புக்கிட் மேராவில் கற்றல் குறைபாடுள்ள மாணவர்களுக்கு புதிய நிலையம்

'டிஸ்­லெக்­சியா' எனப்­படும் கற்­றல் குறை­பாடு உள்ள மாண­வர்­க­ளுக்கு உத­வும் புதிய நிலை­யம் புக்­கிட் மேரா வட்­டா­ரத்­தின் ஹெண்­டர்­சன் பகு­தி­யில் திறக்­கப்­பட்­டுள்­ளது. புக்­கிட் மேரா வட்­டா­ரத்­தில் தொடக்­க­நிலை, உயர்­நி­லைப் பள்ளி மாண­வர்­க­ளி­டையே அதி­க­ரித்­து­வ­ரும் தேவை­யைச் சமா­ளிக்க புதிய நிலை­யம் கைகொ­டுக்­கும்.

முன்­னர் குவீன்ஸ்­ட­வுன் தொடக்­கப் பள்­ளி­யில் 180 மாண­வர்­க­ளுக்­குச் சேவை வழங்­கிய நிலை­யத்­துக்கு பதில் புதி­தா­கத் திறக்­கப்­பட்­டுள்ள இந்த நிலை­யம் 300 மாண­வர்­க­ளுக்­குச் சேவை வழங்­கும். சிங்­கப்­பூர் 'டிஸ்­லெக்­சியா' சங்­கத்­தின் ('டிஏ­எஸ்') புதிய ஹெண்­டர்­சன் கற்­றல் நிலை­யம் வச­தி­கு­றைந்த குடும்­பங்­க­ளைச் சேர்ந்த மாண­வர்­க­ளுக்­குக் கல்வி உதவி நிதி­யும் வழங்­க­வி­ருக்­கிறது.

பழைய நிலை­யத்­தில் 53 விழுக்­காட்­டுக்­கும் அதி­க­மான மாண­வர்­க­ளுக்கு நிதி­யு­தவி தேவைப்­பட்­டது. குறைந்த வரு­மா­னக் குடும்ப மாண­வர்­க­ளுக்­குக் கல்வி உதவி நிதி வழங்­கு­வ­தற்­காக, ஆண்­டு­தோ­றும் இரண்டு மில்­லி­யன் வெள்­ளிக்­கும் அதி­க­மான நிதி திரட்­டப்­பட்­ட­தாக 'டிஏ­எஸ்' தெரி­வித்­தது.

கற்­றல் குறை­பாடு உள்ள மாண­வர்­க­ளுக்­கான புதிய நிலை­யத்தை அதி­பர் ஹலிமா யாக்­கோப் நேற்று அதி­கா­ர­பூர்­வ­மா­கத் திறந்­து­வைத்­தார். 'டிஏ­எஸ்' ஜூரோங் பாயிண்ட் கற்­றல் நிலை­யத்­தின் முன்­னாள் மாண­வர் நூ சியஸ்­வான் முக­மது ஸுல்­கர்­னைன் வரைந்த ஓவி­யத்­திற்கு நிறை­வாக அதி­பர் மெரு­கூட்­டி­னார். இந்த ஓவி­யம் ஏலத்­துக்கு விடப்­பட்டு அதன்­மூ­லம் கிடைக்­கும் தொகை 'டிஏ­எஸ்'க்கு வழங்­கப்­படும்.

தொடக்­க­நிலை மூன்­றாம் ஆண்­டில் படித்­த­போது மாண­வர் சியஸ்­வான் கற்­றல் நிலை­யத்­தில் சேர்ந்­தார். எளி­தான செயல்­க­ளை­யும் தன்னுடன் ப­டிக்­கும் மாண­வர்களைப் போல செய்­யா­மல் எரிச்­ச­லடையும் அவ­ருக்கு, நிலை­யம் மிக­வும் பொறு­மை­யாக எல்­லா­வற்­றை­யும் கற்­றுக்­கொ­டுத்­த­தாக அவர் பகிர்ந்­து­கொண்­டார். சென்ற ஆண்டு உயர்­நி­லைப் பள்­ளிப் படிப்பை முடித்த அவர், ஏப்­ர­லில் சிங்­கப்­பூர் பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யில் சேர­விருக்கிறார்.

ஹெண்­டர்­சன் கற்­றல் நிலை­யத்­தைக் கட்­டு­வ­தற்கு லீ அற­நிறுவனம் ஐம்­ப­தா­யி­ரம் வெள்ளி நன்­கொடை வழங்­கி­யது. திறப்­பு­விழா நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்ட தஞ்­சோங் பகார் குழுத்­தொ­குதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஜோன் பெரேரா, "கற்­றல் குறை­பாடு உள்­ளிட்ட ஆத­ரவு தேவைப்­படும் பிள்­ளை­க­ளின் ஆற்­றலை வெளிக்­கொ­ண­ரப் புதிய நிலை­யம் உத­வும்," என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!