லாரன்ஸ் வோங் தலைவரான நடைமுறை

கோ பூன் வான் விளக்கம்: மூன்று வார கால முயற்சி; 19 தலைவர்களுடன் தனித்தனியாக சந்திப்பு; பேட்டி

மக்­கள் செயல்­ கட்­சி­யின் 4ஆம் தலை­முறைத் தலைவராக நிதி அமைச்­சர் லாரன்ஸ் வோங் தேர்ந்து எடுக்­கப்­பட்டு இருக்­கி­றார்.

திரு வோங் அந்­தப் பொறுப்புக்கு எப்­படி தேர்­ந்து எடுக்­கப்­பட்­டார் என்­பதைக் கட்­சி­யின் முன்­னாள் தலை­வ­ரும் முன்­னாள் அமைச்­சரு­மான திரு கோ பூன் வான் நேற்று செய்தியாளர்­க­ளி­டம் விவ­ரித்­தார்.

நான்­காம் தலை­மு­றைத்­ த­லை­வரைத் தேர்ந்து எடுக்­கும் நடை­மு­றைக்­குப் பொறுப்பு ஏற்­கும்­படி என்னை பிர­த­மர் லீ சியன் லூங் கேட்­டுக்­கொண்­டார். தலை­வரை முடிவு செய்­யும் அதே நேரத்­தில் 4ஆம் தலை­முறை தலை­வர்­களை ஐக்­கி­ய­மாக்­கும் வழி­யை­யும் காணு­மாறு என்­னி­டம் திரு லீ கூறி­னார்.

அமைச்­சர்­க­ளின் ஆக அதிக ஆத­ரவு யாருக்கு இருக்­கிறது என்­பதை மதிப்­பி­டு­வது மட்­டும் என் வேலை அல்ல. கருத்­தி­ணக்­கத்­தைப் பேணி, 4ஆம் தலை­முறைக் குழுவை ஐக்­கி­ய­மாக்­கும் வகை­யில் அதைச் செய்­யும்­படி என்­னி­டம் பிர­த­மர் கூறி­னார்.

நாடா­ளு­மன்­றத்­தில் மார்ச் மாதம் வரவுசெல­வுத் திட்ட விவா­தம் முடிந்த உட­னேயே நான் செய­லில் இறங்­கி­னேன். அமைச்­சர்­க­ளு­டன் தனித்­த­னி­யாக பேசி­னேன். ஒவ்­வொ­ரு­வ­ரை­யும் ஒரு மணி நேரம் பேட்டி கண்­டேன். இவை எல்லாம் முடி­ய மூன்று வார­கா­லம் ஆகி­யது.

4ஆம் தலை­முறைத் தலை­வர் பொறுப்­புக்கு வாய்ப்பு உள்ள ஒவ்­வொ­ரு­வ­ரின் பலம், பல­வீ­னத்­தைப் பற்றி வெளிப்­ப­டை­யாக, நேர­டி­யாக விவா­தித்­தேன். இதற்கு வழி வகுக்கும் விதத்­தில் குழு­வைப் பலப்­படுத்­தும் அணுகுமுறை­யைக் கைக்­கொண்­டேன்.

சிங்­கப்­பூ­ருக்­குத் தலைமை ஏற்­கும் வகை­யில், ஐக்­கி­யத்தை மேம்­படுத்தி, வலு­வான 4ஆம் தலை­முறைக் குழுவை உறு­திப்­படுத்துவதே பொது­வான நோக்­கம்.

முன்­னாள் 4ஆம் தலை­முறை அமைச்­சர்­க­ளான நாடாளுமன்ற நாய­கர் டான் சுவான் ஜின், என்டி­யுசி தலை­மைச் செய­லா­ளர் இங் சீ மெங், துணைப் பிர­த­மர் ஹெங் சுவீ கியட், ஆகி­யோ­ரோ­டும்;

டாக்­டர் இங் எங் ஹென், டாக்­டர் விவியன் பால­கி­ருஷ்­ணன், கா சண்­மு­கம், கான் கிம் யோங், எஸ் ஈஸ்­வ­ரன், திரு­வாட்டி கிரேஸ் ஃபூ, சான் சுன் சிங், லாரன்ஸ் வோங், மச­கோஸ் ஸுல்­கி­ஃப்லி, ஓங் யி காங், டெஸ்­மண்ட் லீ, ஜோச­ஃபின் டியோ, இந்­தி­ராணி ராஜா, டாக்­டர் மாலிக்கி ஒஸ்­மான், எட்­வின் டோங், டாக்­டர் டான் சீ லெங் ஆகிய அமைச்­சர்­களோ­டும் பேசி­னேன்.

தெரி­விக்­கப்­படும் தக­வல்­கள் ரக­சி­ய­மாக வைக்­கப்­படும் என்­றும் ஒட்­டு­மொத்­த­மான முடிவு மட்­டும் தெரிவிக்கப்பட வேண்டியவர்களுக்கு மட்­டும் அனா­ம­தேய முறை­யில் தெரி­யப்­படுத்­தப்­படும் என்­றும் பேட்டி காணப்பட்டவர்­க­ளி­டம் நான் உறுதி­பட தெரிவித்­தேன்.

தலை­வர் பத­விக்­குத் தங்­களை விடுத்து வேறு யார் யாரை ஆத­ரிக்­கி­றீர்­கள் என்­பதை வரி­சைப்­படுத்தி தெரிவிக்­கும்­படி அவர்­களைக் கேட்­டுக்­கொண்­டேன்.

சிங்­கப்­பூர் மீது உறு­தி­யான கடப்­பாட்­டைக் கொண்­டுள்ள, சிங்­கப்­பூ­ரர்­கள், சகாக்­கள், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளின் நம்­பிக்கைக்­குப் பாத்­தி­ர­மான, சகாக்­களின் ஆத­ர­வைப் பெற்­றுள்ள, அணியினரை ஐக்­கி­யப்­ப­டுத்தி நாட்டுக்குச் சேவை­யாற்­றும் வகை­யில் ஆக அதிக ஆற்­ற­லைக் கொண்­டுள்ள ஒரு­வ­ரைத் தேர்­ந்தெடுப்­ப­தில் தலை­வர்­கள் உறு­தி­யாக இருந்­த­னர்.

மற்­ற­வர்­களை எல்­லாம் ஐக்­கி­யப்­ப­டுத்தி, தேர்­தல்­களில் வெற்­றி­யைச் சாதிக்க வேண்­டும் என்­பதை மன­தில் நிறுத்தி நீங்­கள் யாரை உங்­கள் தலை­வ­ரா­கத் தேர்ந்து எடுப்­பீர்­கள் என்று கேட்­டேன்.

பேட்டி கண்ட 19 பேரில் 15 பேர் நிதி அமைச்­சர் லாரன்ஸ் வோங்­தான் தங்­கள் முதல் தேர்வு என்று வாக்கு அளித்­தார்­கள். இதில் வேறு யாருக்­கும் இர­ண்டு வாக்கு களுக்கு மேல் கிடைக்­க­வில்லை.

4வது அணி­யி­னர் தங்­கள் தலை­வர் யார் என்­பதை தெள்­ளத்­தெளி­வாக முடிவு செய்­து­விட்­ட­னர்.

ஆகை­யால் இதில் இரண்­டாம் இடத்­திற்கு, மூன்­றாம் இடத்­திற்கு வந்­தது யார் என்­ப­தைப்­ பற்றி பேச வேண்­டிய தேவை எது­வும் இல்லை.

லாரன்ஸ் வோங்­தான் முதல் விருப்­பம் என்­பது அறு­திப் பெரும்­பான்­மை­யு­டன் முடி­வா­கி­விட்­டது என்று திரு கோ பூன் வான் தெரி­ வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!