விக்ரம் நாயர்: தமிழ்மொழி கூடுதல் வேகத்தில் முன்னேறும்

மாதங்கி இளங்­கோ­வன்

 

சிங்­கப்­பூ­ரில் தமிழ்­மொழி எதிர்­கா­லத்­தில் கூடு­தல் வேகத்­தில் முன்­னே­றும் என்­ப­தற்­கான அறி­கு­றி­களை தமிழ்­மொழி விழா நிகழ்ச்­சி­க­ளின் தன்மை பிர­தி­ப­லிக்­கிறது என்­றார் வளர்­த­மிழ் இயக்­கத்­தின் ஆலோ­ச­கர் குழு­வின் தலை­வ­ரும் செம்­ப­வாங் குழுத்­தொ­குதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான விக்­ரம் நாயர்.

தமிழ்மொழி விழாவை வெற்­றி­க­ர­மாக நடத்­திய இணை ஏற்­பாட்­டா­ளர்­க­ளுக்கு நன்றி தெரி­விக்­கும் வண்­ணம் நேற்று முன்­தி­னம் வளர்­த­மிழ் இயக்­கம் விருந்து உப­ச­ரிப்பு விழாவை ஒன் ஃபேரர் ஹோட்­ட­லில் நடத்­தி­யது. ஏறத்­தாழ 100 பேர் அந்த நிகழ்­வில் கலந்­து­கொண்­ட­னர்.

இவ்­வாண்டு வளர்­த­மிழ் இயக்­கத்­தோடு சேர்ந்து இணை ஏற்­பாட்­டா­ளர்­கள் நடத்­திய 44 சிறப்பு நிகழ்ச்­சி­கள் பல்­வேறு வய­தி­னரை ஈர்க்­கும் விதத்­தில் உரு­வாக்­கப்­பட்­ட­தால் அவை பொது­மக்­க­ளி­டையே பெரும் வர­வேற்­பைப் பெற்­ற­தா­க­வும் பகிர்ந்­து­கொண்­டார், கல்வி அமைச்­சின் தமிழ்­மொழி கற்­றல், வளர்ச்­சிக் குழு­வின் தலை­வ­ரு­மான விக்­ரம் நாயர்.

"சிங்­கப்­பூர் தமி­ழர்­க­ளி­டத்­தில், குறிப்­பாக மாண­வர்­கள் மற்­றும் இளை­யர்­க­ளி­டத்­தில் தமிழ்­மொ­ழியை வாழும் மொழி­யாக னவத்­தி­ருப்­பதே முக்­கி­யம். மொழி­தான் நமது அடை­யா­ளம். அத­னைத் தொடர்ந்து கட்­டிக்­காக்­கும் பொறுப்பு நம் அனை­வ­ருக்­கும் இருக்­கின்­றது," என்­றும் அவர் வலி­யு­றுத்­தி­னார்.

நிகழ்ச்­சி­யில் இசை­யும் நாட்­டி­ய­மும் கலந்த விருந்­தை­யும் அளித்­த­னர் மகு­லம் கலைக்­கூ­டத்­தைச் சேர்ந்த நட­ன­ம­ணி­கள். அவர்­கள் திருக்­கு­றள் சம்­பந்­தப்­பட்ட பாட­லுக்கு பர­த­நாட்­டிய படைப்பு ஒன்றைச் செய்­த­தோடு தமிழ்ப் பாடல் ஒன்­றுக்கு ஒயி­லாட்­டப் படைப்­பை­யும் வழங்­கி­னர். தமிழ் மொழி விழா­வில் கலந்­து­கொண்ட அமைப்­பு­க­ளுக்­கும் ஏற்­பாட்­டா­ளர்­க­ளுக்­கும் சான்­றி­தழ்­கள் வழங்­கப்­பட்­டன.

இம்­மா­தி­ரி­யான விருந்­து­ப­ச­ரிப்பு விழாக்­கள் வளர்­த­மிழ் இயக்­கத்­தின் நிகழ்ச்­சி­க­ளு­டைய இணை ஏற்­பாட்­டா­ளர்­கள் ஒரு­வரை ஒரு­வர் நேர­டி­யா­கச் சந்­தித்துப் பேசு­வ­தற்கு ஒரு வாய்ப்பை உரு­வாக்­கு­கிறது என்று பகிர்ந்­து­கொண்­டார் வளர்­

த­மிழ் இயக்­கத்­தின் தலை­வர் திரு சு. மனோ­க­ரன்.

"வளர்­த­மிழ் இயக்­கம் தொடர்ந்து இளை­யர்­கள் தமிழ்­மொ­ழி­யில் உரை­யா­டு­வ­தற்கு ஊக்­கு­விக்க அவர்­க­ளு­டைய விருப்­பங்­க­ளுக்கு ஏற்ப பல நிகழ்ச்­சி­களை விரை­வில் ஏற்­பாடு செய்­யும். எழுத்து தமிழை மட்­டு­மல்­லா­மல் பேச்­சுத் தமி­ழை­யும் அவர்­க­ளுக்கு அறி­மு­கப்­ப­டுத்­தி­னால் சிறப்­பாக இருக்­கும்," என்­றார்.

வளர்­த­மிழ் இயக்­கத்­தின் துணை செய­லா­ள­ரா­கச் சேவை­யாற்றி விடை­பெ­றும் விஜி ஜெக­தீஷ் இந்த நிகழ்ச்­சி­யில் உரை­யாற்­றி­னார். அவர் 2007ஆம் ஆண்டு முத­லில் ஈடு­பட்டு ஏற்­பாடு செய்த தமிழ் மொழி விழா முதல்­கொண்டு இன்று வரை தம் பய­ணத்­தில் கண்­டுள்ள மாற்­றங்­களை விவ­ரித்­தார்.

இன்­றைய மாண­வர்­கள் தமி­ழில் பேசு­வ­தற்கு கூச்­சப்­ப­டா­ம­லி­ருக்க வளர்­த­மிழ் இயக்­கம் தொடக்­கப்­பள்ளி மாண­வர்­க­ளுக்­கும் உயர்­

நி­லைப்பள்ளி மாண­வர்­க­ளுக்­கும் அவர்­க­ளு­டைய பள்­ளி­க­ளி­லேயே தங்­கள் பேச்­சுத் திற­னை­யும் எழுத்­துத் திற­னை­யும் வளர்ப்­ப­தற்கு சில நட­வ­டிக்­கை­களை ஏற்­பாடு செய்ய விரும்­பு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!