7,000க்கும் மேற்பட்ட உள்துறைக் குழு அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு

உள்­து­றைக் குழு அதி­கா­ரி­கள் 7,206 பேர், நேற்று நடை­பெற்ற பதவி உயர்வு விழா­வில் அங்­கீ­கரிக்­கப்­பட்­ட­னர்.

விழா­வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றிய சட்ட, உள்­துறை அமைச்­சர் கா.சண்­மு­கம், தொழில்­நுட்­பத்­தில் உள்­து­றைக் குழு தொடர்ந்து அதி­கப்­ப­டி­யாக முத­லீடு செய்­து­வ­ரு­வ­தா­கக் குறிப்­பிட்­டார்.

அத்­து­டன் புதிய தொழில்­நுட்­பங்­க­ளின் உத­வி­யு­டன் செயல்­பாடு­கள் தொடர்ந்து மாற்­றம் கண்டு வரு­வ­தை­யும் அதி­கா­ரி­கள் பார்ப்­பர் என்று கூறி­னார்.

பொது­மக்­க­ளின் நம்­பிக்­கையை உள்­து­றைக் குழு தக்­க­வைத்­துக் கொள்­வ­தன் அவ­சி­யத்­தை­யும் அமைச்­சர் வலி­யு­றுத்­தி­னார்.

“விரும்­பத்­த­காத ஒரு முடி­வாக இருந்­தா­லும் பல­ருக்­கும் நன்மை தரக்­கூ­டிய கடி­ன­மான முடி­வு­களை எடுக்க நீங்­கள் தயா­ராக இருக்க வேண்­டும்.

“அப்­போ­து­தான் பொது­மக்­களின் நம்­பிக்­கையை நீங்­கள் தக்­க­வைத்­துக்­கொள்ள முடி­யும்,” என்­றார் திரு சண்­மு­கம்.

பதவி உயர்வு பெற்ற அதி­காரி­களுக்கு வாழ்த்து கூறிய அவர், அதி­கா­ரி­க­ளின் பங்­க­ளிப்­புக்­கும் நன்றி தெரி­வித்­தார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!