அதிகமான பெரியவர்களுக்கு கூடுதல் கற்றல் இடங்கள்

கல்வி அமைச்சு, கல்­வி­யில் அதிக 'வாழ்­நாள் கூட்­டுப் பங்­கேற்பு' விகி­தத்­தின் சாத்­தி­யத்தை ஆய்வு செய்­வ­தால், வாழ்க்­கைத் தொழி­லின் நடுப்­ப­கு­தி­யில் உள்ள சிங்­கப்­பூ­ரர்­கள் மீண்­டும் பள்­ளிக்­குச் சென்று பட்­டம் பெற அதிக வாய்ப்பு­கள் இருக்­கும்.

அர­சாங்க நிதி­யு­தவி பெறும் பட்­டப்­ப­டிப்பு திட்­டங்­களில் வேலை செய்­யும் பெரி­ய­வர்­கள் அதிக அள­வில் இடம்­பெற அனு­ம­திப்­பது குறித்து தமது அமைச்சு பரி­சீ­லித்து வரு­வ­தாக கல்வி அமைச்­சர் சான் சுன் சிங் நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­வித்­தார்.

சிங்­கப்­பூ­ரர்­கள் திறன் பயிற்சி பெறு­வ­தற்கு ஏது­வாக, கல்வி அமைச்சு ஸ்கில்ஸ்­ஃபி­யூச்­சர் வாழ்க்­கைத்­தொ­ழில் உரு­­மாற்­றத் திட்­டத்தை அறி­மு­கம் செய்­யும்.

இந்­தப் புதிய திட்­டம், எஸ்ஜி ஒற்­றுமை திறன்­கள் திட்­டத்­தை­யும் எஸ்ஜி ஒற்­றுமை இயக்­கத்­தின் முதிர்ச்­சி­ய­டைந்­த­வர்­க­ளுக்­கான பணி­யி­டைக்­கால வாழ்க்­கைத்­தொழில் பாதை­கள் நிறு­வன இணைப்­புத் திட்­டத்­தை­யும் ஒன்­றிணைக்­கும்.

கொவிட்-19 தொற்­று­நோ­யால் ஏற்­பட்ட பொரு­ளி­யல் தாக்­கத்­தி­லி­ருந்து சிங்­கப்­பூ­ரர்­கள் விடு­பட உத­வும் பொருட்டு, இது 2020ல் தொடங்­கப்­பட்­டது.

இந்த இரண்டு திட்­டங்­களும் இந்த மாத இறு­தி­யில் முடி­வ­டை­யும். அவற்றை மாற்­றும் புதிய முயற்­சி­யாக, இந்­தப் புதிய திட்­டம் நிரந்­த­ர­மா­ன­தாக இருப்­ப­து­டன், அதிக மானி­யத்­தை­யும் பெறும் என்று திரு சான் கூறி­னார்.

கல்வி, மனி­த­வ­ளம், வர்த்­தக தொழில் அமைச்­சு­கள், 40 வய­து­களி­லும் 50 வய­து­க­ளி­லும் உள்ள சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு கணி­ச­மான மறு­தி­றன் தேவைப்­ப­டக்­கூ­டிய கட்­ட­மைப்பு ஆத­ரவை எவ்­வாறு மேம்­படுத்­து­வது என்­பதை ஆராய்ந்து வரு­கின்­றன.

உள்­ளூர் உயர்­கல்வி நிலை­யங்­களில் வேலை­வாய்ப்­புக்கு முந்­தைய பயிற்சி மற்­றும் தொடர் கல்வி பட்­டப்­ப­டிப்­பு­க­ளுக்கு ஒதுக்­கப்­பட்ட இடங்­க­ளின் விகி­தத்தை கல்வி அமைச்சு ஆய்வு செய்­யும் என்­றார் திரு சான்.

பள்­ளிப் படிப்பை முடித்து வெளி­யே­றும் ஒவ்­வொரு குழுவுக்கும் மானி­யத்­து­டன் கூடிய 40 விழுக்­காட்டு இடங்­க­ளை­யும் பெரி­ய­வர்­களுக்கு 10 விழுக்­காட்டு இடங்­களை­யும் ஒதுக்­கு­வது உள்­ளூர் பல்­கலைக்­க­ழ­கங்­களில் தற்­போது உள்ள இலக்­கா­கும்.

இதைத் தாண்டி மக்­கள் தங்­கள் தேவை­கள், விருப்­பங்­க­ளுக்கு ஏற்ப தொடர்ந்து திறன்­களை மேம்­படுத்­து­வதை உறுதி செய்­வ­தில் நாடு கவ­னம் செலுத்த வேண்­டும் என்று அவர் மேலும் கூறி­னார்.

ஆறு தன்­னாட்­சிப் பல்­க­லைக்­க­ழ­கங்­கள், ஐந்து பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­கள், தொழில்­நுட்­பக் கல்­விக் கழ­கம் ஆகி­ய­வற்றை உள்­ள­டக்­கிய உயர்­கல்வி நிலை­யங்­கள், பெரி­ய­வர்­க­ளைக் கருத்­தில் கொண்டு தங்­கள் திட்­டங்­களை மதிப்­பாய்வு செய்ய வேண்­டும்.

"உயர்­கல்வி நிலை­யங்­கள் மூலம் பயிற்சி பெற்ற பெரி­ய­வர்­க­ளின் எண்­ணிக்கை 2018ல் சுமார் 165,000 ஆக இருந்­தது. 2020ல் அது 345,000 என இரு­ம­டங்­காக அதி­க­ரித்­துள்­ளது. இந்த எண்­ணிக்கை மேலும் அதி­க­ரிக்­கும் என்று எதிர்­பார்க்­க­லாம்," என்­றார் அமைச்­சர் சான்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!