2,000 ஆசைகளைப் பூர்த்திசெய்யும் ‘மேக்-ஏ-விஷ்’ இயக்கம்

கடந்த சுமார் 20 ஆண்­டு­களில் 1,700க்கும் அதி­க­மான மோச­மாக நோய்­வாய்ப்­பட்ட பிள்ளைக­ளின் ஆசை­க­ளைப் பூர்த்­தி­செய்­துள்­ளது 'மேக்-ஏ-விஷ்' எனப்­படும் 'ஆசை­க­ளைச் சொல்' என்ற இயக்­கம்.

நேற்று 'வோர்ல்டு விஷ் டே' என்­ற­ழைக்­கப்­படும் உலக ஆசை­கள் தினம். அதை­யொட்டி மேலும் 2,000 ஆசை­க­ளைப் பூர்த்­தி­செய்­யும் இலக்கை 'மேக்-ஏ-விஷ்' கொண்­டுள்­ளது. கூடு­த­லான மோசமாக நோய்­வாய்ப்­பட்­டுள்ள சிறு­வர்­க­ளுக்­கும் அவர்­க­ளின் குடும்­பத்­தா­ருக்­கும் உத­வு­வது இந்த இயக்­கத்­தின் நோக்­கம்.

2,000 ஆசை­க­ளைப் பூர்த்­தி­செய்­வ­தற்­கான கால அவ­கா­சத்தை இயக்­கம் நிர்­ண­யிக்­க­வில்லை.

'மேக்-ஏ-விஷ்' அதன் இலக்கை அடைய உதவ சிங்­கப்­பூ­ரின் மின்­னி­லக்க ஊடக நிறு­வ­ன­மான 'எஸ்­கேக்' இவ்­வாண்டு அத­னு­டன் இணைந்து செயல்­ப­டு­கிறது. உதவி தேவைப்­ப­டக்­கூ­டிய பிள்­ளை­களை இந்த இயக்­கத்­திற்­குப் பரிந்­துரைக்கு­மாறு சிங்­கப்­பூ­ரர்­களை ஊக்­கு­விக்க 'எஸ்­கேக்', சமூக வலைத்­த­ளங்­களில் பதி­வேற்­றம் செய்ய காணொ­ளி­க­ளைத் தயா­ரிப்­பது போன்ற முயற்­சி­களை மேற்­கொள்­ளும்.

"அமைப்பு மூலம் நோய்வாய்ப்பட்ட பிள்ளைகளின் ஆசை­க­ள் பூர்த்­தி­செய்யப்படும்போது அவர்­க­ளின் வாழ்க்கை எவ்­வாறு பெரிய அள­வில் மாறக்­கூ­டும் என்பது குறித்த விழிப்­பு­ணர்வை வளர்க்­கும் எண்­ணம் கொண்­டுள்­ளோம், மோச­மாக நோய்­வாய்ப்­பட்ட பிள்­ளை­க­ளுக்­கும் அவர்­க­ளின் குடும்­பத்­தா­ருக்­கும் மீண்­டும் நம்­பிக்கை வர­வ­ழைக்­கும் பய­ணத்­தில் நாங்­களும் இடம்­பெற விரும்­பு­கி­றோம்," என்று 'எஸ்­கேக்'கின் பொது நிர்­வாகி திரு­வாட்டி மிஷெல் டான் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!