நேரத்தை மிச்சப்படுத்தும் தொழில்நுட்பத்தை உருவாக்கிய ஸ்ரீராம் ராமானுஜத்துக்கு விருது

கி. ஜனார்த்­த­னன்

தொழில்­நுட்­பத் திற­னைப் புத்­தாக்­

க­த்துடன் பயன்­ப­டுத்தி சிங்­கப்

­பூ­ரின் கடல்­து­றை­யில் புரட்­சியை ஏற்­ப­டுத்தி வரு­கி­றார் சிங்கப்பூர் துறைமுக ஆணையத்தின் சமூகத் தீர்வுகள் பிரிவுக்கான உதவி துணைத் தலைவர் ஸ்ரீராம் ராமானுஜம், 43. கடற்­துறைத் தள­வாட முறை­களை மேலும் சீர­மைக்க இவ­ரது தலை­மைத்­து­வத்­தில் உரு­வாக்­கப்­பட்ட 'அறி­வார்ந்த தள­வாட சுற்­றுச்­சூ­ழல்' என்ற திட்­டம், சிங்­கப்­பூர் கணினிச் சங்­கத்­தின் 'தொழில்­நுட்பத் தலை­வர்'

விரு­தைப் பெற்­றுள்­ளது.

கடல்­துறை, துறை­முக ஆணை­யத்­தில் 21 ஆண்­டு­க­ளா­கப் பணி­யாற்­றும் திரு ஸ்ரீரா­மின் 'அறி­வார்ந்த தள­வாட சுற்­றுச்­சூ­ழல்' திட்­டத்­தில் 'ஸ்மார்ட்­புக்­கிங்', 'ஐபோக்ஸ்' ஆகிய தளங்­கள் உள்­ள­டங்­கு­கின்­றன. சிங்­கப்­பூ­ரின் தள­வாட வச­தி­கள், சரக்கு வாக­னங்­கள், முனை­யங்­கள், பணி­

ம­னை­கள் ஆகி­ய­வற்றை இணைக்­கிறது. 'ஸ்மார்ட்­புக்­கிங்' என்ற தளத்­தின் வாயி­லாக துறை­மு­கங்­கள், பணி­ம­னை­கள், தள­வாட வச­தி­கள் ஆகி­யவற்றுக்கு முன்­ப­திவு செய்­ய­லாம். துறை­மு­கம், காலி­யான சரக்­குப் பெட்­டி­கள் வைக்­கப்­படும் பணி­ம­னை­கள், சரக்­கு­கள் வைக்­கப்­படும் இடங்­கள் ஆகி­யவை கடற்­துறை தள­வா­டத்­தின் மூன்று மையப்

­புள்­ளி­க­ளா­கத் திகழ்­வ­தா­கக் கூறும் திரு ஸ்ரீராம், அவற்­றுக்கு இடை­

யி­லான இணைப்­பு­களை வலுப்­

ப­டுத்­துவதே தமது திட்­டத்­தின் குறிக்­கோள் என்­றார்.

கடல்­து­றை­யின் வளர்ச்­சிக்கு ஈடு­கொ­டுக்­கும் வித­மாக வளங்­

க­ளைக் கையாள்வது இருக்­க­வேண்­டும் என்று அவர் கூறினார்.

முன்­ன­தாக, இந்த மையப்­புள்ளி ­க­ளுக்கு இடை­யி­லான சரக்கு வாகன பயண முறை­யில்

சீரற்ற நிலை நிறைய இருந்­த­தைச் சுட்­டி­னார். "சில நேரங்­களில் 15 நிமி­டங்­களில் முடி­ய­வேண்டிய சரக்கு லாரி­யின் பயண வேலை­கள், காத்­தி­ருப்­பு­கள் கார­ண­மாக இரண்டு மணி நேரம் வரை எடுக்­கிறது. பயனுள்ள வகையில் பயன்­

ப­டுத்­த­வேண்­டிய இந்­நே­ரம், முடி­வில் இரண்டு மணி நேரம் வரை எடுத்­தது," என்று அவர் கூறி­னார். ஆறு பய­ணங்­கள் வரை செல்­லக்­கூ­டிய லாரி­கள் சில நேரங்­களில் நான்கு பய­ணங்­களே செல்­கின்­றன. லாரி­கள் நக­ரா­மல் இருந்­தா­லும் எரி­பொ­ரு­ளைப் பயன்­ப­டுத்­து­வ­தால் சுற்­றுச்­சூ­ழ­லுக்கு இத­னால் பாதிப்பு ஏற்படுவதாகவும் திரு ஸ்ரீராம்

சுட்­டி­னார். 2020ஆம் ஆண்டு ஏப்­ர­ல் மாதத்தில் திட்­டத்­திற்­கான பணி­கள் தொடங்­கின. அதே ஆண்டு ஜூலை மாதத்­தில் இத்­த­ளத்­தின் முதல் வடி­வம் உரு­வாக்­கப்­பட்­டது. கொவிட்-19 கால­கட்­டத்­தில் இந்­தத் திட்­டம் தொடங்­கப்­பட்­ட­தால் பத்துப் பேர் அடங்கிய தமது குழு நிச்சயமற்ற சூழ­லில் பணி­யாற்ற வேண்டி இருந்­த­தா­கக் கூறி­னார். உலக அள­வில் தள­வா­டத் துறை­யில் தக­வல் பகிர்வு பொது­வாக குறை­வாக இருந்­த­தால் தள­வாடப் பங்­கா­ளி­க­ளி­டம் புதிய தொழில்­நுட்­பத்­தின் நன்­மை­களை எடுத்­துக்­கூற வேண்டி இருந்­தது. புதிய தளத்­தைப் பயன்­ப­டுத்­தும் நிறு­வ­னங்­க­ளுக்கு இவ­ரின் குழு­வி­னர் அணுக்­க­மாக வழி­காட்­டி­னர்.

சென்­னை­யைப் பூர்­வி­க­மா­கக் கொண்ட திரு ஸ்ரீராம், 1996ஆம் ஆண்டு சிங்­கப்­பூ­ரின் நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் மின்­னி­யல், மின்­ன­ணு­வி­யல் பொறி­யி­ய­ல் பயின்று பின்­னர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தில் பயின்­றார். தற்­போது மனைவி, 14 வயது மகளுடன் இவர் சிங்கப்பூரில் வசிக்­கி­றார். விருது பெற்­ற­தில் மகிழ்ச்சி அடை­வ­தா­கக் கூறிய திரு ஸ்ரீராம், தொழில்­நுட்­பத் தீர்­வு­க­ளால் சாதா­ரண ஊழி­யர்­கள் பெரி­தும்

பல­ன­டை­வ­தால் அத்­த­கைய தீர்­வு­களை உரு­வாக்­கு­வ­தில் இளம் தொழில்­நுட்­பர்­கள் முனைப்பு காட்டு­ வது நல்­லது என்று கூறி­னார்.

"தள­வாட இணை­யக் கட்­ட­மைப்பைக் கடல்­துறை, துறை­முக ஆணை­யம் இனி வரும் ஆண்­டு­களில் மேன்­மே­லும் முன்­னெ­டுத்­துச் செல்­லும்," என்றார் திரு ஸ்ரீிராம் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!