பனிக்கூழ்போல தித்திப்பான பயணம்

கி.ஜனார்த்­த­னன்

அறி­வி­யல் போட்டி ஒன்­றுக்­காக 'வீகன்' எனும் நனி­சைவ பனிக்­கூழ் தயா­ரிப்­ப­தில் புத்­தாக்­கம் காட்டி பாராட்டு பெற்­றார் ஷர்­மிலா நந்­த­கு­மா­ரன், 20 (படம்). ரிபப்­ளிக் பல­து­றைத் தொழிற்­கல்­லூரி­யில் உயி­ரி­யல் தொழில்­நுட்­பத் துறை­யில் இவர் பட்­ட­யம் பெற்­றார்.

சிறு வய­தி­லி­ருந்து ரொட்டி சுடு­வ­தி­லும் கேக் செய்­வ­தி­லும் ஆர்­வம் காட்­டிய ஷர்­மிலா, உணவை அறி­வி­யல் கண்­ணோட்­டத்­தில் இருந்து கண்டு­வந்­த­தா­கக் கூறி­னார். பொங்­கோல் தொடக்கப்­பள்­ளி­யில் பயின்ற இவ­ருக்கு அறி­வி­யல் பாடம் அத்­துப்­படி. செங்­காங் உயர்­நி­லைப்­பள்­ளி­யில் உயி­ரி­யல், வேதி­யி­யல், இயற்­பி­யல் பாடங்­க­ளைப் பயின்று தேர்ச்சி அடைந்­தார்.

உண­வுத் தயா­ரிப்பு குறித்த விவ­ரங்­க­ளைப் பற்றி உயி­ரி­யல் தொழில்­நுட்ப வகுப்­பில் படிக்­க­லாம் என்­பதை தெரிந்­து­கொண்ட ஷர்­மிலா, அதில் சேர முடிவு செய்­தார்.

பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யில் தாவ­ரங்­களை அடிப்­ப­டை­யா­கக் கொண்ட உணவு வகை­க­ளைத் தயா­ரிப்­ப­தற்­கான போட்டி ஒன்று இவ­ருக்கு நன்­ம­திப்­பைத் தேடித் தந்­தது. 134 பேர் கலந்­து­கொண்ட அந்­தப் போட்­டி­யில் தலை­சி­றந்த 16 குழுக்­களில் ஒன்­றாக இவ­ரது குழு இடம்­பெற்­றது.

கடந்த ஆண்டு ஜன­வரி முதல் ஜூன் வரை அந்­தப் போட்­டி­யில் ஈடு­பட்ட ஷர்­மி­லா­வும் இவ­ரது குழு­வி­ன­ரும் கொண்­டைக்­க­ட­லை­யும் 'ஓட்ஸ்' தானி­யத்­தால் தயா­ரிக்­கப்­பட்ட பாலை­யும் பயன்­படுத்தி பனிக்­கூழ் செய்­த­னர். பனிக்­கூ­ழில் வழக்­க­மாக சேர்க்­கப்­படும் முட்டைக்குப் பதி­லாக கொண்­டைக்­க­ட­லை­யை­யும் பாலுக்­குப் பதி­லாக ஓட்ஸ் பாலை­யும் இவர்­கள் பயன்­படுத்தினர்.

வழக்­க­மான பனிக்­கூ­ழை­விட கொழுப்பு குறை­வாக உள்ள இந்­தப் பனிக்­கூழை உரு­வாக்­கு­வது அவ்­வ­ளவு எளி­தல்ல. முப்­பது முறைக்குமேல் முயற்சி செய்த பிறகே அவர்­கள் எதிர்­பார்த்­த­படி பனிக்­கூழ் சரி­யாக உரு­வா­னது. இதற்­குத் தேவை­யான ரசா­யன மூலப்­பொ­ருள்­களின் அள­வைத் தொடர்ந்து மாற்ற வேண்டி இருந்­த­தாக ஷர்­மிலா குறிப்­பிட்­டார்.

அறி­வுக்­கூர்­மை­யை­யும் விடா­மு­யற்­சி­யை­யும் சோதித்த இந்­தப் போட்டி, பல­து­றைத் தொழிற்­கல்­லூரி வாழ்க்­கை­யில் மறக்க முடி­யாத ஒரு தரு­ணம் என்­றார் இவர்.

இந்த வெற்­றிக்­காக ஷர்­மி­லா­வுக்கு உள்­ளகப் பயிற்­சியை வழங்­கிய 'நெஸ்ட்லே' நிறு­வ­னம், பின்­னர் இவ­ருக்கு முழு­நேர வேலை­யை­யும் தந்­தது. அந்­நி­று­வ­னத்­தின் விதி­முறை, தர­நிலைக் கண்­கா­ணிப்பு நிர்­வா­கிக்கு உத­வி­யா­ள­ராக ஷர்­மிலா பணி­யாற்­று­கி­றார்.

பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­களில் சேர விரும்­பும் மாண­வர்­க­ளுக்கு சுய­மா­கச் செயல்­படும் மனப்­போக்கு முக்­கி­யம் என்­கி­றார் ஷர்­மிலா.

"இங்கு சுய உழைப்பே அவ­ர­வர் முன்­னேற்­றத்­தைத் தீர்­மா­னிக்­கும். உழைக்க விரும்­பு­வோ­ருக்கு வேலை வாய்ப்­பு­கள் காத்­தி­ருக்­கின்­றன," என்­றார் இவர்.

இல்­லத்­த­ர­சி­யான தாயா­ரும் காவல்­துறை அதி­கா­ரி­யான தந்­தை­யும் தந்த ஊக்­கத்­தால் அறி­வி­யல் துறையில் சேர்ந்த ஷர்­மிலா, இத்­து­றை­யில் மேலும் பல பெண்­கள் சேர வேண்­டும் என விரும்­பு­கி­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!