பாலர்களுக்கு உள்ளூர் சூழலில் அமைந்த தாய்மொழிப் படப் புத்தகங்களுக்கான தேவை அதிகரிப்பு

இளம் பிள்­ளை­க­ளுக்­காக அவ­ர­வர் தாய்­மொ­ழி­யி­லேயே உரு­வாக்­கப்­பட்ட உள்­ளூர் படப் புத்­த­கங்­கள் அண்­மைய ஆண்­டு­க­ளாக அதி­கரித்து வரு­கின்­றன. ஆரம்ப வயது முதல் ஆங்­கில மொழிக்­கும் அப்­பால் வாசிப்பை ஊக்­கு­விப்­ப­தற்­காக உள்­ளூர் எழுத்­தா­ளர்­கள் முயன்று வரு­கின்­ற­னர்.

பாலர் பள்ளி மாண­வர்­கள் நன்­க­றிந்த மொழி­நடை, காட்­சி­கள் போன்­ற­வற்­றைக் கொண்டு உள்­ளூர் சூழ­லில் அமைந்­துள்ள இந்­தப் புத்­த­கங்­கள் தனித்­தன்மை வாய்ந்­த­வை­யாக விளங்­கு­கின்­றன.

பாலர் பள்ளி நிறு­வ­ன­மான 'பிசி­எஃப்' கடந்த ஆண்டு 20 தாய்­மொ­ழிப் புத்­த­கங்­களை வெளி­யிட்­டது. அவற்­றில் பெரும்­பா­லா­னவை தமிழ், மலாய் மொழி­களில் அமைந்­தவை.

நிறு­வ­னத்­தின் தாய்­மொழி நிபு­ணர்­க­ளின் கைவண்­ணத்­தில் உரு­வாக்­கப்­பட்ட அந்­தப் புத்­த­கங்­கள், பாலர் பள்­ளி­யின் பாடத்­திட்­டத்­தில் ஓர் அங்­க­மாக இடம்­பெ­று­கின்­றன.

தமிழ், மலாய் மொழி­களில் பாலர் பள்ளி மாண­வர்­களுக்கு ஏற்ற புத்­த­கங்­கள் அதி­கம் இல்­லா­த­தால், இவ்­வாறு இரு மொழி­க­ளி­லும் அதி­க­மான புத்­த­கங்­களை வெளி­யிட்­ட­தாக நிறு­வ­னம் தெரி­வித்­தது.

படப் புத்­த­கங்­களை வாசிக்­கத் தொடங்­கு­வ­தற்கு முன்­பாக அவற்­றில் உள்ள படங்­க­ளைக் கொண்டு பெற்­றோர்­கள் தங்­கள் பிள்­ளை­களு­டன் உரை­யா­ட­லாம் என்று நிபு­ணர்­கள் கூறு­கின்­ற­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!