கொவிட்-19 முன்களத்தில் உன்னத பங்காற்றும் சமீமா

ஆ. விஷ்ணு வர்­தினி

கொள்­ளை­நோய்ச் சூழ­லால் உல­கமே ஆட்­டங்­கண்­டி­ருந்த வேளை­யில் அதி­லி­ருந்து சமூ­கம் மீள்­வ­தற்­கான பணி­யில் ஈடு­படும் வாய்ப்பை இளை­யர் சமீமா பேகம் பெற்று உள்­ளார்.

உயிர்தொழில்நுட்பத் துறை­யில் இருந்த இவர், சிங்­கப்­பூ­ரின் முதல் கொவிட்-19 பரி­சோ­த­னைக் கரு­வி­களை உருவாக்கிய குழு­வில் இடம்­பெற்­றார்.

ஆரம்ப காலத்­தி­லேயே புற்­று­நோ­யைக் கண்­ட­றி­வ­தற்­கான சிங்­கப்­பூர் 'ஆர்­என்ஏ' நோய் அறி­தல் உற்­பத்­தித்திறன்­க­ளை­யும் தொழில்­நுட்ப நிபு­ணத்­து­வத்­தை­யும் கொண்ட 'மிர்க்­செஸ்' (MiRXES) குழு­வில் சமீமா பணி­யாற்­றி­னார்.

உயிர்தொழில்நுட்ப நிறு­வ­ன­மான மிர்க்­செஸ், 'ஃபோர்ட்டிடியூட் கிட் 2.0' (Fortitude Kit 2.0) என்ற நோயறியும் தயார்­நிலை பரி­சோ­த­னைக் கருவி உருவாக்கத்தில் பங்­காற்­றி­யது.

வாரத்­தில் ஏழு நாள்­கள் மிர்க்­செஸ் மருத்­துவ ஆய்­வ­க­மான 'எம்­டைக்­னோஸ்­டிக்ஸ்'ஐ தொடர்ச்­சி­யா­கச் செயல்­பாட்­டில் வைத்­தி­ருப்­ப­தி­லும் சமீமா பங்­காற்­றி­னார்.

வெளி­நா­டு­க­ளுக்­குச் செல்ல விரும்­பு­வோர், தங்­க­ளுக்­குக் கிரு­மித்­தொற்று இல்லை என்­பதை கொவிட்-19 பரி­சோ­த­னையை மேற்­கொண்டு உறு­தி­செய்­யும் நடை­முறை இருந்­த­போது 'ஹெல்த்­செர்ட்ஸ்' எனப்­படும் சுகா­தார மின் சான்­றி­தழை வழங்­கும் அங்­கீ­கா­ரம் 'எம் டைக்­னோஸ்­டிக்ஸ்'க்கு அளிக்­கப்­பட்­டது.

இவ்­வாறு வெவ்­வேறு நாடு­க­ளுக்­குப் பய­ணி­கள் செல்­வ­தற்­கும் கொவிட்-19 சூழ­லுக்­கி­டையே உல­கம் அடுத்த கட்­டத்­திற்கு முன்­னே­று­வ­தற்­கும் தான் ஒரு­வ­கை­யில் பங்­காற்­றி­யுள்­ளது தனக்கு மன­நி­றைவை அளிப்­ப­தா­கக் கூறி­னார் இவர்.

2015ல் டீகின் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் உயி­ரி­யல் மருத்­துவ அறி­வி­யல் துறை­யில் இளங்­கலை பட்டம் பெற்­றார் சமீமா.

அதை­ய­டுத்து 2020ல் மிர்க்­செ­ஸில் மருத்­து­வத் தொழில்­நுட்ப நிபு­ண­ராக அவர் இணைந்­தார்.

மருத்­து­வத் துறை­யில் பணி­யாற்­ற­வேண்­டும் என்­பது சமீ­மா­வின் நீண்ட நாள் கன­வாக இருந்து வந்­தது.

அதி­ந­வீன தொழில்­நுட்­ப­மா­னது மருத்­து­வத்­து­றைக்கு எவ்­வ­ளவு அவ­சி­யம் என்று உணர்ந்­த­பின், மருத்­து­வத் தொழில்­நுட்­பத் துறை­யைத் தேர்ந்­தெ­டுத்­தார் சமீமா.

"பிடித்த வேலை­யைச் செய்­தால் வாழ்­வில் ஒரு­நா­ளும் வேலை செய்­வது போன்றே இருக்­காது என்று சிலர் கூறு­வர். அதற்­கேற்ப நான் வாழ முயற்சி செய்­கி­றேன். நான் என் வேலையை ஒவ்­வொரு நாளும் ரசித்­துச் செய்­கி­றேன்.

"என் பணி மூலம் பல உயிர்­க­ளைக் காப்­பாற்றி, அவர்­க­ளின் வாழ்க்­கையை மேம்­ப­டுத்த நான் பங்­காற்­று­கி­றேன் என்ற நம்­பிக்கை எனக்கு இருக்­கிறது," என்­றார் சமீமா.

கொவிட்-19க்கு எதி­ராக முன்­க­ளத்­தில் போரா­டிய மருத்­து­வர்­கள், தாதி­யர்போல் தன்­னைப் போன்ற மருத்­து­வத் தொழில்­நுட்ப நிபு­ணர்­களும் முக்­கி­யப் பங்­காற்ற முடி­யும் என்று தான் உணர்ந்­துள்­ள­தாக இவர் கூறி­னார்.

உல­கம் நாளுக்கு நாள் மாறி­வர, எதிர்­கா­லத்­திற்கு ஏற்­பத் தனது திறன்­களை மேம்­ப­டுத்­திக்­கொள்­வ­தில் தான் கவ­னம் செலுத்த விரும்­பு­வ­தா­கத் தெரி­வித்­தார் சமீமா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!