15,000 பேருக்கு உணவு தயாரிக்கும் ‘வில்லிங் ஹார்ட்ஸ்’ சமையலறை

கொவிட்-19 நெருக்­க­டி­நிலை 2020ஆம் ஆண்­டில் தொடங்கி ஒரு­சில மாதங்­களில் கூடு­தல் உணவு விநி­யோ­கம் தேவைப்­ப­டு­வ­தாக உணவு அற­நி­று­வ­ன­மான ‘வில்­லிங் ஹார்ட்ஸ்’ அமைப்­பி­டம் பலர்

கேட்­டுக்­கொண்­ட­னர்.

அத­னால் சாய் சீயில் உள்ள அதன் சமை­ய­ல­றை­யில் உணவு தயா­ரிப்­பில் வில்­லிங் ஹார்ட்­சின் தொண்­டூ­ழி­யர்­கள் தீவி­ர­மாக ஈடு­பட்டு கூடு­தல் உணவு தயா­ரித்­

த­னர்.

கொவிட்-19 நெருக்­க­டி­நி­லைக்கு முன்பு நாளுக்கு 7,000 உண­வுப் பொட்­ட­லங்­கள் தயா­ரித்­த­தா­க­வும் நெருக்­க­டி­நி­லை­யின்­போது அது 11,000ஆக உயர்ந்­த­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது.

தற்­போது ஜூன் சியாட் வட்­டா­ரத்­தில் புதிய சூப் சமை­ய­ல­றையை அந்த அற­நி­று­வ­னம் திறந்­துள்­ளது.

அத­னால் நாளுக்கு 15,000

உண­வுப் பொட்­ட­வங்­களை ‘வில்­லிங் ஹார்ட்ஸ்’ நிறு­வ­னத்­தால்

தயா­ரிக்க முடி­யும்.

புதிய சமை­ய­ல­றை­யின் பரப்­

ப­ளவு மூன்று வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக நான்­கறை வீடு­க­ளுக்கு நிக­ரா­னது.

சாய் சீயில் இருந்த பழைய சமை­ய­ல­றை­யை­விட ஜூ சியாட் வட்­டா­ரத்­தில் இருப்­பது மூன்று மடங்கு பெரிது.

கூடு­தல் உண­வுப் பொட்­ட­லங்­

க­ளைத் தயா­ரிக்க உத­வும் வகை­யில் புதிய சமை­ய­ல­றை­யில் ஆலை­களில் பயன்­ப­டுத்­தப்­படும் அடுப்பு வகை­கள் பொருத்­தப்­பட்­டுள்­ளன.

வரும் ஆகஸ்ட் மாதத்­தி­லி­ருந்து வீடு இல்­லா­மல் தவிப்­போ­ருக்கு புதிய இடத்­தில் அடைக்­க­லம் வழங்க ‘வில்­லிங் ஹார்ட்ஸ்’

தயா­ராக இருப்­ப­தாகத் தெரி­விக்­கப்­பட்­டது.

கூடு­தல் தொண்­டூ­ழி­யர்­க­ளைச் சேர்த்­துக்­கொள்­ள­வும் தனது சேவை­களை விரி­வாக்­க­வும் அற­நி­று­வ­னம் விரும்­பு­வ­தாக அதன் நிறு­வ­னர் திரு டோனி டே தெரி­வித்­தார்.

இந்த அற­நி­று­வ­னத்தை அவர் 2003ஆம் ஆண்­டில் தொடங்­கி­னார்.

கொவிட்-19 நெருக்­க­டி­நி­லை­யின்­போது உணவு கேட்டு தனி­யாக வசிக்­கும் முதி­ய­வர்­கள், வேலை இழந்­தோ­ர் எனப் பலர் தங்களை அணுகியதாக திரு டே கூறி­னார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!