பாலர் பள்ளிகளின் தரத்தை உயர்த்த புதிய திட்டங்கள்

ஆசி­ரி­யர்­க­ளுக்கு நன்கு பயற்­சி­ய­ளித்து அவர்­களை மேம்­ப­டுத்­து­வ­தற்­கான திட்­டங்­க­ளு­டன் ஆரம்­ப­கால பாலர்­ப­ரு­வக் கல்வி மேம்­பாடு காண­வி­ருக்­கிறது. அனு­ப­வ­மு­டைய பாலர் பள்ளி ஆசி­ரி­யர்­கள், தங்­க­ளு­டைய சகாக்­க­ளுக்கு தங்­க­ளது அனு­ப­வங்­க­ளைப் பகிர வகை­செய்­யும் திட்­டம் ஒன்­றும் அவற்­றில் அடங்­கும்.

'ஆரம்­ப­கால பாலர்­ப­ரு­வக் கற்­றல் சமூ­கங்­கள்' என்று அழைக்­கப்­படும் இந்­தத் திட்­டம், அடுத்த மாதம் தொடங்­கப்­படும். பாடத்­திட்டம் வரை­தல், கற்­பித்­தல் முறை­யில் சிறந்த தலை­வர்­க­ளாக பங்­கேற்­பா­ளர்­க­ளுக்கு வழி­காட்­டப்­படும்.

சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு துணை அமைச்­சர் சுன் ஸுவெலிங், தமது அமைச்­சுக்­கான வர­வு­செ­ல­வுத் திட்ட நிதி ஒதுக்­கீட்டு விவா­தத்­தின்­போது நேற்று இத­னைத் தெரி­வித்­தார்.

இந்­தக் 'கற்­றல் சமூ­கங்­கள்' நான்கு அம்­சங்­களில் கவ­னம் செலுத்­தும்.

ஆரம்­ப­கால பாலர்­ப­ருவத் திறன்­கள், வெளிப்­பு­றக் கற்றல், சமு­தாய மற்­றும் உணர்­வு­பூர்வ மேம்­பாடு, மொழி மற்­றும் எழுத்­த­றிவு ஆகி­யன அவை.

ஒவ்­வொரு பங்­கேற்­பா­ள­ரும் ஈராண்­டு­க­ளுக்கு சமூ­கத்­தின் ஒரு பகு­தி­யாக விளங்­கு­வார். முதல் ஆண்­டில் குறைந்­தது 24 மணி நேர­மும் இரண்­டாம் ஆண்­டில் 40 மணி நேர­மும் அவர்­கள் கடப்­பாடு கொண்டிருக்க வேண்­டும்.

எடுத்துக்­காட்­டாக, சமூக கற்றல் நிகழ்வு­க­ளி­லும் ஆரம்­ப­கால பாலர்­பருவ மேம்­பாட்டு வாரி­யத்­தால் வரை­யப்­பட்ட நிபு­ணத்­துவ மேம்­பாட்­டுத் திட்­டங்­க­ளி­லும் அவர்­கள் பங்­கேற்­க­லாம்.

இத்­த­கைய கற்­றல் பகிர்வு அமர்­வு­கள் மூலம் 2024க்குள் 300 கல்­வி­யா­ளர்­கள் வரை பய­ன­டை­வர் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

பங்­கேற்­பா­ளர்­கள் தங்­க­ளது இரண்­டாம் ஆண்­டில் நிபு­ணத்­துவ மேம்­பாட்டு மானி­யம் ஒன்­றைப் பெறு­வர். அவர்­க­ளது முத­லா­ளி­களுக்கு வரு­டாந்­திர மனி­த­வள நிவா­ரண நிதி­யும் வழங்­கப்­படும்.

பாலர் பள்­ளித் துறை­யில் தலை­மைத்­துவ ஆற்­றலை வலுப்­ப­டுத்த திரு­மதி சுன் 'தலை­மைத்­துவ மேம்­பாட்­டுக் கட்­ட­மைப்பு' எனும் திட்­டத்­தை­யும் அறி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!