தொடக்கப் பள்ளி இறுதித் தேர்விற்கு ஆயத்தமாக வல்லுநர்களின் உதவிக்குறிப்புகள்

தொடக்கப் பள்ளி இறுதித் தேர்வு (பிஎஸ்­எல்இ) வாய்­மொ­ழித் தேர்­விற்­குத் தயா­ரா­கும் குழந்­தை­கள் வாய்­விட்­டுச் சத்­த­மா­கப் படித்­துப் பழக வேண்­டும். பெற்­றோர்­கள் தங்­கள் பிள்­ளை­களின் கற்­றல் முறைகளைக் கவ­னித்து, அதற்­கு ஏற்ப அவர்களுக்குக் கற்­றல் சூழலை ஏற்­ப­டுத்­தித் தரவேண்­டும்.

இவை, கடந்த சனிக்­கி­ழமை நடந்த பிஎஸ்­எல்இ தேர்­விற்கு ஆயத்­த­மா­வது தொடர்­பில் பெற்­றோர்­க­ளுக்கு ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் ஏற்­பாடு செய்­தி­ருந்த கருத்­த­ரங்­கில் பெற்­றோர்­க­ளி­டம் தெரி­விக்­கப்­பட்ட உத­விக்­கு­றிப்­பு­களில் சில.

கல்வி அமைச்­சின் கல்வி (பாடத்­திட்­டம்) இணைத் தலைமை இயக்­கு­நர் செங் செர்ன் வெய், புதிய அடைவுநிலை (AL) மதிப்­பீட்டு முறை குறித்­தும் உயர்­நி­லைப் பள்ளி மாண­வர் குறித்­தும் சுருக்­க­மா­கக் கூறி, கருத்­த­ரங்­கைத் தொடங்கி வைத்­தார்.

 

கணக்­குப் பாடம் கடி­னமா?

 

பிஎஸ்­எல்இ கணி­தத் தேர்வு குறித்­துப் பேசிய கணி­த­வி­யல் வல்­லு­நர் யீப் பான் ஹார், அப்­பா­டத்­தில் அடிப்­ப­டைத்­தி­றனை மாண­வர்­கள் வலுப்­ப­டுத்­திக்­கொள்­வது முக்­கி­யம் என்­றார்.

கடி­ன­மான கணக்­கு­க­ளுக்கு விடை­ய­ளிப்­பது குறித்து பெற்­றோர்­கள் கேட்­ட­தற்கு, முன்­னைய எடுத்­துக்காட்­டு­கள் இல்லை என்­ப­தால் அத்­த­கைய கேள்விக­ளுக்கு விடை­ அளிப்­பது தொடர்­பில் பயிற்சி செய்­வது கடி­னம் என்­றார் டாக்­டர் யீப்.

"அத்­த­கைய கணக்­கு­கள் அறி­மு­க­மில்­லா­த­து­போல் தோன்­றி­னா­லும், அவை பாடத்­திட்­டத்­தில் இருந்து­தான் கேட்­கப்­பட்­டி­ருக்­கும்; வழி­மு­றை­கள் கற்­றுத்­த­ரப்­பட்­டி­ருக்­கும்," என்­றார் அவர்.

தங்­கள் பிள்­ளை­க­ளின் கூட்­டல், பெருக்­கல் போன்ற அடிப்படைத் ­தி­றன்­களை மீண்­டும் பட்டை­தீட்டு­வது, அவர்­கள் நல்ல மதிப்­பெண்­கள் பெற உத­வும் என்­றும் அவர் பெற்­றோர்­க­ளுக்கு அறி­வு­றுத்­தி­னார்.

 

பயிற்­சி­யால் பயன் விளை­யும்

 

உல­க நடப்புகளைத் தெரிந்­து­கொள்­ளச் செய்­வது போன்ற உத்தி­கள், ஆங்­கி­லத் தேர்­விற்­குத் தயா­ரா­கும்­போது, தங்­க­ளது சொந்­தக் கருத்­து­களை உரு­வாக்­கிக்­கொள்ள பிள்­ளை­க­ளுக்கு உத­வும் என்­றார் 'பிரிட்­டிஷ் கவுன்­சில்' மூத்த ஆசிரியர் போஸெனா ரூப்­னிக்.

குறிப்­பா­கத் தம்­மைப் பற்­றியே அதி­கம் சிந்­திக்­கும் குழந்­தை­கள், வாய்­மொ­ழித் தேர்­விற்­குத் தயா­ரா­கும்­போது வாய்­விட்­டுச் சத்­த­மா­கப் படித்­துப் பழக வேண்­டும் என்பது அவரது அறிவுரை.

"ஒரு கதையை அவர்­கள் சத்­த­மா­கப் படிக்­கும்­போது, சொல்­ல­ழுத்­தம், ஒலி வேறு­பாடு, சர­ள­மா­கப் பேசும் தன்­மை­யு­டன் வெவ்­வேறு கதை­மாந்­தர்­க­ளுக்கு வெவ்­வேறு குர­லில் பேசு­வ­தி­லும் கவ­னம் செலுத்­து­வர். இத­னால், தங்­க­ளின் குரல் எப்­படி ஒலிக்­கும் என்­ப­தை­யும் அவர்­கள் நன்கு அறிந்­தி­ருப்­பர்," என்று திருவாட்டி ரூப்னிக் கூறினார்.

 

பிள்ளைகளை ஊக்குவிக்கவும்

 

குழந்­தை­களை ஊக்­கு­வித்­தல், தேர்வு அழுத்­தத்தை எதிர்­கொள்ள அவர்­க­ளுக்கு உத­வு­தல் ஆகி­யவை தொடர்­பில் உத­விக்­கு­றிப்­பு­க­ளைப் பகிர்ந்­து­கொண்­டார் தேசிய கல்­விக் கழ­கத்­தின் மூத்த கல்­வி­யி­யல் ஆய்­வா­ளர் இங் ஈ லின்.

ஆத­ர­வான இல்­லச் சூழ­ல் தேவை எனக் குறிப்­பிட்ட டாக்­டர் இங், அரை­யாண்­டுத் தேர்­வில் நல்ல தேர்ச்சி பெறா­வி­டி­னும் பெற்­றோர்­கள் தங்­கள் பிள்­ளை­களை ஊக்­கு­விக்க வேண்­டும் என்­றார்.

"பெற்­றோர்­க­ளாக, தேர்வு முடிவு­களை அறிந்­த­பின் நாம் ஆற்­றும் எதிர்­வி­னை­கள் நம் பிள்­ளை­க­ளி­டம் எத்­த­கைய தாக்­கத்தை ஏற்­படுத்­தும், அதன்­பின் அவர்­கள் தங்­க­ளைப் பற்றி என்ன நினைப்­பர் என்­பதை உணர வேண்­டும்," என்று திரு­வாட்டி இங் சொன்­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!