நிறுவனங்களுக்கு உதவும் இரண்டு புதிய ஆய்வுக்கூடங்கள்

நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக்­க­ழ­கம் (என்டியு) புதிய இரண்டு ஆய்­வுக்­கூடங்­களை அமைத்து இருக்­கிறது.

பசுமைத் தொழில்­நுட்­பத்­தில் கவ­னம் செலுத்­தும் புது நிறு­வ­னங்­கள் ஆய்வு உரு­வாக்­கத்­தில் இருந்து வர்த்­த­கத்­திற்கு விரி­வடைய அந்த ஆய்­வுக்­கூ­டங்­கள் மூலம் உதவி கிடைக்­கும்.

அந்த இரண்டு ஆய்­வுக்­கூ­டங்­களும் ஜூ கூனில் உள்ள 'ஜேடிசி கிளீன்­டெக் ஒன்' கட்­ட­டத்­தில் அமைந்து இருக்­கின்­றன.

புதிய நிறு­வ­னங்­க­ளுக்­கும் சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­க­ளுக்­கும் ஆய்­வுக்­கூ­டங்­கள் உத­வும்.

அந்த உத­வி­யைப் பெற்று அந்த நிறு­வ­னங்­கள் தங்­க­ளு­டைய தொழில்­நுட்­பங்­க­ளைப் பரி­சோ­தித்து பார்க்­க­லாம், சீர­மைத்­துக்கொள்­ள­லாம். பெரிய நிறு­வ­னங்­க­ளு­டன் இணைப்பை ஏற்­ப­டுத்­தித் தந்து அதன் வழி நிறு­வ­னங்­கள் மேம்­பட அந்த ஆய்வுக்­கூ­டங்­கள் உத­வும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­கலைக்­க­ழ­கம் நேற்று அறிக்கை ஒன்றில் இந்த விவ­ரங்­க­ளைத் தெரி­வித்­தது. புதிய இரண்டு ஆய்­வுக்­கூ­டங்­களும் சென்ற ஆண்டு செயல்­ப­டத் தொடங்­கின.

என்டியு, எண்­டர்­பி­ரைஸ் சிங்­கப்­பூர், சிங்­கப்­பூர் நிலையான எரி­சக்தி சங்­கம் ஆகிய அமைப்­பு­க­ளுக்கு இடைப்­பட்ட ஒரு கூட்டு முயற்­சி­யான எரி­சக்­திக்­கான புத்­தாக்க, சுற்­றுச்­சூ­ழல் ஆய்­வுக்­கூட நிலை­யச் செயல்­திட்­டத்­தின்கீழ் நேற்று அந்த இரண்டு ஆய்­வுக்­கூடங்­களும் தொடங்­கப்­பட்­டன.

வர்த்­தக, தொழில் துணை அமைச்­சர் லோ யென் லிங் நிகழ்ச்சி­யில் கலந்­து­கொண்­டார்.

உக்­ரேன் போர் போன்ற அண்­மைய சம்­ப­வங்­கள் கார­ண­மாக எண்­ணெய் விலை ஏறி இருக்­கிறது. சிங்­கப்­பூர் மாற்று எரி­பொ­ருள் வழி­களைத் தேட வேண்­டும் என்ற தேவையை அது வெளிச்­சம் போட்டு காட்டி இருக்­கிறது என்று அமைச்­சர் லோ குறிப்­பிட்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!