ஆய்வு: கொவிட்-19 தடுப்பூசியால் இதய வீக்கம் ஏற்படும் அபாயம் குறைவு

கொவிட்-19 தடுப்­பூ­சிக்­குப் பிறகு இத­யத் தசை­யில் வீக்­கம் ஏற்­படும் அபா­யம் மிக­வும் குறைவு என்று சிங்­கப்­பூ­ரில் நடத்­தப்­பட்ட புதிய ஆய்­வில் தெரி­ய­வந்­துள்­ளது.

கொவிட்-19 தடுப்­பூசி செலுத்­திக்­கொண்ட ஒரு மில்­லி­யன் பேரில் 18 பேருக்கு மட்­டுமே இத்­த­கைய சிக்­கல் ஏற்­ப­டக்­கூ­டும் என்று ஆய்வு கூறி­யது.

மற்ற நோய்­க­ளுக்கு எதி­ரான தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளும்­போது ஏற்­படும் இத­யத் தசை வீக்­கத்­தை­வி­ட­வும் இது குறைவு என்று ஆய்வு குறிப்­பிட்­டது.

சிங்­கப்­பூர் தேசி­யப் பல்­க­லைக்­கழக இதய சிகிச்சை நிலை­யத்­தின் மூத்த மருத்­து­வர் டாக்­டர் கொலெங்­கோட் ராம­நா­த­னின் தலை­மை­யில் இந்த ஆய்வு நடத்­தப்­பட்­டது.

உலக அள­வில் 400 மில்­லி­யன் தடுப்­பூ­சி­கள் போடப்­பட்­டது தொடர்­பான தர­வு­கள் ஆய்­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டன. இருப்­பி­னும் இதனை முழு­மை­யான ஆய்­வா­கக் கருத முடி­யாது.

ஏனெ­னில் 12 வய­துக்கு உட்­பட்ட சிறு­வர்­கள் அண்­மை­யில்­தான் தடுப்­பூ­சிக்­குத் தகு­தி­பெற்­ற­னர்.

எனவே அவர்­க­ளைப் பற்­றிய மிகக் குறை­வான தக­வல்­களே ஆய்­வில் சேர்த்­துக்­கொள்­ளப்­பட்­டுள்­ளன.

இத­யத் தசை வீக்­கத்­தால் சில நோயா­ளி­க­ளுக்கு இத­யம் மிக மோச­மாக சேத­ம­டை­வ­துண்டு.

பெரும்­பா­லும் கிரு­மி­க­ளால் ஏற்­ப­டக்­கூ­டிய இந்த நோய், தடுப்பூசி செலுத்திக்கொண்டபின் அரிதாகச் சிலரை பாதிக்கக்கூடும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!