விமானக் கண்காட்சியில் பங்குபெறுவதில் பெருமிதம் அடைந்துள்ள அதிகாரிகள்

கவின்­விழி கதி­ரொளி

சிறு­வ­ய­தி­லி­ருந்து விளக்­கங்­க­ளை­யும் வர்­ண­னை­க­ளை­யும் கேட்டு ரசித்­து­வந்­துள்ள 41 வயது மூன்­றாம் இரா­ணுவ வல்­லு­நர் விஜ­யன் பிர­கா‌ஷ், முதன்­மு­றை­யாக வர்­ண­னை­யா­ள­ரா­கப் பரி­ண­மிப்­ப­தில் பேரார்­வம் கொண்­டுள்­ளார்.

இன்று தொடங்­கும் சிங்­கப்­பூர் விமா­னக் கண்­காட்­சி­யின் வர்­ண­னை­யா­ளர்­களில் ஒரு­வ­ரான இவர், தமது பங்கை ஆற்­று­வ­தில் பேரார்­வத்­து­ட­னும் பெரு­மி­தத்­து­ட­னும் உள்­ளார்.

சிங்­கப்­பூர் விமா­னக் கண் காட்­சி­யில் இடம்­பெ­றும் 'AH-64D' ரக வானூர்தி வான்­வழி காட்சி அணி­யின் வர்­ண­னை­யா­ள­ராக முதல் முறை பொறுப்­பேற்று இருக்­கி­றார் விஜ­யன்.

விமா­னப்­படை பொறி­யா­ள­ரான இவ­ருக்கு, சிறு வய­தி­லி­ருந்தே விமான சாக­சக் காட்­சி­களில் ஆர்­வம் அதி­கம். குறிப்­பாக இவ­ருக்கு விளக்­க­வு­ரையை கேட்­பது மிக­வும் பிடிக்­கும். இந்த ஆண்டு வர்­ண­னை­யா­ளராக இருக்க வாய்ப்பு கிட்­டி­ய­தும் திரு விஜ­யன் அதை ஆனந்­தத்­து­டன் ஏற்­றுக்­கொண்­டார்.

"விமா­னங்­கள் பாது­காப்­பாக தரை­யி­றங்­கும்­போது எங்­க­ளுக்­குத் திருப்­தி­யாக இருக்­கும். இவ்­வாண்டு அதே விமா­னங்­கள் சாக­சக் காட்­சி­கள் புரி­வ­தைக் கண்டு மகிழ்­வ­து­மட்­டு­மல்­லா­மல், அதற்கு வர்­ண­னை­யா­ளராக செயல்­பட போவது பெரும் நிறைவை அளிக்­கின்­றது" என்­றார் திரு விஜ­யன்.

2022 விமா­னக் கண்­காட்­சிக்­காக சென்ற ஆண்டு டிசம்­ப­ரி­லி­ருந்து கடும் பயிற்சி செய்து வரு­வ­தாக அவர் தெரி­வித்­தார்.

"அர்ப்­ப­ணிப்­பும், செய்­யும் செய­லில் சிறந்து விளங்­கு­வ­தும் சிங்­கப்­பூர் ஆகா­யப்­ப­டை­யின் சிறப்பு அம்சமாகும். இதில் நானும் ஒரு உறுப்­பி­ன­ராக இருப்­பதை எண்ணி பெரு­மி­தம் கொள்­கி­றேன்" என்று திரு விஜ­யன் கூறி­னார்.

அவ­ரைப் போன்று விமா­னக் கண்­காட்­சி­யில் பங்­கு­பெ­று­வதை வர­மாக எண்­ணு­கி­றார் 20 வயது மூன்­றாம் சார்­ஜண்ட் கவீன் சான்‌ஷ்ரே.

'F-16C/D' ஃபால்­கன் போர்த்­தொ­ட­ருக்­கான விமா­னப்­படை தொழில்­நுட்ப வல்­லு­ந­ராக, தனது முதல் விமான சாக­சக் காட்­சி­யில் காலெ­டுத்து வைக்­கி­றார் கவீன். கிட்­டத்­தட்ட ஓராண்­டுக்கு முன்­னர் ஆகா­யப்­ப­டை­யில் அவர் சேர்ந்த பிறகு இதுவே அவர் பங்­கு­பெ­றும் முதல் மாபெ­ரும் நிகழ்­வா­கும்.

விமா­னம் செயல்­பாட்­டுக்­குத் தயா­ராக இருக்­கி­றதா என்­பதை உறுதி செய்­வது இவ­ரது முதன்­மை­யான பணி­யா­கும்.

தமது பெற்­றோ­ரின் பரிந்­து­ரை­படி வேலை-படிப்பு பட்­ட­யம் திட்­டத்­திற்­கான முன்­னோ­டித் தொகுப்­பில் ஒரு மாண­வ­னாக இருப்­ப­தில் கவீன் பெரு­மி­தம் கொள்­கி­றார். அந்­தத் திட்­டத்­தில் அவர் விமா­னப் பரா­ம­ரிப்பு பொறி­யி­யல் படித்து வரு­கி­றார்.

"பொறி­யி­யல் மீது மிகுந்த நாட்­டம் எனக்கு. அத­னால் தக­வல் தொழில்­நுட்­பம் படித்து முடித்­த­வு­டன் நான் பொறி­யி­யல் படிப்­புக்கு மாறி­னேன்" என்­றார் திரு கவீன்.

திரு கவீன் தனது தந்தை மற்­றும் உற­வி­னர்­கள் வாக­னங்­கள் பரா­ம­ரிப்பு பணி­களில் ஈடு­ப­டு­வ­தைப் பார்த்து வளர்ந்­தார். இது அவ­ருக்கு பிடித்­த­மான பொழு­து­போக்கு என அவர் தெரி­வித்­தார். அவ­ரது பொழு­து­போக்கே அவ­ருக்கு பணி­யாக அமைந்­த­தால் இந்த துறை­யில் வேலை செய்­வது அவ­ருக்கு மன­நி­றைவை அளிக்­கிறது. வார நாட்­களில் வேலை, சனிக்­கி­ழ­மை­களில் பாடம் என்று அவர் இருந்­தா­லும், இது அவ­ரது அறிவை விரி­வு­ப­டுத்­த­வும் முற்­போக்­கான வாழ்க்­கைப் பாதையை உறு­திப்­ப­டுத்­த­வும் உத­வும் என திட­மாக நம்­பு­கி­றார். திரு கவீன் எதிர்­கா­லத்­தில் சிங்­கப்­பூர் ஆகா­யப்­ப­டை­யின் விமானி குழு­வில் ஒரு நப­ராக இருக்க விரும்­பு­வ­தாக பகிர்ந்து கொண்­டார்.

"விமா­னக் கண்­காட்­சிக்கு நான் சென்­றதே இல்லை. அந்த வகை­யில், இந்த வாய்ப்பு எனக்கு மறக்­க­மு­டி­யாத அனு­ப­வத்தை அளிக்­கும்" என்று தான் நம்­பு­வ­தாக திரு கவீன் கூறினார்.

தனக்கு முற்­றி­லும் ஆத­ர­வாக இருந்த தனது நண்­பர்­கள், தாய் தந்­தை­யார் ரமே‌ஷ், மேரி மற்­றும் சக பணி­யா­ளர்­க­ளுக்கு (தெங்கா ஏர்­பேஸ்-805 SQN) மூன்­றாம் சார்­ஜண்ட் கவீன் சான்‌ஷ்ரே தனது மன­மார்ந்த நன்­றி­யைத் தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!