ரொக்கத்துடன் பணப்பை திருப்பி கிடைத்தது: கண்டுபிடித்தவருக்கு பீர் வாங்கிக்கொடுக்க விரும்பும் நபர்

தன்னுடைய பணப்பையும் அதிலிருந்த $460 ரொக்கமும் திருப்பிக் கிடைத்தது குறித்து ஆங்கிலேயர் ஒருவர் டிக்டாக் சமூகத் தளத்தில் பகிர்ந்துகொண்டார். 

பத்து நாள்களுக்கு முன் கிரிஸ் ஆண்டர்சன் தன்னுடைய பணப்பையைத் தொலைத்தார்.  அதைக் கண்டெடுத்த அடையாளம் தெரியாத நபர் சிங்கப்பூர்க் காவல் துறையிடம் அதை ஒப்படைத்தார். அதிகாரிகள் பணப்பையை கிரிஸிடம் ஒப்படைத்தனர். 

பணப்பைத் திருப்பி தனக்குக் கிடைத்ததை நம்பமுடியாத கிரிஸ் அதிலிருந்த $460 ரொக்கமும் பொருள்களும் எதுவும் எடுக்கப்படவில்லை என்று கூறினார். 

சிங்கப்பூரர்களின் நேர்மையை எண்ணி அவர் வியப்படைந்தார். இதுவே மற்ற நாட்டில் நடந்திருந்தால், பணப்பைத் திருப்பி கிடைக்க வாய்ப்பில்லை என அவர் கூறினார். 

பணப்பையைக் கண்டுபிடித்து ஒப்படைத்தவருக்கு நன்றி தெரிவித்த கிரிஸ், அவருக்கு காபி அல்லது பீர் வாங்கிகொடுக்க விரும்புவதாகத் தெரிவித்தார்.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!