கட்டுடல்

அடிப்­படை ராணு­வப் பயிற்­சி­யின்­போது ‘எச்­ஐ­ஐடி’ வகை உடற்­பயிற்சி­யில் 18 வயது கவின் குமார் வேலு ஈடு­பட்­டார்.

இருப்­பி­னும், அவ­ருக்கு உயர்­நி­லைப் பள்­ளி­யி­லேயே இந்த உடற்­ப­யிற்சி அறி­மு­கப்­படுத்­தப்­பட்­ட­தாக பகிர்ந்­து­கொண்­டார்.

‘எச்­ஐ­ஐடி’ என்­பது ஒரு­வர் இடை­வெ­ளி­கள் விட்டு விட்டு மேற்­கொள்­ளும் ஒருவகையான தீவிர உடற்­ப­யிற்­சி­யா­கும்.

இதைத் தன் உயர்­நி­லைப்­பள்ளி நண்­பர் வழி­யாக அறிந்­து­கொண்­டார் தற்­போது முழு­நேர தேசிய சேவை­யா­ள­ராக இருக்­கும் கவின்.

கடந்த மூன்று ஆண்­டு­க­ளாக இந்­தப் பயிற்­சி­யில் ஈடு­பட்டு வரு­கி­றார் அவர். மெது­வோட்­டம் போன்ற இதர ‘கார்­டியோ’ வகை உடற்­ப­யிற்­சி­களை­விட ‘எச்­ஐ­ஐடி’ வகை உடற்­பயிற்­சியை விரை­வா­கச் செய்து முடித்­து­வி­ட­லாம் என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

ரத்த அழுத்­தத்­தை­யும் இத­யத் துடிப்­பை­யும் இந்த உடற்­ப­யிற்சி கட்­டுப்­ப­டுத்த உத­வு­கிறது.

‘எச்­ஐ­ஐடி’வழி ஒரு நிமி­டத்­தில் ஒரு­வ­ரது உடல் உள்­ளி­ழுக்­கும் பிரா­ண­வாயு அளவு அதி­க­மாகிறது. இருப்­பி­னும், உட­லைச் சற்று வருத்­தும் ‘எச்­ஐ­ஐடி’ உடற்­பயிற்­சியைச் சரி­யான முறை­யில் மேற்­கொள்­வது அவ­சி­ய­மா­கும்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!