‘தொடக்கக் கல்லூரியில் தமிழ்மொழி விருப்பப் பாடம் பயின்று பலனடைந்தோம்’

கி. ஜனார்த்­த­னன்

சிங்­கப்­பூ­ரின் இரண்டு தொடக்­கக் கல்­லூ­ரி­களில் வழங்­கப்­படும் தமிழ் மொழி விருப்பப் பாடத்­திட்­டத்­தின் கீழ் (டிஎல்­இபி) முதன்­மு­த­லில் தமிழ் மொழி­யைப் படித்­த­மா­ண­வர்­கள், அண்­மை­யில் தங்­க­ளது மேல்­நி­லைத் தேர்வு முடி­வு­க­ளைப் பெற்­றுக்­கொண்­ட­னர்.

ஆண்­டர்­சன் சிராங்­கூன் தொடக்­கக் கல்லூ­ரி­யின் 16 'டிஎல்­இபி' மாண­வர்­களும் தேசிய தொடக்­கக் கல்­லூ­ரி­யைச் சேர்ந்த 10 'டிஎல்­இபி' மாண­வர்­களும் 'டிஎல்­இபி' திட்டத்­தின்­கீழ் பய­ன­டைந்­துள்­ள­னர்.

இந்­தப் பாடத்­திட்­டம் இந்த இரு கல்­லூ­ரி­களில் மட்­டுமே வழங்­கப்­ப­டு­கிறது. மாண­வர்­கள் தேர்­வுப் பாட­மாக அன்றி, விருப்­பப் பாட­மா­கப் பயி­லும் இந்த ஈராண்டு மொழி விருப்­பப் பாடத் திட்­டம் 1990ல் தொடக்­கக் கல்­லூ­ரி­களில் தொடங்­கப்­பட்­டது. சீனம், மலாய் மொழி­களில் நடத்­தப்­பட்டு வந்த இந்த விருப்­பப் பாடத்­திட்­டம் தற்­போது தமி­ழுக்­கும் நீட்­டிக்­கப்­பட்­டுள்­ளது.

இந்தப் பாடத்திட்டம் மாண­வர்­க­ளி­டையே மொழி, கலா­சார அறிவை வளர்க்­கும் வகையில் அமைந்­துள்­ளது.

சிங்கப்பூரில் முக்கியமாகக் கருதப்படும் இரு­மொ­ழித் திறனை இத்­திட்­டம் ஊக்­கு­விக்­கிறது.

மேல்­நி­லைத் தேர்­வுக்­காக 'எச்2' அல்­லது 'எச்3' எனப்­படும் உயர்­தர நிலை­யில் தமிழ்­மொ­ழி­யைப் பயி­லும் மாண­வர்­கள், தங்­கள் மொழி­ய­றிவை வளர்க்கும் கலா­சார நட­வ­டிக்­கை­க­ளி­லும் ஈடு­ப­ட­வேண்­டும். பல்­வேறு விருப்­பங்­க­ளை­யும் எதிர்­கால இலக்கு­களை­யும் கொண்­டுள்ள இவர்­கள், தங்­கள் வாழ்க்­கைக்கு தமிழ்­மொழி விருப்­பப்­பா­டத் திட்­டம் பேருதவியாக இருந்­த­தாக பகிர்ந்­து­கொண்­ட­னர்.

கலா­சார உணர்வை ஊக்­கு­வித்­தது

மொழி ஆற்­றலை வளர்த்­துக்­கொள்ள வேண்டும் என்ற நோக்­கத்­து­டன் தொடக்­கக் கல்­லூ­ரி­யில் தமிழ்­மொழி விருப்­பப்­பா­டத்­தில் தேசிக தீப்தா சேர்ந்­தார்.

ஆனால், பேச்­சுத் தமிழே அவ­ருக்­குச் சவா­லாக இருந்த கார­ணத்­தால் அவ­ரின் முடிவு குறித்­துக் குடும்ப உறுப்­பி­னர்­கள் சிலர் வியப்­படைந்­த­தாக அவர் குறிப்­பிட்­டார்.

இருப்­பி­னும் வெறும் ஏட்­டுக்­கல்வி சார்ந்த நட­வடிக்­கை­கள் மட்­டு­மின்றி பல்­வேறு திறன்­கள் மூலம் மொழியை ஆழ­மாக மாண­வர்­கள் புரிந்­து­கொள்ள முடிந்­த­தாக அவர் கூறி­னார்.

வில்­லுப்­பாட்டு, கதா­கா­லட்­சே­பம் போன்ற கலா­சா­ரம் சார்ந்த நட­வடிக்­கை­களில் ஈடு­ப­டும்­போது தமது எண்­ணங்­களை அவற்­றின் மூலம் வெளிப்­ப­டுத்த வாய்ப்பு கிடைத்­த­தாக அவர் கூறினார்.

இந்­ந­ட­வ­டிக்­கை­க­ளுக்­குத் தலைமைப் பொறுப்­பேற்று வழி­நடத்­தி­யதை அவர் சற்­றும் எதிர்­பார்க்­க­வில்லை.

தமிழ்­மொழி விருப்­பப் பாடத்­திட்­டத்­தில் அவரைக் கவர்ந்த அம்­சம் கவி­தை­கள்.

'கழி­வ­றைக் குழந்­தை­கள்' என்ற கவி­தை­யின் தலைப்பே தன்னை ஈர்த்­த­தா­க­வும் அதில் தாய்­மை பற்றிய கருத்­து­கள் தன்­னைப் பெரி­தும் சிந்­திக்க வைத்­த­தா­க­வும் தீப்தா குறிப்பிட்டார்.

தமிழ்த் துறை­யில் பணி­யாற்­றும்

ஆர்­வத்­தைத் தூண்­டி­யது

மொழித்­தி­ற­னை­யும் வாழ்க்­கைத் திற­னை­யும் மேம்­ப­டுத்த தமிழ்­மொழி விருப்­பப்­பா­டம் தனக்கு ஏரா­ள­மான வாய்ப்­பு­களை வழங்­கி­ய­தாக ஸ்ரு­திகா குமார் தெரி­வித்தார்.

கிரு­மிப்­ப­ர­வல் சூழ­லால் பல்வேறு நட­வ­டிக்­கை­கள் மின்­னி­லக்­கத் தளத்­தின் மூலம் நடத்­தப்­பட்­டா­லும் அறி­வுக்கு விருந்­தாக அவை அமைந்­த­தாக தமி­ழில் 'எச்2' பாடத்­தில் தேர்ச்சி பெற்ற ஸ்ரு­திகா கூறினார்.

நாவல்­களை நுட்­ப­மாக ஆராய்­வதில் இருந்த கடி­னத்­தன்மை, ஆசி­ரி­ய­ரின் கற்­பித்­தல் முறை­யால் எளி­தா­கி­ய­தாக அவர் குறிப்­பிட்­டார்.

தற்­போது தேசிய தொடக்­கக்­கல்­லூ­ரி­யில் தற்­கா­லிக தமிழ் ஆசி­ரி­ய­ரா­கப் பணி­பு­ரி­யும் ஸ்ரு­திகா, தமிழ்­மொழி சார்ந்த வேலை­யி­லேயே சேர விரும்­பு­கி­றார்.

தமிழ்­மொழி சார்ந்த துறை­யில் பணி­யாற்ற விரும்­பும் மற்­றொரு மாண­வியான ரெத்­தி­னம் ரெபேக்கா, இப்­பா­டத்­திட்­டத்­தின் மூலம் மனித உணர்­வு­க­ளின் மேன்­மையை உணர்ந்­த­தாகக் கூறி­னார்.

"நறு­மு­கையே என்ற பாட­லில் யாயும் ஞாயும் என்ற சங்­கப்­பா­டல் வரி­கள் இடம்­பெ­று­கின்­றன. இதுபோன்ற திரை இசைப்­பா­டல்­களை ஆராய்ந்­த­போது அன்பு என்­பதன் பொருள், அதன் ஆழம் ஆகி­ய­வற்றை நான் அறிந்­தேன். எண்­ணத்­தில் முதிர்ச்சி தரும் வகை­யில் இது அமைந்­தது," என்று அவர் கூறி­னார்.

தமிழ்­ மொழிப் பற்றை வளர்த்­தது

நண்­பர்­களைப் பின்பற்றி சிவ­சண்­முக பிரியா இத்­திட்­டத்­தில் சேர்ந்­தார். ஆனால், தமிழ்­மொழி ஆர்­வலர்­க­ளு­டன் இணை­யும் வாய்ப்பை இப்­பா­டத்­திட்­டம் பெற்­றுத் தந்­ததை அவர் நாள­டை­வில் உணர்ந்­தார்.

இந்த ஆர்­வ­லர்­கள், தங்­க­ளுக்­குத் தெரிந்­ததை முன்­வந்து பகிர்ந்து­கொண்­ட­தைத் கண்டு வியந்­த­தாகக் கூறிய பிரியா, இத­னால் தனது சிந்­தனை ஆற்­ற­லும் வளர்ந்தது என்றார்.

சிங்­கப்­பூ­ரில் சிறு­பான்­மையினர் தனித்தன்மை பெற்று விளங்­கு­வதற்கு தமிழ்­மொழி ஆற்­றல் கைகொடுக்­கிறது என்­றார் பிரியா.

கலா­சார நட­வ­டிக்­கை­யின் படைப்­பா­ளர் வாய்ப்­பைப் பெற்ற பிரியா, வருங்­கா­லத்­தில் ஊட­கத்­து­றை­யில் பணி­யாற்ற விரும்­புகிறார்.

இயந்­தி­ர­வி­ய­லில் நாட்­டம் கொண்­டுள்ள பால­மு­ரு­கன் விஷ்வாவுக்கு கற்­பனை ஆற்­றலை வளர்த்துக்கொள்ள தமிழ்­ மொழி கைகொ­டுத்­துள்ளது.

"மற்ற துறை­களில் பொது­வாக ஒரு கேள்­விக்கு ஒரு பதில்­தான் இருக்­கும், ஆனால் தமிழ்­ மொழி எனும்­போது ஒரு கேள்­விக்­குப் பல பதில்­கள் இருக்­கக்­கூ­டும்," என்று அவர் பகிர்ந்­தார்.

சமூ­க சிந்­த­னையை ஏற்படுத்தியது

தமிழ்­மொ­ழியை ஆராய்­வ­தில் உள்ள பன்­மு­கத்­தன்­மையை இத்­திட்­டத்­தின் மூலம் தான் அறிந்­து­கொண்­ட­தாக தேசிய தொடக்­கக் கல்­லூ­ரி­யைச் சேர்ந்த சக்­தி­வேல் மோஹிதா தெரி­வித்­தார்.

"சங்­கத்­த­மிழ் பாடல்­களை வகுப்­ப­றை­களில் ஆராய்­வது முதல் குறும்­ப­டங்­க­ளிள் வழி தற்­கால விவ­கா­ரங்­களை ஆழ­மா­கத் தெரிந்து­கொள்­வதுவரை பல்­வேறு வழி­களில் இலக்­கி­யங்­களை ஆராய்ந்­தோம்," என்று கணினி, தொழில்­நுட்­பத் துறை­யில் எதிர்­காலத்­தில் பணி­யாற்ற விரும்­பும் மோஹிதா கூறி­னார்.

இலக்­கிய நூல்­க­ளின் மூல­மா­க­வும் கலா­சார நட­வ­டிக்­கை­கள் வழி யா­க­வும் சமூக விவ­கா­ரங்­க­ளைப் பற்றி ஆழ­மா­கப் புரிந்­து­கொண்­ட­தில் தான் மன­நி­றைவு அடை­வ­தாக மருத்­து­வ­ராக விரும்­பும் கணே­சா­நந்­தன் யாழினி கூறி­னார்.

பல்­வேறு விவ­கா­ரங்­கள் குறித்த தங்­க­ளது கருத்­து­க­ளைப் படைத்து வெளிப்­ப­டுத்­தும் வாய்ப்பை இத்திட்­டத்­தின்­மூ­லம் தான் பெற்­ற­தாக திரு­நா­வுக்­க­ரசு ஹர்­ஷினி கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!