விலங்கு மருத்துவத் தாதியருக்கு அங்கீகாரம் வழங்க காலம் கனிந்துவிட்டது

திரு அரவிந்த் ஆனந்தமோகன், 29, திருவாட்டி ஆப்பிள் நியோ ஆகிய இருவுரும் சிறந்த விலங்கு மருத்­து­வத் தாதி­யர், தொழில்­நுட்­ப­ருக்­கான விரு­து­கள் பெற்றுக்கொண்டனர். இந்த விருது கடந்த மாதம் முதல்­மு­றை­யாக வழங்­கப்­பட்­டது. சிங்­கப்­பூர் விலங்கு மருத்­து­வச் சங்­கத்­தின்­கீழ் இயங்­கும் விலங்கு மருத்­து­வத் தாதி­யர், தொழில்­நுட்­பர்­கள் அமைப்­பும்

செல்­லப் பிரா­ணி­க­ள் தீனி­ விற்­கும் ராயல் கெனைன் சிங்­கப்­பூர் நிறு­வ­ன­மும் இந்த விருது­களை வழங்­கின.

சிங்­கப்­பூ­ரில் விலங்கு மருத்­து­வத் தாதி­யர் விலங்கு மருத்­து­வத் தொழில்­நுட்­பப் பொறுப்­பு­க­ளை­யும் ஏற்­றுச் செயல்­ப­டு­கின்­ற­னர். விலங்கு­க­ளின் ஆரோக்­கிய நிலை­யைக் கண்­ட­றிய பரி­சோ­த­னை­க­ளைச் செய்­வது, ரத்­தப் பரி­சோ­த­னை­களை நடத்­து­வது, எக்ஸ்ரே பரி­சோ­த­னை­க­ளைச் செய்­வது போன்ற பணி­கள் மட்­டு­மின்றி விலங்கு மருந்­த­கங்­க­ளுக்கு வரும் விலங்­கு­கள் சுத்­த­மா­க­வும் பதற்­ற­மில்­லா­மல் இருப்­பதை அவர்­கள் உறுதி செய்ய வேண்­டும்.

ஆனால் கடந்த பல ஆண்­டு களில் இப்­ப­ணி­யி­லி­ருந்து பலர் விலங்­கி­விட்­ட­னர். நீண்டநேரப் பணி, குறு­கிய வாழ்க்­கைத் தொழில் முன்னேற்றப் பாதை, களைப்பு, மன­ரீ­தி­யான பாதிப்பு போன்­றவை இதற்­குக் கார­ணங்கள். அது­மட்­டு­மல்­லாது, செல்­லப் பிரா­ணி­க­ளின் உரி­மை­யா­ளர்­க­ளி­ட­மி­ருந்து திட்டு வாங்­கும் நிலை­யும் வெந்த புண்­ணில் வேலைப் பாய்ச்சுவது போல் உள்ளது. அத்­து­டன் விலங்கு மருத்­து­வத் தாதி­ய­ரா­வ­தற்­கான கல்­விப் பாதை­யும் ஆளுக்கு ஆள் மாறியிருப்பதும் ஒரு சவால் என்று தெரி­விக்­கப்­ப­டு­கிறது. திரு அர­விந்த், திரு­வாட்டி நியோ போன்ற பல உள்­ளூர் விலங்கு மருத்­து­வத் தாதி­யர் இந்த வேலை­யில் சேர்ந்த பிறகு பணி­பு­ரிந்­து­கொண்டே பயிற்சி பெற்­ற­னர். அதை­ய­டுத்து, சில ஆண்­டு­கள் கழித்து இத்­து­றை­யைச் சார்ந்த சான்­றி­தழ்­க­ளைப் பெற்­ற­னர்.

வேறு சிலர் பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யில் விலங்கு மருத்­துவ அறி­வி­ய­லில் பட்­ட­யச் சான்­றி­தழ் பெற்று வேலை­யில் சேரு­கின்­ற­னர். விருது வென்ற திரு அர­விந்த் ஃபேரர் சாலை­யில் உள்ள பெட்ஸ் அவென்யூ விலங்கு மருந்­த­கத்­தில் செய்­முறை நிர்­வா­கி­யா­க­வும் விலங்கு மருத்­து­வத் தாதி­யா­க­வும் பணி­பு­ரி­கி­றார். அந்த மருந்­த­கத்­தில் ஏழாண்­டு­க­ளுக்கு முன் சேர்ந்­தார். விலங்கு மருத்­து­வ­ரா­வதே அவ­ரது இலட்­சி­யம்.

சிங்­கப்­பூ­ரில் விலங்கு மருத்­து­வத் துறை­யில் தர­நி­லையை உயர்த்த தேசிய அள­வி­லான ஆய்வு மேற்­கொள்­ளப்­ப­டு­கிறது. இந்­நி­லை­யில், விலங்கு மருத்­து­வத் தாதி­யர், தொழில்­நுட்­பர்­கள் ஆகி­யோ­ரி­ட­மி­ருந்து எதிர்­பார்க்­கப்­படும் பணித் திறன்­க­ளைப் பட்­டி­ய­லிட்டு நெறிப்

­ப­டுத்­தும் பொறுப்­பு­க­ளுக்கு விலங்கு மருத்­து­வத் தாதி­யர், தொழில்­நுட்­பர்­கள் அமைப்பு தலை­மை­தாங்­கும் என்று அதன் இணைத் தலை­வர் டாக்­டர் டினோ பூன் ஹான் தெரி­வித்­தார்.

சிங்­கப்­பூ­ரில் தற்­போது 800லிருந்து 1,200 வரை­யி­லான விலங்கு மருத்­து­வத் தாதி­யர்­ உள்­ள­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!