சீருடையில் அணியக்கூடிய கேமராக்கள் அறிமுகம்

சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை­யைச் சேர்ந்த சில முன்­க­ளப் பணி­யா­ளர்­க­ளுக்­கும் அம­லாக்க அதி­கா­ரி­க­ளுக்­கும் சீரு­டை­யில் அணி­யக்­கூ­டிய கேம­ராக்­கள் வழங்­கப்­படும். இந்த அணு­கு­முறை நாளை முதல் நடப்­புக்கு வரும்.

இது­தொ­டர்­பான முன்­னோட்­டம் 2015ஆம் ஆண்­டில் நடத்­தப்­பட்­டது. அப்­போது தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட சில அதி­கா­ரி­கள் தங்­கள் தலைக்­க­வ­சத்­தி­லும் சீரு­டை­யி­லும் கேம­ராக்­களை அணிந்­து­கொண்­ட­னர்.

2019ஆம் ஆண்டு பிப்­ர­வரி மாதத்­துக்­கும் 2020ஆம் ஆண்டு பிப்­ர­வரி மாதத்­துக்­கும் இடைப்­பட்ட கால­கட்­டத்­தில் மருத்­துவ உத­வி­யா­ளர்­களும் முன்­னோட்­டத் திட்­டத்­தில் பங்­கேற்­ற­னர்.

முன்­னோட்­டத்­துக்­குப் பிறகு நடத்­தப்­பட்ட ஆய்­வில் சீரு­டை­யில் கேமரா அணி­வது பலன் அளிப்­பது தெரி­ய­வந்­த­தாக சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை தெரி­வித்­தது. அதி­கா­ரி­கள் பணி நிமித்­தம் மேற்­கொள்­ளும் நட­வ­டிக்­கை­களை மறு­ஆய்வு செய்­ய­வும் விசா­ர­ணை­களை நடத்­த­வும் இத்­திட்­டம் கைகொ­டுப்­ப­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

தீய­ணைப்பு மற்­றும் மீட்பு நிபு­ணர்­கள், மருத்­துவ உத­வி­யா­ளர்­கள், அபா­ய­க­ர­மான பொருள்­களை கையா­ளும் வல்­லு­நர்­கள், கண்­கா­ணிப்பு மற்­றும் அமலாக்க அதி­கா­ரி­கள் ஆகி­யோர் தங்­கள் சீரு­டை­யில் கேமரா அணிந்­து­கொள்­வர் என்று சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டது.

கேம­ராக்­களில் பதி­வா­கும் காட்­சி­கள் பயிற்சி அளிப்­ப­தற்­குப் பயன்­ப­டுத்­தப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டது. அது­மட்­டு­மல்­லாது, அதி­கா­ரி­க­ளுக்­கும் பொது­மக்­க­ளுக்­கும் இடை­யி­லான தொடர்­பில் வெளிப்­

ப­டைத்­தன்மை இருக்­கும் என்று வலி­யு­றுத்­தப்­ப­டு­கிறது.

அதி­கா­ரி­கள் தாக்­கப்­ப­டு­வது அல்­லது வார்த்­தை­க­ளால் இழி­வுப்ப­டுத்­தப்­ப­டு­வதை இத்­திட்­டம் தடுக்க உத­வும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

கடந்த ஆறு ஆண்­டு­கள் இல்­லாத அள­வில் சென்ற ஆண்­டில் சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்புப் படை அதி­கா­ரி­கள் பல­ருக்­குத் தொல்லை விளை­விக்­கப்­பட்­டது.

கடந்த ஆண்­டில் மட்­டும் 29 தொல்லை விளை­விக்­கும் சம்­ப­வங்­கள் நிகழ்ந்­தன.

நாள­டை­வில் அதி­கா­ரி­கள் தங்­கள் சீரு­டை­யில் அணிந்­தி­ருக்­கும் கேம­ராக்­களில் பதி­வா­கும் காட்­சி­கள் சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை­யின் செயல்­பாட்டு நிலை­யத்­து­டன் நேர­டி­யாக இணைக்­கப்­படும்.

கேம­ராக்­களில் பதி­வா­கும் காட்­சி­கள் 90 நாள்­க­ளுக்­குப் பிறகு நீக்­கப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டது. தகுந்த கார­ணம் இருந்­தால் மட்­டுமே 90 நாள்­க­ளுக்­கும் பிற­கும் சில பதி­வு­கள் நீக்­கப்­ப­டா­மல் வைக்­கப்­பட்­டி­ருக்­கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!