சிங்கப்பூரில் உலக மரபணு குறைபாடு தினம்

சிங்­கப்­பூ­ரில் மர­பணு குறை­பாடு தினம் நேற்று கடைப்­பி­டிக்­கப்­பட்டது. அந்த நிகழ்ச்சி இரண்­டாவது முறை­யாக இந்த ஆண்­டும் நேர­டி­யா­க­வும் இணை­யம் மூல­மாகவும் நடந்­தது.

ஃபேஸ்புக் மூலம் நேர­டி­யாக ஒளி­ப­ரப்­பப்­பட்ட ஒரு நிகழ்ச்­சி­யில் சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்­சர் மச­கோஸ் ஸுல்­கி­ஃப்லி கலந்­து­கொண்­டார்.

இந்த நிகழ்ச்­சியை தொழில்­நுட்பக் கல்­விக் கழ­க மாண­வி­யான குமாரி கிரேஸ் கான் இணைந்து நடத்­தி­னார். சிங்­கப்­பூர் எல்­லா­ரை­யும் உள்­ள­டக்­கிய, பரி­வு­மிக்க சமு­தா­யத்­தைப் பலப்­ப­டுத்த முயல்­வதாக அந்த நிகழ்ச்­சி­யில் பேசிய அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

"உடற்­குறை உள்­ள­வர்­கள் அனை­வ­ரும் அன்­றாட வாழ்­வில் அனைத்துத் துறை­க­ளி­லும் பொருள்­பொ­திந்த முறை­களில் ஈடு­பட்டு மகிழ வேண்­டும் என்று விரும்பு ­கி­றோம்," என்­றார் அமைச்­சர்.

எல்­லா­ரை­யும் உள்­ள­டக்­கிய சமூ­கத்தை உரு­வாக்­கு­வ­தில் ஒவ்­வொரு­வ­ருக்­கும் பங்கு உண்டு என்று அமைச்­சர் வலி­யு­றுத்­தி­னார்.

அந்த நிகழ்ச்­சி­யை­யொட்டி 'ராக் யுவர் சாக்ஸ்' என்ற ஓர் இயக்­கமும் இடம்­பெற்­றது. மர­பணு குறை­பாடு பற்­றிய புரிந்­து­ணர்வை மேம்­ப­டுத்து­வது அந்த இயக்­கத்­தின் நோக்­கம்.

அந்த இயக்­கத்­தில் பங்­கெ­டுப்­பவர்­கள், பொருத்­த­மில்­லாத பல வண்­ணங்­க­ளி­லான கால் உறை­களை அணிந்­து­கொள்­வார்­கள்.

இது மர­பணு குறை­பாட்டை எடுத்­துக்­காட்­டு­வ­தாக இருக்­கும்.

இந்த உறை­களை மர­பணு குறை­பாட்­டுச் சங்­கம் $20 வெள்­ளிக்கு விற்­கிறது.

இதன் மூலம் கிடைக்­கும் தொகை, இந்­தச் சங்­கம் செயல்­படுத்­தும் மூன்று செயல்திட்டங்­களுக்கு ஆத­ரவு அளிக்­கிறது.

உலக மர­பணு குறை­பாடு தினம் ஒவ்­வோர் ஆண்­டும் மார்ச் 21ஆம் தேதி கடைப்­பி­டிக்­கப்­ப­டு­கிறது.

மனித உட­லில் ஒவ்­வோர் உயிரணு­வி­லும் 23 ஜோடி மர­ப­ணுக்­கள் இருக்­கும். 21வது ஜோடி­யில் இரண்டு குரோ­மோ­சோம்­க­ளுக்கு மேலாக மேலும் ஒரு குரோ­மோ­சோம் சேர்ந்­து­வி­டு­வ­துண்டு. இதனால் மர­பணு குறை­பாடு ஏற்­படு­கிறது.

இத்­த­கைய குறை­பாடு உள்­ள­வர்­க­ளுக்குப் பல வித­மான உடல், மன நலி­வும் தோற்­றத்­தில் பல வேறு­பா­டு­களும் இருக்­கும்.

சிங்­கப்­பூ­ரில் இத்­த­கைய குறை­பா­டு­டன் கூடிய பல­ரை­யும் உள்­ள­டக்­கிய நட­னக் குழு ஒன்று இருக்­கிறது. 'பல திறன் நட­னக்­குழு' என்று குறிப்­பி­டப்­படும் அந்­தக் குழு­வில் திரு­வாட்டி ஜுன் லின், 37, என்ற நட­னப் பிரி­ய­ரும் இருக்­கிறார்.

இவர் நேற்று உலக மர­பணு குறை­பாடு தினத்­தைக் குறிக்­கும் வகை­யில் நடந்த ஒரு நிகழ்ச்­சி­யில் பேசி­னார்.

மர­பணு குறை­பாடு இருந்­தா­லும் மற்­ற­வர்­க­ளைப் போலவே அனைத்­திலும் வெகு­சி­றப்­பாக ஈடு­பட்டு வழக்­க­மான வாழ்வை மேற்­கொள்ள முடி­யும் என்று இவர் தெரி­வித்தார்.

திரு­வாட்டி லின் மர­பணு குறை­பாட்­டுச் சங்­கம் விற்­பனை செய்­யும் காலு­றை­களை வடி­வ­மைத்து உதவி இருக்­கி­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!