தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் புதிய பயிற்சி நிலையம்

தொழில்­நுட்­பக் கல்­விக் கழ­கங்­களில் பயி­லும் ஊட­கத் துறை மாண­வர்­க­ளுக்­காக 2.6 மில்­லியன் வெள்ளி மதிப்­பு­கொண்ட புதிய பயிற்சி நிலை­யம் திறக்­கப்­பட்­டுள்­ளது. 'யூசர் எக்ஸ்­பீ­ரி­யன்ஸ் ஹப்' என்­ற­ழைக்­கப்­படும் இந்­தப் பயிற்சி நிலை­யம் அங் மோ கியோ­வில் உள்ள தொழில்­நுட்­பக் கல்­விக் கழ­க மத்திய கல்லூரியில் அமைந்­துள்­ளது.

தயா­ரிப்­புக் கூடம், தொடர்­புத் திரை­கள், நவீன தொழில்­நுட்ப அம்­சங்­க­ளைக் கொண்ட செயல்­மு­றைக் கூடங்­கள் உள்­ளிட்­டவை இங்­குள்ளன.

'டிஜிட்­டல் அனி­மே­ஷன்' எனப்­படும் மின்­னி­லக்­கக் உயி­ரோ­விய நைட்­டெக் சான்­றி­தழ், 'விஷு­வல் இஃபெக்ஸ்' எனும் விழி சாக­சங்­க­ளுக்­கான உயர் நைட்­டெக் சான்­றி­தழ் உள்­ளிட்ட பாடங்­க­ளுக்­குப் பயிற்­சி­களை இந்­நி­லை­யத்­தில் மேற்­கொள்­ள­லாம். ஊடக தொழில்­நுட்ப மற்­றும் தயா­ரிப்பு நிறு­வ­ன­மான 'சிகேங்ஸ் இன்­டர்­நே­ஷ­னல்' இந்­நி­லை­யத்­தின் தயா­ரிப்­புக் கூடத்தை வடி­வ­மைக்க உத­வி­யது. தயா­ரிப்பு கூடத்­திற்­கான செல­வை­யும் இந்­நி­று­வ­னம் ஏற்­றுக்­கொண்­டது.

'அலி­பாபா கிள­வுட்', 'பிளாக்­மேஜிக் டிசைன் ஏஷியா' உள்­ளிட்ட மேலும் ஏழு நிறு­வ­னங்­கள் இதர செயல்­மு­றை­க­ளுக்கு ஆத­ர­வ­ளிக்­கின்­றன. இணைந்து செயல்­பட இந்த நிறு­வ­னங்­கள் நேற்று இணக்­கக் குறிப்பு ஒன்­றில் கையெ­ழுத்­திட்­டன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!