பகை உணர்வை தவிர்க்க, தடுக்க அழைப்பு

போர் வெடித்­தால் அதை எதிர்­கொள்ள எவ்­வாறு தங்­க­ளைத் தயார்ப்­ப­டுத்­திக்­கொள்ள வேண்­டும் என்பதை ஆசிய நாடு­கள் யோசிக்க வேண்­டும் என்று ஜப்­பான் தலை­

ந­கர் தோக்­கி­யோ­வில் பிர­த­மர் லீ சியன் லூங் நேற்று தெரி­வித்­தார்.

ஆனால் அத்­த­கைய சூழ்நிலை உருவாவதற்கு முன்னரே எவ்­வாறு ஒன்­றி­ணைந்து செயல்­பட வேண்­டும் என்­பதை ஆசிய நாடு­கள் ஆராய வேண்­டும் என்­றார் அவர். அப்­போ­து­தான் ஆசி­யா­வில் அமைதி நில­வும் என்­றும் பூசல்­கள் ஏற்­படும் அபா­ய­ம் குறை­வாகவும் இருக்­கும் என்­றும் திரு லீ கூறி­னார்.

"நாடு­க­ளி­டையே உற­வு­கள் கசந்து போர் வெடிப்­பது சாத்­தி­யமே என்­பதை ஐரோப்­பா­வில் தற்­போது நிகழ்­பவை காட்­டு­கின்­றன. ஆசி­யா­வி­லும் இத்­த­கைய நிலை ஏற்­படும் அபா­யம் இருப்­பதை நாம் மறுக்க முடி­யாது.

"நாடு­கள் ஒன்­றி­ணைந்து செயல்­ப­ட­வும் ஒன்­றா­கச் செழித்­தோங்­க­வும் தேவை­யான வாய்ப்­பு­களை நம்­மால் எவ்­வ­ளவு முடி­யுமோ உரு­வாக்க வேண்­டும். ஏற்­கெ­னவே இருக்­கும் பதற்­ற­நிலை பூதா­க­ர­மாக வெடிக்­கும் அபா­யத்­தைக் குறைத்­துக்­கொள்ள வேண்­டும்," என்று திரு லீ தெரி­வித்­தார்.

இதற்கு தற்­காப்பு உத்­தி­க­ளை­யும் அது­தொ­டர்­பான செல­வு­க­ளை­யும் மீண்­டும் ஆராய வேண்­டும். அத்­து­டன், அனைத்­துத் தரப்­பி­ன­ருக்­குப் பலன் அளிக்­கும் பொரு­ளி­யல் ஒத்­து­ழைப்பை மேம்­ப­டுத்த வேண்­டும் என்­றார் திரு லீ. ஜப்­பா­னிய ஊட­கக் குழு­ம­மான நிக்­கேய் ஏற்­பாடு செய்த 'ஆசி­யா­வின் எதிர்­கா­லம்' அனைத்­து­லக மாநாட்­டில் திரு லீ பேசி­ய­போது இக்­

க­ருத்­து­க­ளைத் தெரி­வித்­தார்.

வட்­டார விவ­கா­ரங்­களில் ஜப்­பா­னுக்கு அதிக பங்கு இருப்­பதை பிர­த­மர் லீ சுட்­டி­னார். ஆசி­யா­வில் அந்­நாடு முன்­னணி முத­லீட்­டா­ள­ராக இருப்­ப­தா­க­வும் வர்த்­தக

தாரா­ள­ம­ய­மா­த­லுக்­குக் குரல் கொடுத்­த­தா­க­வும் அவர் கூறி­னார். இருப்­பி­னும், பாது­காப்பு தொடர்­பாக ஜப்­பான் கூடு­தல் பங்­க­ளிக்­க­லாம் என்­றார் திரு லீ. இரண்­டாம் உல­கப் போருக்­குப் பிறகு ஜப்­பான் தற்­போது ஆர­வா­ரம் இல்­லா­மல் செயல்­பட்டு வரு­கிறது என்­றார் அவர்.

"இரண்­டாம் உல­கப் போர் நடந்து முடிந்து பல ஆண்­டு­கள், பல தலை­மு­றை­கள் கடந்­து­விட்­டன. தற்­போது புதிய சூழல் நில­வு­கிறது. இத­னால் கடந்தகால நிகழ்­வு­களை ஜப்­பான் ஏற்­றுக்­கொண்டு அவற்றை முடி­வுக்­குக் கொண்­டு­வர வேண்­டும். அவ்­வாறு செய்­தால் வட்­டா­ரப் பாது­காப்­புக்கு ஜப்­பா­னால் கூடு­

த­லா­கப் பங்­க­ளிக்க முடி­யும்," என்று பிர­த­மர் லீ கூறி­னார்.

அணு­வா­யு­தங்­களை வைத்­

தி­ருப்­பது போன்ற விவ­கா­ரங்­கள் ஜப்­பா­னி­லும் தென்­கொ­ரி­யா­வி­லும் பகி­ரங்­க­மா­கப் பேசப்­ப­டு­வதை திரு லீ சுட்­டி­னார். "தன்­னைத் தற்­காத்­துக்­கொள்ள தற்­காப்பு ஆற்­ற­லுக்கு வலு­சேர்ப்­பது குறித்து ஒவ்­வொரு நாடும் பரீ­சி­லனை செய்­வது இயல்பு. ஆனால் வட்­டா­ரப் பாது­காப்பு கோணத்­தி­லி­ருந்து பார்த்­தால் நாடு­க­ளுக்­கி­டையே ஆயு­தப் போட்டி ஏற்­படும் அபா­யம் ஏற்­ப­டக்­கூ­டும். இத­னால் ஆசி­யா­வில் நிலை­

யற்­றத்­தன்மை ஏற்­ப­டக்­கூ­டும்," என்று திரு லீ எச்­ச­ரிக்கை ஒலி எழுப்­பி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!