மூன்றே நாள்களில் 176,000க்கும் மேற்பட்டோர் பயணம்

சிங்­கப்­பூர்-மலே­சியா நில­வழி எல்­லை­கள் அண்­மை­யில் திறக்­கப்­பட்­டதை அடுத்து 176,000க்கும் மேற்­பட்­டோர் அவ்­வ­ழி­யா­கப் பய­ணம் மேற்­கொண்­டுள்­ள­னர். கடந்த வெள்­ளிக்­கி­ழ­மையி­லி­ருந்து

ஞாயிற்­றுக்­கி­ழமை மாலை வரை மலே­சி­யா­வி­லி­ருந்து 56,000 பேர் சிங்­கப்­பூர் வந்­த­னர்.

சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து 120,000க்கும் மேற்­பட்­டோர் மலே­சி­யா­வுக்­குள் நுழைந்­த­னர்.

இந்­தத் தக­வலை குடி­நு­ழைவு, சோத­னைச்­சா­வடி ஆணை­யம் நேற்று வெளி­யிட்­டது.

இரு­நா­டு­க­ளுக்­கி­டை­யி­லான நில­வழி எல்­லை­கள் முழு­மை­யா­கத் திறக்­கப்­பட்­டதை அடுத்து தனி­யார் வாக­னங்­க­ளுக்­கும் பேருந்­துச் சேவை­க­ளுக்­கும் அனு­மதி வழங்­கப்­பட்­டது.

கடந்த வார­யி­று­தி­யில் பெரும்­பா­லான நேரத்­தில் எல்­லை­யோர சாலை­களில் போக்­கு­வ­ரத்து சீராக இருந்­தது.

அடுத்து வரும் நாள்­களில் மேலும் பலர் இரு­நா­டு­க­ளுக்கிடை

யி­லான நில­வ­ழிச் சாலை­கள் மூலம் பய­ணம் செய்­வர் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

போக்­கு­வ­ரத்து நில­வ­ரம், நிலைமை எவ்­வாறு கையா­ளப்­ப­டு­கிறது, பய­ணம் செய்­வோ­ரின் அனு­ப­வங்­கள் ஆகி­ய­வற்­றைப் பற்றி தெரிந்­து­கொண்டு பய­ணம் செய்ய பலர் காத்­துக்­கொண்­டி­ருப்­ப­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளி­தழ் தெரி­வித்­தது.

கடந்த ஞாயிற்­றுக்­கி­ழ­மை­யன்று தமது மனைவி இரு பதின்­ம­வ­யது பிள்­ளை­கள் ஆகி­யோரை அழைத்­துக்­கொண்டு காரில் சென்­றார் 48 வயது திரு ஐவன் ராஜு.

"மைசெ­ஜா­தரா செய­லி­யில் இருக்­கும் பய­ணப் படி­வத்­தைப் நாங்­கள் பூர்த்தி செய்­தோமா என்­பதை மலே­சிய சுங்­கத்­துறை அதி­காரி சரி­பார்த்­தார். அது­தான் ஒரே ஒரு வித்­தி­யா­சம்.

"மற்­ற­படி இரண்­டறை ஆண்­டு­க­ளுக்கு முன்பு இருந்த அதே நடை­மு­றை­கள் தற்­போ­தும் நடப்­பில் உள்­ளன," என்று வர்த்­தக மேலா­ள­ரான திரு ஐவன் ராஜு தெரி­வித்­தார். மலே­சி­யா­வுக்­குள் நுழை­யும் வெளி­நாட்­ட­வர்­கள் மைசெ­ஜா­தரா செய­லி­யில் உள்ள பய­ணப் படி­வத்­தைப் பூர்த்தி செய்ய வேண்­டும்.

ஜோகூர் பாரு­வி­லி­ருந்து உட்­லண்ட்ஸ் சோத­னைச்­சா­வடி வழி­யாக திரு ராஜு­வும் அவ­ரது குடும்­பத்­தி­ன­ரும் சிங்­கப்­பூர் திரும்­பி­ய­போது எஸ்ஜி வரவு அட்­டை­யைப் பூர்த்தி செய்ய மறந்­த­னர். உடல்­ந­லத்­து­டன் இருப்­ப­தாக உறுதி செய்ய இணை­யம் வழி சுகா­தா­ரப் படி­வத்­தில் அவர்­கள் அந்த செய­லி­யின் மூலம் தெரி­விக்க வேண்­டும். இது முன்பு நடை­மு­றை­யில் இருந்த வெள்ளை அட்டை ஆகும்.

அதை திரு ராஜு­வும் அவ­ரது குடும்­பத்­தி­ன­ரும் பூர்த்தி செய்ய மறந்­த­தால் அவர்­கள் தனி அறைக்­குக் கொண்டு செல்­லப்­பட்­ட­னர்.

அங்கு அவர்­கள் அப்­ப­டி­வத்­தைப் பூர்த்தி செய்த பிறகு சிங்­கப்­பூ­ருக்­குள் நுழைய அனு­ம­திக்­கப்­பட்­ட­னர்.

"படி­வத்­தைப் பூர்த்தி செய்­யும் செய்­முறை மிக­வும் எளி­தாக இருந்­தது. செய­லி­யைப் பதி­வி­றக்­கம் செய்ய அதி­காரி எங்­க­ளுக்கு உத­வி­னார். கிட்­டத்­தட்ட அரை­மணி நேரத்­தில் படி­வத்­தைப் பூர்த்தி செய்து சமர்ப்­பித்­தோம்.

இப்­போது பயண நடை­மு­றைப் பற்றி நன்கு தெரிந்­து­கொண்­டேன். எனது குடும்­பத்­தா­ரு­டன் கோலா­லம்­பூர் வரை காரில் செல்ல திட்­ட­மிட்டு வரு­கி­றேன்," என்று திரு ராஜு தெரி­வித்­தார்.

வெளி­நாட்டு வாக­னங்­கள் இம்­மா­தம் 7ஆம் தேதி வரை சாலைக் கட்­ட­ணம் செலுத்த தேவை­யில்லை என்று மலே­சியா அறி­வித்­துள்­ளது. டச் ஆண்ட் கோ அட்டை மூலம் செலுத்த வேண்­டிய கட்­ட­ணத்­தை­யும் மலே­சியா தற்­கா­லி­க­மாக நிறுத்­தி­வைத்­துள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!