சூரிய சக்தியை அதிகம் பயன்படுத்த எண்ணம்

சிங்­கப்­பூ­ரில் கரி­ய­மில வாயுவை அதி­கம் வெளி­யேற்­றும் நிறு­வ­னங்­கள் 2024ஆம் ஆண்டு முதல் கூடு­தல் வரி செலுத்­த­வேண்­டியிருக்கும். அதை முன்­னிட்டு கரி­ய­மில வாயு வெளி­யேற்­றத்­தைக் குறைத்­துக்­கொண்டு சூரிய சக்­தியை அதி­கம் பயன்­ப­டுத்த சிங்­கப்­பூ­ரில் இயங்­கும் நிறு­வ­னங்­கள் முயற்­சி­களை எடுத்து வரு­கின்­றன.

இதன் தொடர்­பில் ஆக்­க­பூர்வமான முறை­யில் எரி­சக்­தி­யைப் பயன்­ப­டுத்­து­வ­தற்­கான திட்­டங்­கள், குறைந்த அள­வில் கரியமில வாயு வெளியேற்றம் தொடர்­பி­லான ஆய்வு­கள் போன்­ற­வற்­றில் முத­லீடு செய்ய நிறு­வ­னங்­கள் எண்­ணம் கொண்­டுள்­ளன.

மின்­சார உற்­பத்தி நிறு­வ­ன­மான 'பசி­பிக்­லைட்', இந்­தோ­னீ­சி­யா­வின் பூலான் தீவில் 670 மெகா­வாட்-பீக் மின்­சா­ரத்தை உற்­பத்தி செய்­யக்­கூ­டிய சூரிய சக்தி ஆலை­யைக் கட்டி வரு­வ­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­ஸி­டம் சென்ற வாரம் கூறி­யது. 2025ஆம் ஆண்டு முதல் அந்த ஆலையிலிருந்து சிங்­கப்­பூ­ருக்கு மின்­சா­ரம் அனுப்­பப்­படும்.

அந்த ஆலை­யில் உற்­பத்­தி­யாகும் மின்­சா­ரத்­தைக் கொண்டு ஆண்­டு­தோ­றும் 144,000 நாலறை வீவக வீடு­க­ளுக்கு மின்­சா­ரம் வழங்­க­மு­டி­யும்.

'பசி­பிக்­லைட்' நிறு­வ­னம் 2013ஆம் ஆண்டு இயங்­கத் தொடங்­கி­யது. அப்­போ­தி­ருந்தே கரி­ய­மில வாயு வெளி­யேற்­றத்­தைக் குறைக்­கும் முயற்­சி­களை அதன் ஆலை எடுத்து வந்­துள்­ள­தாக அந்­நி­று­வ­னத்­தின் பேச்­சா­ளர் ஒரு­வர் சொன்­னார்.

'ஷெல்', 'எக்­சோன்­மோ­பில்', 'கெப்­பல்' உள்­ளிட்ட நிறு­வ­னங்­களும் கரி­ய­மில வாயு வெளி­யேற்­றத்­தைக் குறைப்­ப­தற்­கான முயற்­சி­களை எடுத்து வரு­வ­தா­கத் தெரி­வித்­தன.

2050ஆம் ஆண்டு அல்­லது அந்த கால­கட்­டத்­திற்­குள் கரி­ய­மில வாயு வெளி­யேற்­றம் இல்­லா­மல் செய்­வது சிங்­கப்­பூ­ரின் இலக்கு. அதைக் கருத்­தில்­கொண்டு கரி­ம வரி உயர்த்­தப்­ப­டு­வ­தாக நிதி அமைச்­சர் லாரன்ஸ் வோங் சென்ற மாதம் கூறி­யி­ருந்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!