புகுமுக மாணவர்களுக்குப் புதிய உபகாரச் சம்பளம்

பொறியியல், தொழில்நுட்பத் துறைகளுக்கான கல்வி அமைச்சின் உதவிக்கரம்

கணி­தம், பொறி­யி­யல் போன்ற துறை­களில் ஆர்­வம் உடைய பல்­கலைக்­க­ழக புகு­முக மாண­வர்­கள் அடுத்த ஆண்­டில் இருந்து புதிய கல்வி உப­கா­ரச் சம்­ப­ளத்­திற்கு விண்­ணப்­பிக்­க­லாம். ஒவ்­வோர் ஆண்­டும் இத­னால் 200 மாண­வர்­கள் பய­ன­டை­வர் என்று கல்வி அமைச்சு தெரி­வித்­தது.

சிங்­கப்­பூ­ரில் பொறி­யி­யல், தொழில்­நுட்­பத் திற­னா­ளர்­களை அதி­க­ரிப்­பது அமைச்­சின் நோக்­கம்.

கல்வி அமைச்­சர் சான் சுன் சிங் நேற்று இதனை அறி­வித்­தார். இதன் தொடர்­பில் சிங்­கப்­பூர் தொழில்­நுட்ப, வடி­வ­மைப்­புப் பல்­கலைக்­க­ழ­கத்­திற்­கும் பிரிட்­ட­னைச் சேர்ந்த முத­லீட்­டா­ளர் தொடங்­கி­யுள்ள ஜேம்ஸ் டைசன் அற­நி­று­வனத்­திற்­கும் இடை­யில் புரிந்­து­ணர்­வுக் குறிப்பு கையெ­ழுத்­தான நிகழ்ச்­சி­யில் அவர் உரை­யாற்­றி­னார்.

'ஸ்டெம்' எனப்­படும் அறி­வி­யல், தொழில்­நுட்­பம், பொறி­யி­யல், கணி­தக் கல்வி சிங்­கப்­பூர்ப் பள்­ளி­களின் பாடத்­திட்­டத்­தில் முக்­கி­யத்­து­வம் பெற்­றுள்­ள­தாக அமைச்­சர் குறிப்­பிட்­டார். இந்­தத் துறை­களில் வேலை­பார்ப்­போர் மட்­டு­மின்றி இதன் மூலம் பெற்ற அறி­வைக் குடி­மக்­கள் தங்­கள் அன்றாட வாழ்க்­கை­யில் சில முடி­வு­களை எடுப்­ப­தற்­கும் இத்­த­கைய கல்வி உத­வு­வதாக அவர் கூறி­னார்.

புதிய ஈராண்டுக் கல்வி உப­கா­ரச் சம்­ப­ளத்­தின்­கீழ் ஆண்­டுக்கு அதி­க­பட்­ச­மாக 2,400 வெள்ளி வழங்­கப்­படும்; இது பள்­ளிக் கட்­ட­ணத்தை முழு­மை­யா­கக் கட்ட உத­வும். அத்­து­டன் பாடப் புத்­த­கங்­கள் வாங்­கு­வ­தற்­காக ஆண்­டுக்கு ஆயி­ரம் வெள்­ளி­யும் வழங்­கப்­படும்.

தொடக்­கக் கல்­லூரி முத­லாம் ஆண்டு மாண­வர்­கள் இதற்கு விண்­ணப்­பிக்­க­லாம். மில்­லெ­னியா கல்விக் கழக மாண­வர்­கள் தங்­கள் இரண்­டாம் ஆண்­டில் இந்த உப­கா­ரச் சம்­ப­ளத்­திற்கு விண்­ணப்­பிக்­க­லாம். 'ஐபி' பாடத்­திட்­டம், 'என்­யு­எஸ் ஹைஸ்­கூல்' மாண­வர்­கள் இறுதி இரண்டு ஆண்­டு­களில் விண்­ணப்­பிக்­க­லாம்.

கணி­தத்­தில் வலு­வான அடித்­தளம் பெற்ற சிங்­கப்­பூர்க் குடி­யு­ரிமை பெற்ற மாண­வர்­கள் இதற்­குத் தகு­தி­பெ­று­வர்.

இந்­தக் கல்வி உப­கா­ரச் சம்­ப­ளத்­தைப் பெறும் மாண­வர்­க­ளுக்கு உயர்­கல்வி நிலை­யங்­க­ளின் பயி­ல­ரங்­கு­கள், நிறு­வ­னங்­கள் நடத்­தும் கற்­றல் பய­ணங்­கள் போன்­ற­வற்­றில் பங்­கு­பெ­றும் வாய்ப்பு கிட்­டும்.

பொரு­ளி­யல் வளர்ச்­சிக் கழ­க­மும் கல்வி அமைச்­சும் இணைந்து பங்­கு­பெ­றும் நிறு­வ­னங்­களில் பயில்­நிலை வேலைப்­ப­யிற்­சிக்­கும் ஏற்­பாடு செய்­யும் என்று தெரி­விக்­கப்­பட்­டது. கூடு­த­லான நிறு­வ­னங்­கள் இதில் கலந்­து­கொள்­ள­வேண்­டும் என்று அமைச்­சர் சான் கேட்­டுக்­கொண்­டார்.

நிலப் பற்­றாக்­கு­றை­யைச் சமா­ளித்­தல், நீடித்த நிலைத்­தன்மை மிக்க எரி­சக்தி, உல­க­ளா­விய உற்­பத்தி, வர்த்­தக, முத­லீட்­டுச் சங்­கிலி­யில் சிங்­கப்­பூ­ரின் இடம் ஆகி­யவை நாட்­டின் அடுத்த கட்ட வளர்ச்சி இலக்­கு­கள் என்று அவர் குறிப்­பிட்­டார்.

இந்­தச் சவால்­க­ளைச் சமா­ளிக்க இளம் சிங்­கப்­பூ­ரர்­கள் நாட்­டின் வருங்­கா­லத்­தில் பங்­கெ­டுக்­கும் ஆர்­வத்­து­டன் பொறி­யி­யல், தொழில்­நுட்­பத் துறை­களில் திறன்­பெற்­றி­ருப்­ப­தும் அவ­சி­யம் என்று திரு சான் குறிப்­பிட்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!