சுவா சூ காங்கில் புதிய விளையாட்டு வசதிகள்

சுவா சூ காங்­கில் குழந்­தை­கள் விளை­யாட்­டுத் திடல், காற்­பந்துச் சிற்­ற­ரங்கு மற்­றும் இதர பொழு­து­போக்கு வச­தி­க­ளு­டன் கூடிய புதிய விளை­யாட்டு நிலையம் திறக்­கப்­பட்டுள்­ளது.

சுவா சூ காங் அவென்யூ 4, புளோக் 421க்கு அரு­கில் அமைந்­தி­ருக்­கும் 'த அரினா@கியட் ஹோங்' எனப்­படும் இந்த நிலையம் திறக்­கப்­ப­டு­வ­தன் தொடர்­பில் நடத்­தப்­பட்ட விளை­யாட்டு தின நிகழ்வு ஒன்­றில் 10,000க்கும் மேற்­பட்ட குடி­யி­ருப்­பா­ளர்­கள் கலந்­து­கொண்­ட­னர்.

மொத்­தம் 639 சதுர மீட்­டர் பரப்­ப­ள­வில் அமைந்­துள்ள புதிய விளை­யாட்டு நிலையத்தில் பூப்­பந்து, கைப்­பந்து, கூடைப்­பந்து போன்­ற­வற்­றுக்­கான அரங்­கங்­க­ளு­டன் 400 மீட்­டர் மெது­வோட்­டம் மற்­றும் நடைப்­ப­யிற்­சிக்­கான பாதை­யும் அமைக்­கப்­பட்டு உள்­ளது. அந்­தப் பாதை­யின் அரு­கில் சிறிய பூங்கா ஒன்­றும் உள்­ளது.

மேலும், பசுமைக் கூரை­யு­டன் கூடிய கூட்ட அரங்கு, பெரி­யோ­ருக்­கும் மூத்­தோ­ருக்­கு­மான கட்­டு­டல் பயிற்­சி­ய­கம் ஆகி­ய­ன­வும் இதில் இடம்­பெற்று உள்­ளன.

கிட்­டத்­தட்ட நான்கு நான்­கறை வீட்­டுக்­குச் சம­மான இடத்­தில், அதா­வது 426 சதுர மீட்­டர் பரப்­ப­ள­வில் அமைந்­துள்ள சிறு­வர் விளை­யாட்­டுத் திடல் இரு பிரி­வு­க­ளைக் கொண்டு உள்­ளது.

ஒன்­றில் இரண்டு வயது முதல் ஆறு வயது வரை­யி­லான குழந்­தை­கள் விளை­யா­ட­லாம்.

மற்­றொன்று, ஏழு வயது முதல் 12 வயது வரை­யி­லான சிறு­வர்­கள் விளை­யா­டக்­கூ­டி­யது.

புதிய விளை­யாட்டு நிலையம் இதற்கு முன்­னர் லாம் சூன் சமூக நிலை­யம் அமைந்­தி­ருந்த இடத்­தில் கட்டி எழுப்­பப்­பட்டு உள்­ள­தாக சுவா சூ காங் குழுத்­தொ­கு­திக்கு உட்­பட்ட கியட் ஹோங் தொகு­தி­யைப் பிர­தி­நி­திக்­கும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஸுல்­கர்­னைன் அப்­துல் ரஹிம் கூறி­னார்.

திறப்பு விழா­வில் பங்­கேற்ற அவர், "இந்த இடத்­தில்­தான் நாங்­கள் எல்­லா­வித நட­வ­டிக்­கை­க­ளி­லும் ஈடு­பட்­டி­ருந்­தோம்.

"குடி­யி­ருப்­பா­ளர்­க­ளின் விருப்­பத்­திற்கு இணங்­க­வும் நகர மன்­றத்­தின் ஆத­ர­வி­னா­லும் இப்­போது அதே இடத்­தில் அனைத்­தை­யும் உள்­ள­டக்­கிய புதிய வச­தி­க­ளைப் பெற்­றி­ருக்­கி­றோம்," என்­றார்.

தடுப்­பு­கள் இல்­லாத நுழை­

வா­யி­லைக் கொண்­ட­தாக அமைந்­துள்ள விளை­யாட்டு அரங்­கத்­தில் மூத்­தோ­ரும் உடற்­குறை உள்­ளோ­ரும் எளி­தில் வந்­து­செல்­வ­தற்கு வச­தி­யாக சரி­வுப் பாதை­கள் அமைக்­கப்­பட்டு உள்­ளன.

தந்­தை­யர் தினத்­தில் கடைப்­பி­டிக்­கப்­பட்ட விளை­யாட்டு தினம் ஈராண்­டு­க­ளுக்­குப் பின்­னர் நேற்று கொண்­டா­டப்­பட்­டது.

கொவிட்-19 கொள்­ளை­நோய் கார­ண­மாக பெருந்­தி­ர­ளா­ன­வர்­கள் ஒன்­று­கூட தடை விதிக்­கப்­பட்­டி­ருந்­த­தால் இந்­தக் கொண்­டாட்­டம் நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்­தது.

சமூ­கப் பிணைப்பை குடி­யி­ருப்­பா­ளர்­க­ளி­டையை ஊக்­கு­விக்­க­வும் அதி­க­மா­னோர் உடற்­ப­யிற்­சி­யில் ஈடு­ப­ட­வும் விளை­யாட்டு தினம் இங்கு ஏற்­பாடு செய்­யப்­ப­டு­வ­தாக திரு ஸுல்­கர்­னைன் தெரி­வித்­தார்.

$15 மில்­லி­யன் செல­வி­லான கியட் ஹோங் பேட்டை புதுப்­பிப்­புத் திட்­டத்­தின் ஒரு பகு­தி­யாக விளை­யாட்டு நிலையம் உரு­வாக்­கப்­பட்டு உள்­ளது.

சுவா சூ காங் அவென்யூ 3 மற்­றும் அவென்யூ 4ல் உள்ள 401 முதல் 428 வரை­யி­லான புளோக்­கு­க­ளுக்­கான புதுப்­பிப்­புத் திட்­டம் இது.

கியட் ஹோங் பேட்­டைக்­குட்­பட்ட பகு­தி­களில் மேம்­பட்ட தொடர்பு வச­தி­க­ளு­டன் தற்­போ­துள்ள வச­தி­களை மேம்­ப­டுத்­து­

வ­தும் இந்­தத் திட்­டத்­தில் இன்­னும் நிறை­வேற்­றப்­பட உள்­ளவை.

பேட்டை புதுப்­பிப்­புத் திட்­டம் என்­பது வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கத்­தின் திட்­டம்.

வீவக பேட்­டை­களை மேம்­

ப­டுத்­தும் இந்­தத் திட்­டத்­திற்­கான நிதியை அர­சாங்­கம் முழு­மையாக வழங்குகிறது. உத்­தேச மேம்­

பா­டு­கள் குடி­யி­ருப்­பா­ளர்­க­ளின் பரிந்­து­ரை­க­ளின்­பே­ரில் நிறை­வேற்­றப்­ப­டு­கின்­றன.

புதிய விளை­யாட்டு நிலையத் திறப்பு விழா­வில் வர்த்­தக, தொழில் அமைச்­சர் கான் கிம் யோங், தென்­மேற்கு வட்­டார மேய­ரும் சுவா சூ காங் குழுத்­தொ­குதி நாடா­ளு­ மன்ற உறுப்­பி­ன­ரு­மான லோ யென் லிங், மற்­றோர் உறுப்­பி­னர் டான் வீ ஆகி­யோ­ரும் கலந்­து­கொண்­ட­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!