கல்வி அமைச்சர்: பகுத்தறியும் ஆற்றலைப் பெற மாணவர்களுக்கு ஆசிரியர்கள் வழிகாட்ட வேண்டும்

கல்வி அமைச்சர்: பகுத்தறியும் ஆற்றலைப் பெற மாணவர்களுக்கு ஆசிரியர்கள் வழிகாட்ட வேண்டும்

1 mins read
789ae4df-c436-4c87-958d-3d3684497cf9
-

அள­வுக்கு அதி­க­மான தக­வல்­கள் கிடைக்­கக்கூ­டிய உல­கச் சூழ­லில் மாண­வர்­க­ளுக்­குப் பாடம் கற்­பிப்­பது மட்­டும் ஆசி­ரி­யர்­க­ளின் கட­மை­யா­கி­வி­டாது என்று கல்வி அமைச்­சர் சான் சுன் சிங் தெரி­வித்­தார். அதற்­கும் மேலாக, பகுத்­

த­றி­யும் ஆற்­றலை மாண­வர்­க­ள் பெற அவர்­கள் வழிகாட்ட வேண்­டும் என்­பதை அவர் வலி­யு­றுத்­தி­னார். எதிர்­கால சவால்­க­ளுக்கு தீர்வு காண­வும் எதிர்­கா­லத் தேவை­க­ளுக்­குத் தயா­ரா­க­வும் மாண­வர்­

க­ளுக்­குக் கற்­றுக்­கொ­டுக்க வேண்­டும் என்­றார் அவர். தேசிய கல்­விக் கழ­கம் நடத்­திய மாநாட்­டில் ஏறத்­தாழ 700 ஆய்­வா­ளர்­கள், கல்­வி­

யா­ளர்­க­ளி­டம் திரு சான் இவ்­வாறு கூறி­னார்.

இனி வரும் ஆண்­டு­களில் கல்வி முறை­யில் இத்­த­கைய மாற்­றங்­கள் ஏற்­ப­டு­வது அவ­சி­யம் என்று கூறிய திரு சான், உல­க­ள­வி­லான இணைப்பு அதி­க­ரித்­துள்­ள­போ­தி­லும் பல­ரி­டையே கருத்து, கொள்கை அடிப்­ப­டை­யில் பிளவு இருப்­ப­தைச் சுட்­டி­னார்.

"மாண­வர்­க­ளின் சிந்­த­னைத் திறனை மேம்­ப­டுத்த வேண்­டும். கிடைக்­கும் தக­வல்­கள் எங்­கி­ருந்து, யாரி­ட­மி­ருந்து வரு­கிறது என்­பதை ஆராய்ந்து உறுதி செய்­து­கொள்­ளும் ஆற்­றல் அவர்­க­ளுக்கு இருக்க வேண்­டும். பல­த­ரப்­பட்ட கருத்­து­கள், கொள்­கை­கள் இருப்­பதை அவர்­கள் ஏற்­றுக்­கொண்டு அவற்றை மதிக்க வேண்­டும்," என்று திரு சான் தெரி­வித்­தார்.

பாடத்­திட்­டத்தை மேம்­ப­டுத்­து­வது மட்­டு­மின்றி மாண­வர்­க­ளுக்­குத் தேவை­யான பல்­வேறு ஆற்­றல்­களை ஏற்­ப­டுத்­தித் தரு­வ­தில் கவ­னம் செலுத்த வேண்­டும் என்று அமைச்­சர் சான் கூறி­னார்.