மென்பொருள் பாடத்திட்டம்

சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தில் புதிய ஸ்கில்ஸ்ஃபியூச்சர் பட்டக்கல்வி

சிங்­கப்­பூர் நிர்­வா­கப் பல்­க­லைக்­க­ழ­கம் (எஸ்­எம்யு), வரும் ஆகஸ்ட் மாதத்­தில் இருந்து மென்­பொ­ருள் பொறி­யி­யல் துறை­யில் புதிய வேலை-கல்வி பட்­டக் கல்­விப் பாடத்­திட்­டத்­தைத் தொடங்­க­வி­ருக்­கிறது.

அதில் சேரும் மாண­வர்­கள் நான்கு ஆண்­டு­க­ளுக்கு இள­நி­லைப் பட்­டக் கல்­வி­யைப் பயி­லு­வர்.

சிங்­கப்­பூர் வட்­டா­ரத் தொழில்­நுட்ப நடு­வ­மாக வளர்ச்­சி­கா­ணும் வேளை­யில், தொழில்­நுட்­பத் திற­னா­ளர்­க­ளுக்­கான அதி­க­ரிக்­கும் தேவையை ஈடு­கட்ட அது உத­வும் என்று பல்­க­லைக்­க­ழ­கம் தெரி­வித்­தது.

முதல் ஆண்டு மாண­வர் சேர்க்­கைக்­கான விண்­ணப்­பங்­கள் மார்ச் 19ஆம் தேதி நள்­ளி­ர­வுக்­குள் வந்­து­சேர வேண்­டும் என்று அது கூறி­யது.

இந்த முழு­நே­ரக் கல்­வித் திட்­டத்­தில் 45 மாண­வர்­க­ளுக்கு முதல் ஆண்­டில் சேர வாய்ப்பு அளிக்­கப்­படும்.

சிங்­கப்­பூ­ரில் பணி­யாற்­றும் மென்­பொ­ருள் பொறி­யா­ளர்­க­ளு­டன் நடத்­தப்­பட்ட விரி­வான ஆலோ­ச­னைக்­குப் பிறகு, பாடத்­திட்­டம் வரை­யப்­பட்­டது என்­றும் சந்தை நில­வ­ரத்­துக்­கேற்ப அது தொடர்ந்து மேம்­ப­டுத்­தப்­படும் என்­றும் எஸ்­எம்யு குறிப்­பிட்­டது.

சென்ற மாதம் புதிய கல்­வித் திட்­டம் தொடர்­பில், அர­சாங்­கத் தொழில்­நுட்ப அமைப்­பான 'கவ்­டெக்' உடன் பல்­க­லைக்­க­ழ­கம் அதி­கா­ர­பூர்வ ஒத்­து­ழைப்பை உறு­திப்­ப­டுத்­திக்­கொண்­டது.

பல்­க­லைக்­க­ழ­கத்­தின் கணினி, தக­வல் கட்­ட­மைப்­புப் பள்­ளி­யும் பங்­கா­ளித்­துவ நிறு­வ­னங்­க­ளின் மென்­பொ­ருள் பொறி­யா­ளர்­களும் இணைந்து பாடங்­களை நடத்­து­வர்.

பங்­கா­ளித்­துவ நிறு­வ­னங்­கள் அவற்­றின் மூத்த ஊழி­யர்­களை அதற்கு நிய­ம­னம் செய்­ய­லாம்.

பட்­டக் கல்­வி­யின்­போது, மாண­வர்­க­ளுக்கு தொழில்­மு­றைப் பயிற்­சிக்­கான வாய்ப்­பு­களும் வழங்­கப்­படும். மென்­பொ­ருள் பொறி­யா­ளர்­க­ளின் வழி­காட்­டு­த­லில், மென்­பொ­ருளை உரு­வாக்­கு­வ­தற்­கான பயிற்­சி­களில் அவர்­கள் ஈடு­ப­டுத்­தப்­ப­டு­வர்.

பட்­டக் கல்­வித் திட்­டத்­தின் நிறை­வில், மாண­வர்­கள் முழு­மை­யான மென்­பொ­ருள் உரு­வாக்­கத் திறன்­க­ளு­டன், மென்­பொ­ருளை வடி­வ­மைத்­தல், மேம்­ப­டுத்­தல், சோதித்­தல், நிர்­வ­கித்­தல் ஆகிய திறன்­க­ளை­யும் பெற்­றி­ருப்­பர்.

இணை­யப் பாது­காப்பு, தக­வல் தொழில்­நுட்­பச் செய­லாக்க முறை­கள் போன்­ற­வற்­றி­லும் அவர்­கள் பயிற்சி பெற்­றி­ருப்­பர். மென்­பொ­ருள் ஆய்வு, உரு­வாக்­கம் போன்ற வேலை­க­ளுக்­குப் பொருத்­த­மான திறன்­களை மாண­வர்­கள் பெற்­றி­ருப்­பர்.

அதன் தொடர்­பில் துறை­சார்ந்த இதர பங்­கா­ளி­க­ளு­ட­னும் இணைந்து பணி­யாற்­று­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­வ­தா­கப் பல்­க­லைக்­க­ழ­கம் கூறி­யது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!