தேர்வு முடிவுகளுக்கு முன்னரே மாணவர் சேர்ப்புத் திட்டத்தை மீண்டும் தொடங்கும் பலதுறைத் தொழிற்கல்லூரிகள்

ஜிசிஇ சாதா­ர­ண­நிலை தேர்­வின் முடி­வு­கள் வெளி­வ­ரு­வ­தற்கு முன்பு நடத்­தப்­படும் மாண­வர் சேர்ப்­புத் திட்­டத்தை பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­கள் தொடங்­கி­யுள்­ளன. இத்­திட்­டத்­தின்­கீழ் சாதா­ர­ண­நி­லைத் தேர்வு முடி­வு­கள் தெரி­வ­தற்கு முன்­ன­தா­கவே பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யில் தாங்­கள் பயில விரும்­பும் துறை­களில் நிபந்­த­னை­க­ளு­டன் இடத்தை மாண­வர்­கள் பெற்­றுக்­கொள்­ள­லாம்.

மாண­வர்­க­ளின் ஆற்­றல், அவர்­கள் வகித்­துள்ள பத­வி­கள், அவர்­க­ளது சாத­னை­கள் ஆகி­ய­வற்­றைக் கருத்­தில் கொண்டு அவர்­க­ளுக்கு இடம் வழங்­கப்­படும்.

சிங்­கப்­பூ­ரில் ஐந்து பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­கள் உள்­ளன. அடுத்த ஆண்­டுக்­கான மாண­வர் சேர்ப்பு வரும் திங்­கட்­கி­ழ­மை­யி­லி­ருந்து தொடங்­கு­கிறது. மாண­வர்­கள் நேரில் சென்று பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­கள் நடத்­தும் வளா­கச் சுற்­று­லாக்­க­ளி­லும் பயி­ல­ரங்­கு­க­ளி­லும் கலந்­து­கொள்­ள­லாம்.

கொவிட்-19 தொடர்­பான கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்­டுள்­ள­போ­தி­லும் மாண­வர் சேர்ப்­புத் திட்­டத்­தின் சில அம்­சங்­கள் தொடர்ந்து இணை­யம்­வழி நடத்­தப்­ப­டு­கின்­றன.

"கொவிட்-19 கட்­டுப்­பா­டு­கள் தொடர்ந்து தளர்த்­தப்­பட்டு வரு­கின்­றன. இதன்­மூ­லம் நன்­யாங் பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யில் மாண­வர் சேர்ப்­புத் திட்­டம் தொடர்­பாக நடத்­தப்­படும் நட­வ­டிக்­கை­களில் நேரில் வந்து ஈடு­பட கூடு­தல் மாண­வர்­க­ளுக்கு அனு­மதி வழங்க விரும்­பு­கி­றோம். நேரில் வர முடி­யா­மல் போனா­லும் தேர்வு முடி­வு­கள் வெளி­வ­ரு­வ­தற்கு முன்­பான மாண­வர் சேர்ப்­புத் திட்­டம் பற்றி அவர்­க­ளுக்கு ஏதே­னும் சந்­தே­கம் இருந்­தால் நன்­யாங் பல­து­றைத் தொழிற்­கல்­லூரி ஊழி­யர்­க­ளி­டம் அவர்­கள் கேட்­டுத் தெரிந்­து­கொள்ள மற்ற ஏற்­பா­டு­களும் செய்­யப்­படும்," என்று நன்­யாங் பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யின் முதல்­வ­ரும் தலைமை நிர்­வா­கி­யு­மான திரு­வாட்டி ஜீன் லியூ கூறி­னார்.

தேர்வு முடி­வு­கள் வெளி­வ­ரு­தற்கு முன்­பான மாண­வர் சேர்ப்­புத் திட்­ட நிகழ்ச்சி நேற்று தொடங்­கி­யது. நிகழ்ச்சியின்போது கருத்­த­ரங்­குகள், உரை­கள், வளா­கச் சுற்­று­லாக்­கள் ஆகி­யவை நேர­டி­யா­க­வும் இணை­யம் வாயி­லா­க­வும் நடத்­தப்­பட்­டன. இந்­தத் திட்­டத்­தின் வழி பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­களில் வழங்­கப்­படும் பாடத்­திட்­டங்­கள் பற்றி மாண­வர்­களும் பெற்­றோ­ரும் தெரிந்­து­கொண்டு ஆலோ­சனை பெற­லாம். தேர்வு முடி­வு­கள் வெளி­வ­ரு­வ­தற்கு முன்­பான மாண­வர் சேர்ப்­புத் திட்­டத்தை நீ ஆன் பல­து­றைத் தொழிற்­கல்­லூரி இன்று தொடங்­கு­கிறது.

இத்­திட்­டத்­திற்­காக நீ ஆன் பல­து­றைத் தொழிற்­கல்­லூரி ஒதுக்­கிய 400 இடங்­களும் ஒரு வாரத்­துக்­கும் முன்பே நிரப்­பப்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­பட்­டது. எனவே, மேலும் 1,000 பேர் கலந்­து­கொள்­ளக்­கூ­டிய இன்­னோர் இடத்­துக்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

இம்­மா­தம் பெற்­றோ­ருக்­கும் மாண­வர்­க­ளுக்­கும் இணை­யம் மூலம் கருத்­த­ரங்­கு­கள், நேரில் நடத்­தப்­படும் வளா­கச் சுற்­று­லாக்­கள் போன்ற தெரி­வு­களை சிங்­கப்­பூர் பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யும் தெமா­செக் பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யும் நடத்­து­கின்றன.

ரிபப்­ளிக் பல­து­றைத் தொழிற்­கல்­லூரி நேரில் நடத்­தப்­படும் வளா­கச் சுற்­று­லாக்­களை அடுத்த மாதம் மீண்­டும் தொடர இருக்­கிறது. இணை­யம் வழி நட­வ­டிக்­கை­க­ளை­யும் அது நடத்­தும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!