லாரன்ஸ் வோங்கைப் பற்றிய சில தகவல்கள்

சிங்­கப்­பூ­ரின் அடுத்த பிர­த­ம­ரா­கும் பாதை­யில் செல்ல தேர்­வா­கி­யுள்ள அமைச்சர் லாரன்ஸ் வோங்­கைப் பற்றி அறிந்­து­கொள்ள வேண்டிய எட்டு தகவல்கள்:

மரின் பரேட் பையன்

மரின் பரேட் வீட­மைப்­புப் பேட்­டை­யில் ஒரு சாதா­ரண குடும்­பத்­தில் வளர்ந்­த­வர் திரு வோங். தமது 86 வய­தில் கடந்த ஆண்டு கால­மான அவ­ரது தந்தை சீனா­வின் ஹானான் தீவில் பிறந்து, இளம் வய­தில் மலே­சி­யா­வில் ஈப்­போ­வுக்­குக் குடிபெயர்ந்தார். உயர்­நி­லைக் கல்வி முடித்­த­வு­டன் சிங்­கப்­பூ­ருக்கு வந்த திரு வோங்­கின் தந்தை சைம் டார்பி நிறு­வ­னத்­தில் சேர்ந்­தார். இங்கு அவர் திரு வோங்­கின் தாயாரை மணந்­தார். அவ­ருக்கு இப்­போது 82 வய­தா­கிறது. சிறு­சிறு வேலை­க­ளைச் செய்த திரு வோங்­கின் தாயார் பின்­னர் ஆசி­ரி­ய­ராகி 40 ஆண்­டு­கள் அப்­ப­ணி­யில் இருந்­தார். திரு வோங்­குக்கு தம்­மை­விட இரண்டு வயது அதிகமான மூத்த சகோதரர் ஒரு­வர் உள்­ளார். அவர் தற்போது டிஎஸ்ஓ ஆய்­வுக்­கூ­டத்­தில் விமா­னத்­து­றைப் பொறி­யா­ள­ரா­கப் பணி­யாற்­று­கி­றார்.

அக்­கம்­பக்­கப் பள்­ளி­யில் படிப்பு

திரு வோங், மசெக அற­நி­று­வன மரின் பரேட் பாலர்­பள்­ளி­யில் படித்து, பின்­னர் தம் தாயார் பணி­யாற்­றிய ஹேக் ஆண்கள் பள்­ளி­யில் சேர்ந்­தார். பள்­ளி­யில் விளை­யாட்­டை­விட புத்­த­கங்­க­ளி­லேயே திரு வோங் அதி­கம் ஆர்­வம் காட்­டி­னார். ஹேக் ஆண்கள் பள்­ளி­யி­லி­ருந்து அவர் தஞ்­சோங் காத்­தோங் தொழில்­நுட்­பப் பள்­ளிக்­குச் சென்­றார். பின்­னர் விக்­டோ­ரியா தொடக்­கக் கல்­லூ­ரி­யில் படிக்­கும்­போது அவ­ருக்கு அமெ­ரிக்­கா­வில் படிக்க அர­சாங்க உப­கா­ரச் சம்­ப­ளம் கிடைத்­தது. அங்கு விஸ்­கோன்­சின்-மெடி­சன் மற்­றும் மிச்­சி­கன்-ஆன் அர்­போர் பல்­க­லைக்­க­ழ­கங்­களில் முறையே பொரு­ளி­யல் துறை­யில் இளங்­கலை, முது­க­லைப் பட்­டங்­கள் பெற்­றார். பின்­னர் அமெ­ரிக்­கா­வின் ஹார்­வர்ட் கென்­னடி பள்­ளி­யில் பொது நிர்­வா­கத்­து­றை­யில் முது­கலை பட்­டம் பெற்­றார்.

பிர­த­ம­ரின் தலைமை

அந்­த­ரங்­கச் செய­லா­ளர்

படிப்பு முடித்து சிங்­கப்­பூர் திரும்­பிய திரு வோங், வர்த்­தக தொழில் அமைச்­சில் சேர்ந்­தார். பின்­னர் சுகா­தார, நிதி அமைச்­சு­களில் உள்ள பிர­வு­களில் இயக்­கு­ந­ரா­கப் பணி­யாற்­றி­னார். 2005ல் பிர­த­மர் லீ சியன் லூங்­குக்­குத் தலைமை அந்­த­ரங்­கச் செய­லா­ள­ராக நிய­மிக்­கப்­பட்­டார். மூன்று ஆண்­டு­கள் கழித்து எரி­சக்தி சந்தை ஆணை­யத்­தின் தலைமை நிர்­வா­கி­யா­னார். அர­சாங்க சேவை­யில் 11 ஆண்­டு­கள் பணி­யாற்­றிய பிறகு அவர் 2011 பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வென்று வெஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறிப்பினர் ஆனார். அவர் தற்­போது மார்­சி­லிங்-இயூ டீ குழுத் தொகுதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக உள்­ளார்.

கொள்கை வகுப்­பா­ளர்

திரு வோங்­குக்கு தனி­யார் துறை­யி­லி­ருந்து பல வாய்ப்­பு­கள் வந்­தா­லும் அவர் அர­சாங்­கப் பணி யில் இருக்­கவே விரும்­பி­னார். அந்­தப் பணி­யில் அவர் சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு உத­வும் பல கொள்­கை­க­ளை­யும் திட்­டங்­க­ளை­யும் வகுக்க உத­வி­னார்.

கொவிட்-19 பணிக்­குழு

2020ல் அப்­போ­தைய சுகா­தார அமைச்­சர் கான் கிம் யோங், கொவிட்-19ஐ எதிர்த்து போரி­டும் ஒரு பணிக்­கு­ழுவை அமைக்க முடி­வெ­டுத்­த­போது, அவ­ருக்­குத் துணை­யாக இணைத் தலை­வ­ராக திரு வோங்­கைத் தேர்வு செய்­தார். அந்த முடிவை துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் அவரிடம் தெரிவித்தபோது, "மக்­க­ளைப் பாது­காக்க என்­னால் முடி­யும் என்று நீங்­கள் நினைத்­தால் அதற்கு நான் தயார்," என்று முன்­வந்­தார்.

பட்­ஜெட் அறிக்கை தாக்­கல்

கொவிட்-19 பணிக்­கு­ழு­வின் இணைத் தலை­வ­ராக இரண்டு ஆண்­டு­க­ளாக அடிக்­கடி தோன்­றிய திரு வோங்­குக்கு 2021 மே மாதம் நிதி­ய­மைச்­சர் பொறுப்பு வழங்­கப்­பட்­டது. புதிய பொறுப்­பில் திரு வோங், இந்த ஆண்டு பிப்­ர­வரி மாதம் தமது முத­லா­வது வரவு செல­வுத் திட்­ட அறிக்கையை நாடாளு­மன்­றத்­தில் தாக்­கல் செய்து உரை­யாற்­றி­னார்.

இசை­யும் நாய்­களும்

புத்­த­கப் புழு, கிட்­டார் இசைக் கருவி வாசிப்­ப­வர், நாய்­கள் பிரி­யர் என்று திரு வோங் தம்மை வர்­ணிப்­பார். அவ­ருக்கு எட்­டு ­வ­யது இருக்­கும்­போது தந்தை கொடுத்த கிட்­டார் இசைக் கரு­வியை வாசித்து மகிழ்­வார்.

பிர­தான உரை­களை ஆற்­றி­னார்

2020 பொதுத் தேர்­த­லுக்­குப் பிறகு, மசெ­க­வின் தேர்­தல் செயல்­தி­றன் பற்­றிய ஆரம்பக்கட்ட விவ­ரங்­களை திரு வோங்­தான் செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் வெளி­யிட்­டார். மசெகவின் மத்­திய செயற்­கு­ழு­வில் உறுப்­பி­ன­ராக உள்ள திரு வோங், மசெக கொள்கை கருத்­த­ரங்­குக் குழு­வின் ஆலோ­ச­க­ரா­க­வும் உள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!