மாண­வர்­க­ளின் கலை ரச­னையை வளர்க்க உதவும் லாரி

மாண­வர்­க­ளின் கலை ரச­னையை வளர்க்க உதவும் லாரி

2 mins read
f3723c51-88ad-425b-939e-5a5385a1fee9
மாண­வர்­கள் தங்­கள் சிந்­த­னை­க­ளை­யும் சக­மா­ண­வர்­க­ளு­டன் சேர்ந்து உரு­வாக்­கும் கலைப்­ப­டைப்­பு­க­ளை­யும் பகிர்ந்­து­கொள்­ள­லாம். படம்: ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் -

தொடக்­கப்­பள்ளி, உயர்­நி­லைப் பள்ளி மாண­வர்­க­ளின் கலை ரச­னையை வளர்க்க, உல­வும் கலை லாரி ஒன்று அமைக்­கப்­பட்­டுள்­ளது.

அடுத்த மூன்று ஆண்­டு­களில் இங்­குள்ள எல்லா தொடக்­கப்­பள்ளி­க­ளுக்­கும் உயர்­நி­லைப் பள்ளி­க­ளுக்­கும் அந்­தக் கலை லாரி செல்­லும்.

முதற்­கட்­ட­மாக அந்த லாரி ஏழு பள்ளி­க­ளுக்­குச் செல்­லும்.

தேசிய கலைக் கூடம் அந்­தத் திட்­டத்தை நடத்­து­கிறது. அதற்­கான $200,000 செலவை, அப்­ளைட் மெட்டீ­ரி­யல்ஸ் எனும் மின்­க­டத்தி நிறு­வ­னம் வழங்­கி­யுள்­ளது.

அப்­பர் சாங்கி சாலை­யில் உள்ள அப்­ளைட் மெட்டீ­ரி­யல்ஸ் நிறு­வ­னத்­தின் கட்­ட­டத்­தில் திட்­டம் நேற்று தொடங்­கப்­பட்­டது.

தேசிய கலைக்­கூ­டத்­தில் காட்­சிக்கு வைக்­கப்­பட்­டுள்ள 10 கலைப்­பொ­ருள்­க­ளின் அச்­சுப்­ப­டம் அந்த லாரி­யில் இடம்­பெற்­றுள்­ளது. அந்­தக் கலைப்­பொ­ருள்­கள் பற்றி சிந்­திக்­கத் தூண்­டும் கேள்­வி­களும் அங்கு வைக்­கப்­பட்­டி­ருக்­கும்.

உல­வும் கலை லாரி ஒவ்­வொரு பள்­ளி­யி­லும் மூன்று முதல் ஐந்து நாள்­க­ளுக்கு இருக்­கும். கலைக் கல்­வி­யா­ளர் ஒரு­வர் மாண­வர்­க­ளுக்கு வழி­காட்­டு­வார்.

புகழ்­பெற்ற சிங்­கப்­பூர், தென்­கி­ழக்­கா­சிய ஓவி­யர்­க­ளின் படைப்பு­கள் லாரி­யில் வைக்­கப்­படும்.

'வாண்­ட­ரிங்' எனும் கருப்­பொ­ருள்­கொண்டு 1970கள் முதல் 1980கள் வரை ஜாஃபர் லத்­திஃப் உரு­வாக்­கிய பாத்­திக் ஓவி­யங்­கள், ஜார்­ஜெட் சென்­னின் 'வாட்­டர்­ஃபிரண்ட்' ஓவி­யம் உள்­ளிட்­டவை அவற்­றில் அடங்­கும். லாரி­யில் உள்ள ஓவி­யங்­கள் மூன்று மாதங் ­க­ளுக்கு ஒரு முறை மாற்­றப்­படும்.

கலையை அனை­வ­ருக்கும் கொண்டு சேர்க்கும் தங்­கள் முயற்­சி­களில் இத்­திட்­ட­மும் ஒன்று என தேசிய கலைக் கூடத்­தின் மூத்த இயக்கு­நர் சூவேன் மேகன் டான் கூறி­னார். மாண­வர்­க­ளுக்கு இது வசதி ­யாக இருக்­கும் என்­றார் அவர்.