கட்டுப்பாட்டுத் தளர்வுகள்; மக்கள் நிதானம்

நோய்ப் பர­வ­லைத் தடுக்க செயல்­பாட்­டில் இருக்­கும் கட்­டுப்­பா­டு­கள் தளர்த்தப்படும் என்று நேற்று முன்­தி­னம் அமைச்­சு­கள் நிலைப் பணிக்­குழு விடுத்த அறி­விப்பை வர­வேற்று மக்­கள் மன­ஆ­று­தல் அடைந்­துள்­ள­னர். சம­யச் சடங்­கு­கள், வர்த்­தக நிகழ்­வு­கள், ஊடக மாநா­டு­கள், இறு­திச் சடங்கு, திரு­மண விருந்து போன்ற நிகழ்­வு­களில் கலந்­து­கொள்­வோ­ரின் அதி­க­பட்ச எண்­ணிக்கை வரம்பு அடுத்த மாதம் நான்காம் தேதி முதல் அகற்­றப்­பட்­டு­கின்­றன. குறிப்­பாக சம­யத் தலங்­களில் வழி­பா­டு­கள் செய்­வ­தற்கு எண்­ணிக்­கைக் கட்­டுப்­பா­டு­கள் இல்­லாத நிலையை இறை­வன் தந்த வர­மாகக் கரு­தி­ய­வர்­களில் 47 வயது பாக்­கி­ய­லட்­சுமி ஒரு­வர்.

முக்கிய, பிரதான நாள்களில் கோவிலுக்குப் போகமுடியவில்லையே என்ற ஏக்கத்தில் ஈராண்டுகளாக அவதிப்படுவதாகத் தெரிவித்த துப்புரவாளரான அவர், இனி வரும் சுப தினங்களில் கோளிலுக்குச் செல்லமுடியும் என்பதில் மன நிறைவு அடைந்துள்ளார்.

முகக் கவ­சம் அணிந்­தி­ருந்­தால் ஒரு மீட்­டர் சமூக இடை­வெ­ளியை கடைப்­பி­டிக்க தேவை­யில்லை என்­பது மிகப்­பெ­ரிய ஊக்­க­மா­கும். தின­சரி வழி­பாட்­டிற்கு 150 பக்­தர்­கள் தற்­போது அனு­ம­திக்­கப்­படுகின்றனர்.

அடுத்த மாதம் நான்காம் தேதிக்­குப் பிறகு சுமார் 250லிருந்து 300 பக்­தர்­களை கோவி­லுக்­குள் ஒரே நேரத்­தில் அனு­மதிக்க இய­லும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. அடுத்த மாதம் 28ஆம் தேதியன்று வரும் பங்­குனி உத்­தி­ரத்­ திருவிழாவுக்கு, கொடுக்­கப்­பட்ட நேரத்­தில் ஒரு நுழை­வுக்கு 250 பக்­தர்­களை எதிர்­பார்க்­கி­றோம் என புனிதமரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோயிலின் செயலாளர் திரு அண்ணாதுரை தெரி­வித்­தார்.

"கட்­டுப்­பா­டு­களை பக்­தர்­கள் இது­வரை நன்­றாக ஏற்­றுக்­கொண்­டுள்­ள­னர். திரு­ம­ணங்­களில் மார்ச் நான்­காம் தேதி முதல் சுமார் 250 விருந்­தி­னர்­கள் வருகை அளிக்­க­லாம் என்­பது அனை­வ­ருக்­கும் நற்­செய்­தி­யா­கும்," என்று திரு அண்­ணா­துரை கூறி­னார். கலா­சார, சமூக, இளை­யர் அமைச்­சி­ட­மி­ருந்து அதி­கா­ர­பூர்வ வழி­மு­றை­க­ளுக்­கா­கக் காத்­தி­ருக்­கின்­ற­னர் புனி­த­ம­ரம் ஸ்ரீ பால­சுப்­பி­ர­ம­ணி­யர் கோவில் செயற்­கு­ழு­வி­னர்.

அதி­க­பட்ச வரம்­பு­க­ளின் அகற்­றலை பெரி­தும் வர­வேற்­றா­லும் நிலைமை சூழ­லுக்­கேற்ப மாற­லாம் எனக் கரு­து­வ­தாக ஈசூன் கிறிஸ்­துவ தேவா­ல­யத்­தின் (ஆங்கிலிக்கன்) தலை­வர் இஸ்­ர­வேல் செல்­வம் தமிழ் முர­சி­டம் தெரி­வித்­தார். முகக்­க­வ­சம் அணி­வோ­ருக்கு இடையே சமூக இடை­வெ­ளிக்­கான விதி­முறை அகற்­றப்­பட்ட பின்­னர் அதி­க­மா­னோர் தேவா­ல­யத்­திற்­குள் வழி­ப­ட­லாம் என்று அவர் ­கூ­று­கி­றார்.

"ஆனா­லும் மின்­னி­லக்க மாற்று ஏற்­பா­டு­கள் தொடர்ந்து தயார்­நிலை­யில் இருக்­கும். இந்­நே­ரம், கட்­டுப்­பாட்டு விதி­மு­றை­களில் மாற்­றம் ஏற்­ப­டு­வது அவ்­வ­ளவு புதி­தல்ல. எனவே எங்­கள் உறுப்­பி­னர்­க­ள் மாற்­றங்­க­ளுக்கு ஒத்­துப்­போ­வர் என்­ப­தில் ஐய­மில்லை," என்று அவர் கூறி­னார்.

இறு­திச் சடங்­கு­க­ளி­லும் மண்­டா­ய் தகனச்சாலையிலும் 30 பேர் மட்­டுமே அனு­மதிக்­கப்­ப­டுவர் என்­பது தற்­போ­தைய விதி. கட்­டுப்­பாடு­கள் தளர்த்­தப்­ப­டு­வ­தால் வணி­கக் கண்­ணோட்­டத்­தில் எங்­க­ளுக்கு எந்த மாற்­ற­மும் இல்லை என்­றார் ராஜூ காஸ்­கெட்­ உரி­மை­யா­ளர் திரு லோக­நா­தன் சுந்­த­ரம் ராஜூ. ஆனால், மறைந்­த­வ­ரின் குடும்­பத்­தா­ருக்கு இது சற்று ஆறு­த­லாக இருக்­கும் என அவர் தெரி­வித்­தார்.

வரும் ஞாயிற்­றுக்­கி­ழமை தமது திரு­ம­ணப்­ ப­தி­வைச் செய்­ய­வி­ருக்­கும் 30 வயது பி. கலை­வாணி, தற்­போ­தைய கட்­டுப்­பா­டு­க­ளைப் பின்­பற்­றியே இதனை நடத்­த­வேண்­டும் என வருத்­தத்­து­டன் தெரி­விப்­ப­தா­கக் கூறி­னார்.

"கூடு­தல் பேரை அழைக்­க­வேண்­டும் என்­ப­தைத் தான் விரும்­பி­னேன். ஆனால் இந்­தப் பதி­வுத் திரு­ம­ணத்­திற்குக் கிட்­டத்­தட்ட 50 பேரைத்­தான் என்­னால் அழைக்க முடிந்தது. ஆண்­டி­று­திக்­குள் நடக்­க­வுள்ள என் திரு­ம­ணத்­தின்­போது இந்­தத் தளர்வு தொட­ர­வேண்­டும் என்­பதே என் விருப்­பம்," என்று சொந்­தத்­தொ­ழில் நடத்­தும் அவர் கூறி­னர்.

சிங்­கப்­பூ­ருக்­கும் மலே­சி­யா­வுக்­கும் இடையே 'விடி­எல்' எனப்­படும் தடுப்­பூசி போட்டுக்கொண்­டோ­ருக்­கான பயணப் பாதையில் தரை­வழிப் பய­ணி­க­ளின் அனு­மதி எண்­ணிக்கை இம்மாதம் 22ஆம் தேதி­யி­லி­ருந்து மீண்­டும் பழைய நிலைக்­குத் திரும்­ப­வுள்­ளது. அதன் அறி­விப்பு நேற்று முன்­தி­னம் வெளி­வந்­ததையடுத்து பேருந்துப் பய­ணங்­க­ளுக்­கான முன்­பதி­வு­கள் கிட்­டத்­தட்ட 30 விழுக்­காடு கூடி­யதாக 'இன்­டர்­நே­ஷ­னல் பெர­டைஸ் கனெக்­ஷன்ஸ்' பயண நிறு­வன உரி­மை­யா­ளரான 50 வயது ராஜ் பெரு­மாள் சுப்­பையா, தெரி­வித்­தார்.

கி. ஜனார்த்தனன்

கவின்விழி கதிரொளி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!