பூன் லே தாக்குதல்: சம்பவ இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேகப் பேர்வழிகள்

பூன் லே டிரை­வில் புதன்­கி­ழமை பிற்­ப­கல் (ஏப்­ரல் 6) நிகழ்ந்த ஆயு­தம் ஏந்­திய தாக்­கு­த­லில் சம்­பந்­தப்­பட்­ட­தாக நம்­பப்­படும் ஆட­வர்­கள் இரு­வர் நேற்று சம்­ப­வம் நடை­பெற்ற இடத்­துக்கு காவல்­துறை அதி­கா­ரி­க­ளால் அழைத்­துச்­செல்­லப்­பட்­ட­னர்.

திரு­மண ஊர்­வ­லத்­தில் கலந்­து­கொண்ட 22, 23 வய­து­டைய இரு ஆட­வர்­க­ளைத் தாக்­கி­விட்டு அந்­தச் சந்­தேக நபர்­கள் தப்­பி­யோ­டி­ய­தாகக் கூறப்­ப­டு­கிறது. அதி­காரி­க­ளின் தேடு­தல் வேட்­டைக்­குப் பிறகு அவ்­வி­ரு­வ­ரும் நேற்று முன்­தி­னம் பிற்­ப­கல் உட்­லண்ட்ஸ் ஸ்தி­ரீட் 12ல் கைது செய்­யப்­பட்­ட­னர்.

தாக்­கப்­பட்ட அவ்­விரு ஆட­வர்­களும் திரு இமா­னு­வல் ரவி, 26, என்­ப­வ­ரின் நெருங்­கிய நண்­பர்­கள். திரு ரவி­யின் வீட்­டிற்கு அருகே இந்­தத் தாக்­கு­தல் அரங்­கே­றி­ய­தால் அன்­றைய தினம் அவ­ரது திரு­மண நிகழ்­வு­க­ளுக்கு இடை­யூறு ஏற்­பட்­டது.

நேற்று மாலை 4.15 மணி­ய­ள­வில், புளோக் 177 பூன் லே டிரை­வில் உள்ள கார் நிறுத்­து­மி­டத்­துக்கு அந்­தச் சந்­தேக ஆட­வர்­க­ளு­டன் காவல்­து­றை­யி­னர் வந்­த­டைந்­த­னர்.

சம்­பவ இடத்­தைப் பார்­வை­யிட அவ்­வி­ரு­வ­ரும் காவல்­துறை வாக­னத்­தை­விட்டு தனித்­த­னி­யாக அழைத்­துச்­செல்­லப்­பட்­ட­னர். அவர்­க­ளின் கைகளும் கால்­களும் வார்­க­ளால் கட்­டப்­பட்­டி­ருந்­தன. ஐந்து காவல்­துறை விசா­ரணை அதி­காரி களு­டன் அந்­தப் பகு­தி­யைச் சுற்றி அந்த ஆட­வர்­கள் நடந்து சென்­ற­னர்.

அவ்­வி­ரு­வ­ரும் வெள்ளை சட்டை, நீல காற்­சட்டை, செருப்பு அணிந்­தி­ருந்­த­னர். கை, கால், கழுத்­தில் அவர்­கள் பச்சை குத்­தி­யி­ருந்­த­னர்.

கார்­நி­றுத்­தி­டத்­தில் 72வது தடத்­தில் காணப்­பட்ட ரத்­தக்­க­றை­யைக் காட்டி காவல்­துறை புல­னாய்வு அதி­கா­ரி­கள் ஆட­வர்­க­ளி­டம் விசா­ரணை நடத்­தி­னர்.

சம்­பவ இடத்­தில் விசா­ரணை நடத்­தப்­பட்ட பிறகு காவல்­துறை வெளி­யிட்ட அறிக்­கை­யில், பொது நோக்­கத்­து­டன் ஆபத்­தான ஆயு­தங்­க­ளால் வேண்டுமென்றே கடு­மை­யான காயத்தை ஏற்­ப­டுத்­தி­ய­தாக அந்த இரு­வர் மீதும் இன்று நீதி­மன்­றத்­தில் குற்­றம் சாட்­டப்­படும் என்று குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது. குற்­றம் நிரூ­பிக்­கப்­பட்­டால், அவர்­க­ளுக்கு ஆயுள் தண்­டனையோ அல்­லது அப­ரா­த­மும், பிரம்­ப­டி­யும் விதிக்­கப்­ப­ட­லாம்.

கடந்த புதன்­கி­ழமை மாலை 5 மணி­ய­ள­வில், பூன் லே டிரைவ் புளோக் 175ல் நடந்த சம்­ப­வம் பற்றி காவல்­து­றைக்கு பல தொலை­பேசி அழைப்­பு­கள் வந்­தன. "சம்­ப­வத்­தில் தாக்­கப்­பட்ட இரு­வ­ரின் தலை­க­ளி­லும் கால், கைக­ளி­லும் பல கத்தி வெட்­டுக் காயங்­கள் ஏற்­பட்­டன என்று ஆரம்ப கட்ட விசா­ரணை மூலம் தெரிய வந்­துள்ளது," என்று குறிப்­பிட்ட காவல்­துறை அவர்­கள் இரு­வ­ரும் சுய­நினை­வு­டன் மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு செல்­லப்­பட்­ட­னர் என்­றது.

தாக்­கு­தல் நடத்­திய ஆட­வர்­கள், காவல்­து­றை­யி­னர் சம்­பவ இடத்­துக்கு வரு­வ­தற்கு முன், இரு­வர் அந்த இடத்­தி­லி­ருந்து தப்­பித்து, பின்­னர் தாக்­கு­த­லில் பயன்­ப­டுத்­தப்­பட்ட ஆயு­தங்­களை வீசி எறிந்து ­விட்­ட­னர் என்­றும் கூறப்­பட்­டது.

ஸ்ட்­ரெ­யிட்ஸ் டைம்­சி­டம் நேற்று பேசிய மணப்­பெண் யுரோ­ஷினி ஜோச­ஃபின், 25, "நானும் திரு இமா­னு­வ­லும் எங்­கள் திரு­ம­ணத்­துக்­கான ஏற்­பா­டு­க­ளைச் செய்­து­கொண்­டி­ருந்­த­போது, தனது நண்­பர்­கள் இரு­வர் தாக்­கப்­பட்ட தக­வலை எனது கண­வர் என்­னி­டம் கூறி­னார். நான் பதற்­றத்­து­டன் வீட்­டி­லி­ருந்து கிளம்பி, கீழே சென்று விட்­டேன்," என்­றார்.

தாக்­கு­த­லுக்கு ஆளான திரு பிர­வீன் ராஜும் திரு சரண்­கு­மா­ரும் தனது நண்­பர்­கள் என்­றும் அவர்­கள் அடிக்­கடி தனது வீட்­டுக்கு வரு­வார்­கள் என்­றும் திரு இமா­னு­வல் தெரி­வித்­தார். தாக்­கு­தலுக்கு ஆளான இருவரும் தனது 'மகன்கள்' போன்றவர்கள் என்றார் இமா­னு­வ­லின் தாயாரான 50 வயது திருமதி மான்விழி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!