வ­டை­யும். அதன் தொடர்­பில் இது­வரை 88 தற்­கா­லி­கப் பேருந்து நிறுத்­தங்­கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன.

ஏப்­ரல் இறு­தி­யில் அத்­த­கைய மேலும் 29 பேருந்து நிறுத்­தங்­கள் அமைக்­கப்­படும்.

360 பேருந்து நிறுத்­தங்­க­ளி­லும் 2025 மத்­திக்­குள் மேம்­பாட்­டுப் பணி­களை நிறை­வு­செய்ய இலக்கு கொண்­டி­ருப்­ப­தா­கத் துணை­ய­மைச்­சர் தெரி­வித்­தார்.