சிங்கப்பூரின் மோட்டார் துறையில் நிகழும் மாற்றங்கள்

கார் உற்­பத்­தி­யா­ளர்­கள் எரி­பொ­ருள் விற்­பனை, லாப வரம்­பு­களை அதி­க­ரிப்­பது மற்­றும் வாகன சில்­லறை வர்த்­த­கத்தை மாற்­றி­ய­மைப்­ப­தில் பய­னீட்­டா­ள­ரு­டன் நெருக்­க­மான ஈடு­பாட்­டைக் கொண்­டி­ருப்­ப­தற்­கான வழி­க­ளைப் பார்க்­கின்­ற­னர். ஆனால், இதன் தொடர்­பில் விநி­யோ­கிப்­பா­ளர்­கள் முற்­றி­லும் மகிழ்ச்­சி­ய­டை­ய­வில்லை.

சிங்­கப்­பூ­ரில் 2 பிஎம்­ட­புள்யூ

விநி­யோ­கிப்­பா­ளர்­கள்

வரும் அக்­டோ­பர் 1ஆம் தேதி முதல் பிஎம்­ட­புள்யூ காரை வாங்­கு­ப­வர்­க­ளுக்கு சிங்­கப்­பூ­ரில் இரண்டு அதி­கா­ர­பூர்வ விநி­யோ­கிப்­பா­ளர்­கள் சேவை­யாற்­று­வார்­கள். புதிய கார் வாங்­கு­வது, அவர்­க­ளின் தற்­போ­தைய பிஎம்­ட­புள்யூ காரைப் பரா­ம­ரிப்பு மற்­றும் பழு­து­பார்ப்­புச் சேவை­க­ளுக்கு அனுப்­பு­தல் ஆகி­ய­வற்­றுக்கு இவ்­விரு நிலை­யங்­களும் சேவை வழங்­கும்.

தற்­போ­துள்ள பெர்­ஃபோ­மன்ஸ் மோட்டோர்ஸ் நிறு­வ­னத்­து­டன், கார்­சோனோ குவீ­யின் யூரோ­கார்ஸ் குழு­மத்­தின் ஒரு பிரி­வான யூரோ­கார்ஸ் ஆட்டோ குழு அள­வி­லான விநி­யோ­கிப்­பா­ள­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது.

மோட்­டோ­ரிங் டைட்­டர்ஸ் சஞ்­சி­கைக்­குக் கடந்த புதன்­கி­ழமை பேசிய பிஎம்­ட­புள்யூ ஆசியா நிறு­வ­னத்­தின் நிர்­வாக இயக்­கு­நர் லார்ஸ் நீல்­சன், "ஒரு நாட்­டில் ஒன்­றுக்கு மேற்­பட்ட கார் விநி­யோ­கிப்­பா­ளர்­கள் இருப்­பது புதி­தல்ல. மேலும் இது வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு அதிக வச­தி­க­ளைக் கொடுக்­கும் அதே­வே­ளை­யில் சிறந்த போட்­டித்­தன்­மை­யை­யும் அளிக்­கும்," என்­றார்.

சிங்­கப்­பூ­ரில் நேர­டி­யாக மெர்­சி­டிஸ் பென்ஸ் கார் விற்­பனை நடக்­குமா?

பல நாடு­களில் தனது கார்­களை நேர­டி­யாக பய­னீட்­டா­ளர்­க­ளுக்கு விற்­பனை செய்­யும் போக்கை மேற்­கொண்டு வரும் ஜெர்­மன் கார் உற்­பத்­தி­யா­ள­ரான மெர்­சி­டிஸ் பென்ஸ் நிறு­வ­னம், சிங்­கப்­பூ­ரில் அவ்­வாறு செய்­வது தொடர்­பில் இது­வரை கருத்து தெரி­விக்­கா­மல் இருந்து வரு­கிறது.

வாடிக்­கை­யா­ளர் விரும்­பும் மெர்­சி­டிஸ் பென்ஸ் காரை அதன் விநி­யோ­கிப்­பா­ளர், இணை­யம் வழி முன்­ப­குதி செய்­கிறது. அதன் மூலம் காரின் விலை, வாடிக்­கை­யா­ளர் சேவை, லாப வரம்பு ஆகி­ய­வற்றை கார் உற்­பத்தி நிறு­வ­னமே தனது கட்­டுப்­பாட்­டில் வைத்­துள்­ளது.

இது பாரம்­ப­ரிய கார் விநி­யோ­கிப்­பா­ளர்­களை, சோத­னை­யோட்­டம், வாக­னங்­களை விநி­யோ­கம் செய்­தல், பரா­ம­ரிப்பு மற்­றும் பழு­து­பார்ப்பு போன்ற விற்­ப­னைக்­குப் பிந்­தைய சேவை­களை வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு வழங்­கும் முக­வர்­க­ளாக மாற்­று­கிறது.

சிங்­கப்­பூ­ரில் 'போர்ஷே'யின் சில்­லறை வர்த்­தக வாய்ப்­பு­கள்

ஜெர்­மன் கார் உற்பத்தியாளரான 'போர்ஷே' சிங்­கப்­பூ­ரில் சில்­லறை வர்த்­த­கத்தை விரை­வில் தொடங்­க­வி­ருக்­கிறது. போர்ஷே கார்­களை வாங்­கு­வ­தி­லும் உரிமை வைத்­தி­ருப்­ப­தி­லும் பய­னீட்­டா­ளர்­க­ளுக்கு ஒரு சிறந்த அனு­ப­வத்­தைக் கொடுக்­கும் நோக்­கத்­தி­லேயே இவ்­வாறு செய்­யப்­பட்­டுள்­ளது.

சிங்­கப்­பூ­ரில் போர்ஷே கார்­க­ளின் அதி­கா­ர­பூர்வ விநி­யோ­கிப்­பா­ள­ரான யூரோ­கார்ஸ் குழு­மத்­து­டன் அது இதன் தொடர்­பில் பேச்சு நடத்தி, வரு­கிறது. அதன் மூலம் விற்­பனை மற்­றும் விற்­ப­னைக்­குப் பிந்­திய செயல்­பா­டு­களை வழங்­கும் ஒரு கூட்டு நிறு­வ­னம் அமைக்­கப்­படும் என்று அறி­யப்­ப­டு­கிறது.

இரு நிறு­வ­னங்­க­ளுக்­கி­டையே வர்த்­தக ஏற்­பா­டு­கள் இடம்­பெ­றும் என்று கடந்த ஆறு மாதங்­க­ளாக ஊகங்­கள் நிலவி வந்­தா­லும், எந்­த­வொரு தரப்­பும் இதன் தொடர்­பில் கருத்து கூற மறுத்து வரு­கின்­றன.

கடந்த ஆண்டு உல­க­மெங்­கும் இணை­யம் வழி 5,800 போர்ஷே கார்­கள் விற்­ப­னை­யா­கின. அதற்கு முந்­திய ஆண்­டில் அந்த எண்­ணிக்கை 1,700.

சிங்­கப்­பூ­ரில் தயா­ரிக்­கப்­பட்ட மின்­சார வாக­னங்­க­ளின் நேரடி விற்­பனை விரை­வில் தொடக்­கம்

கொரி­யா­வின் கார் உற்­பத்­தி­யா­ள­ரான ஹியுண்டே, சிங்­கப்­பூ­ரில் உள்ள தனது கார் உறு­பத்தி நிறு­வ­னத்­தி­லி­ருந்து நேர­டி­யாக தனது மின்­சார கார்­க­ளின் விற்­பனை, குத்­தகை ஆகி­ய­வற்றை வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு நேர­டி­யாக வழங்க திட்­ட­மிட்­டுள்­ளது என்று அறி­யப்­ப­டு­கிறது.

அந்த கார் உற்­பத்­தி­யா­ள­ரின் துணை நிறு­வ­ன­மான சிங்­கப்­பூர் ஹியுண்டே மோட்­டார் குழு­மத்­தின் புத்­தாக்க நிறு­வ­னம், தனது வளா­கத்­தில் வேலை செய்ய ஊழி­யர்­க­ளைத் தேடி வரு­கிறது.

அவற்­றில் ஒன்­றான விற்­பனை திட்ட அதி­காரி, கார்­க­ளுக்­கான வான உரி­மச் சான்­றி­தழ்­க­ளுக்­கான விண்­ணப்­பங்­களை ஏலக் குத்­த­கை­யில் சமர்ப்­பித்­தல், வாக­னப் பதிவு, வாகன விநி­யோ­கம் ஆகி­ய­வற்­றைக் கவ­னித்­துக்­கொள்­வார்.

பாரம்­ப­ரி­ய­மாக, இந்­தப் பணி­களை சில்­லறை விற்­பனை செயல்­பா­டு­க­ளைக் கவ­னித்­துக்­கொள்­ளும் கார் விநி­யோ­கிப்­பா­ளர்­க­ளின் பொறுப்­பாக இருந்­தது. இதற்கு முன்பு இந்­தப் பணி­களை கார் உற்பத்தி நிறு­வ­னம் ஏற்­றுக்­கொண்­ட­தில்லை.

சிங்­கப்­பூ­ரில் ஹியுண்டே கார்­க­ளின் ஒரே விநி­யோ­கிப்­பா­ள­ராக 1986ஆம் ஆண்­டி­லி­ருந்து கொமோக்கோ மோட்­டோர்ஸ் நிறு­வ­னம் இருந்து வரு­கிறது.

கொமோக்கோ மோட்­டோர்ஸ் நிறு­வ­னத்­தி­டம் தனது 'ஐயோ­னிக் 5' ரக கார்­களை பூலிம் அவென்­யூ­வில் உள்ள தனது மின்­சார கார் உறு­பத்தி ஆலை­யி­லி­ருந்து நேர­டி­யாக விற்க ஹியுண்டே திட்­ட­மிட்டு வரு­கிறது என்று தக­வல்­கள் கூறு­கின்­றன. 'ஐயோ­னிக் 5' ரக கார்­க­ளைத் தவிர்த்த மற்ற ரக கார்­களை கொமோக்கோ மோட்­டோர்ஸ் நிறு­வ­னம் விற்­கும்.

முதல் தொகுதி 'ஐயோ­னிக் 5' ரக கார்­கள் இவ்­வாண்டு இறு­தி­யில் சிங்­கப்­பூர் உற்­பத்தி ஆலை­யி­லி­ருந்து விற்­ப­னைக்கு விடப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!