வாழ்க்கை மாற்றங்கள் குறித்து ஆராய்ந்த மாணவர் கருத்தரங்கு

கி. ஜனார்த்­த­னன்

 

'மாற்­றங்­கள் ஏற்­போம்: நமது சவால்­களும் தெரி­வு­களும்' என்ற கருப்­பொ­ரு­ளில் ஏற்­பாடு செய்­யப்­பட்ட கருத்­த­ரங்­கில் தொடக்­கக் கல்­லூரி மாண­வர்­கள் நேற்று முன்­தினம் காலை பங்­கேற்று பல­ன­டைந்­த­னர்.

ஈசூன் இனோவா தொடக்­கக் கல்­லூரி­யின் கலா­சார, முரு­கி­யல் மன்­றம், பல்­கலைக்­க­ழக புகு­முக வகுப்­பு­க­ளுக்­கான தமிழ்­மொழி, இலக்­கிய கருத்­த­ரங்கை 33ஆம் ஆண்­டாக நடத்­தி­யி­ருந்­தது.

இந்த மெய்­நி­கர் நிகழ்ச்­சி­யில் கிட்­டத்­தட்ட 90 மாண­வர்­கள் கலந்­து­கொண்­டனர்.

21ஆம் நூற்­றாண்­டில், குறிப்­பாக கடந்த சில ஆண்­டு­க­ளாக ஏற்­பட்டு வரும் மாற்றங்­கள் குறித்த சிற்­று­ரை­யை­யும் ஆய்­வு­களை­யும் நிகழ்ச்­சி­யின் தொடக்­கத்­தில் மாணவர்­கள் பகிர்ந்­து­கொண்­ட­னர்.

மாற்­றங்­கள் எத்­த­கை­யவை, அவற்றை ஏற்­ப­தா­லும் ஏற்­கா­மல் இருப்­ப­தா­லும் உள்ள நன்மை தீமை­கள் யாவை, மாற்­றங்­க­ளைச் சிறப்­பா­கக் கையாள்­வ­தற்­கான பரிந்­து­ரை­கள் போன்­றவை பேசப்­பட்­டன.

தொலை­நோக்­குப்­பார்வை, புரிந்­து­ணர்வு ஆகி­யவை நல்ல மாற்­றங்­க­ளுக்­குத் தேவை­யான பண்­பு­கள் எனக் கூறப்­பட்­டது.

மொத்­தம் 181 மாண­வர்­கள் பங்­கேற்ற ஆய்வு ஒன்­றின் முடி­வு­களும் கருத்­த­ரங்­கின்­போது வெளி­யி­டப்­பட்­டன.

கொவிட்-19 கிரு­மிப்­ப­ர­வலே தங்­கள் வாழ்க்­கை­யில் ஏற்­பட்ட ஆகச் சவா­லான மாற்­றம் என்று மாண­வர்­களில் 88.4 விழுக்­காட்­டி­னர் ஆய்­வில் தெரி­வித்­தி­ருந்­த­னர்.

சமூக ஊட­கங்­களில் காணொ­ளி­கள் பதிவு செய்து வரும் மன­நல மருத்­து­வர் என்.ஷாலினி, மாற்­றங்­க­ளைப் பற்­றிக் கருத்து தெரி­வித்­தார்.

கிரு­மிப்­ப­ர­வல் கால­கட்­டத்­தின் முடிவு, போரின் முடிவு, சமூ­கக் கட்­ட­மைப்­பில் மாற்­றம் எனச் சமு­தாயத்­தில் உள்ள பொது­வான மாற்­றங்­களை­யும் உடல், உள ரீதி­யான மாற்­றங்­க­ளை­யும் பற்றி அவர் விளக்­கி­னார்.

இள­மைப்­ப­ரு­வம் போனால் திரும்ப வராது. இதற்­கி­டையே, பல தரப்­பி­ன­ரும் அவ­ர­வ­ரது சொந்த நோக்­கத்­திற்­காக இளை­யர்­க­ளைப் பயன்­ப­டுத்­திக்­கொள்ள முய­ல­லாம்.

இந்­நி­லை­யைச் சரி­யாக ஆராய்ந்து இளை­யர்­கள் முடிந்­த­வரை நேர விர­யத்தை தவிர்ப்­பது நல்­லது என்று அவர் கூறி­னார்.

இளை­யர்­க­ளின் மன­தில் நிம்­ம­தி­யைக் காட்­டி­லும் ஆழ­மா­கப் பதி­வது தவிப்பே என்­றும் அவர் சுட்­டி­னார்.

நிகழ்ச்­சி­யின் மற்­றொரு சிறப்­புப் பேச்­சா­ள­ராக பாட­லா­சி­ரி­யர் திரு யுக­பா­ரதி கலந்­து­கொண்­டார். நல்ல மாற்­றத்­திற்கு அன்­பும் நம்­பிக்­கை­யும் தேவைப்­ப­டு­வ­தாக அவர் கூறி­னார்.

கதை­க­ளை­யும் பாடல் வரி­க­ளை­யும் மேற்­கோள் காட்­டிய அவர், மாற்­றங்­களை ஏற்­ப­டுத்த விரும்­பு­வோர் நல்ல பண்­பா­ளர்­க­ளாக முத­லில் இருக்­க­வேண்­டும் என்று கூறி­னார்.

வாழ்க்­கை­யில் ஏற்­படும் மாற்­றங்­களை ஏற்­கக் கற்­றுக்­கொள்­ள­வேண்­டும், கற்­றுக்­கொள்­வோம் என்ற கடப்­பாட்டை மாண­வர்­கள் உறு­தி­செய்­த­வாறு கருத்­த­ரங்கு நிறைவை நாடி­யது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!