பறவைகள் கட்டடங்களில் மோதாமல் தவிர்க்க புதிய வழிகாட்டி குறிப்புகள்

புலம்­பெ­யர்ந்து வரும் பற­வை­கள் இர­வில் விண்­மீன்­களை அடிப்­ப­டை­யா­கக்­கொண்டே அவற்­றின் பய­ணத் தடங்­களை அமைத்­துக்­கொள்­வது வழக்­கம். ஆனால் நகர்ப்­பு­றங்­களில் செயற்­கை­யாக ஒளி­யூட்­டப்­பட்ட கட்­ட­டங்­க­ளின் மாறு­பட்ட ஒளி­யால் குழப்­ப­ம­டை­யும் இந்­தப் பற­வை­கள் அவற்­றில் பரி­தா­ப­மாக மோதிக்­கொள்­கின்­றன.

2017ல் சிங்­கப்­பூ­ரில் நடத்­தப்­பட்ட ஆய்­வில், 1998க்கும் 2016க்கும் இடைப்­பட்ட காலத்­தில் 237 புலம்­பெ­யர்ந்த பற­வை­கள் இவ்­வாறு மோதிக்­கொண்­டது கண்­ட­றி­யப்­பட்­டது. அவற்­றில் 157 பற­வை­கள் உயி­ரி­ழந்­து­விட்­டன.

இத்­த­கைய அசம்­பா­வி­தத்­தைத் தவிர்க்க தேசி­யப் பூங்­காக் கழ­கம் புதிய வழி­காட்­டிக் குறிப்­பு­களை வெளி­யிட்­டுள்­ளது.

கட்­டட முகப்பு அமைப்­பு­கள், உள்­ள­ரங்­கப் பகு­தி­கள் தொடர்­பான நட­வ­டிக்­கை­கள் ஆகி­ய­வற்­று­டன் கண்­கா­ணிப்­புத் திட்­டத்தை உரு­வாக்­கு­வது என மூன்று அம்­சங்­களில் இவை கவ­னம்­செ­லுத்­து­கின்­றன.

கண்­ணாடி முகப்­பு­கள் ஆகா­யத்­தை­யும் சுற்­றி­யுள்ள தாவ­ரங்­க­ளை­யும் பிர­தி­ப­லிப்­ப­தால் பற­வை­க­ளுக்கு அந்த இடம் இயற்­கைச் சூழ­லின் தொடர்ச்சி என்ற தவ­றான புரி­தல் ஏற்­ப­டக்­கூ­டும்.

இதைத் தவிர்க்க, கட்­ட­டங்­களின் உள்­பு­றம் திரைச்­சீ­லை­க­ளைப் பயன்­ப­டுத்­த­லாம்; அல்­லது தொழில்­நுட்­பத்­தைப் பயன்­ப­டுத்தி தானி­யக்க முறை­யில் இர­வில் விளக்­கு­க­ளின் ஒளி­யைக் குறைக்­க­லாம்; கண்­ணா­டிப் பரப்­பு­களில் ஒட்­டு­வில்­லை­க­ளைப் பயன்­ப­டுத்­த­லாம் என்­ப­து­போன்ற குறிப்­பு­கள் பரிந்­து­ரைக்­கப்­பட்டு உள்­ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!