இணையப் பாதுகாப்பு நிபுணர்கள் தொடர்ந்து திறன்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்

அதி­க­ரித்­து­வ­ரும் இணைய மிரட்­டல்­க­ளுக்கு எதி­ராக இணை­யப் பாது­காப்பு நிபு­ணர்­கள் தொடர்ந்து தங்­கள் திறன்­களை மேம்­ப­டுத்­திக்­கொள்ள வேண்­டும் என்று தொடர்பு, தக­வல் மூத்த துணை அமைச்­சர் ஜனில் புதுச்­சேரி தெரி­வித்­துள்­ளார்.

புதிய தொழில்­நுட்­பங்­கள், வர்த்­தக முறை­க­ளுக்­குள் ஊடு­ரு­வும் ஆற்­றல் உடை­யோ­ருக்கு எதிராக இணை­யப் பாது­காப்பு நிபு­ணர்­கள் ஈடு­கொடுத்து செயல்­பட வேண்­டும் என அவர் வலி­யு­றுத்­தி­னார்.

“புதிய மின்­னி­லக்­கத் தொழில்­நுட்­பங்­கள் உரு­வாக்­கப்­பட்டு வரும் வேளை­யில், இணைய மிரட்­டல்­கள் உரு­மாறி வரு­கின்­றன,” என்று கூறிய அவர், தொழில்­நுட்­பக் கட்­ட­மைப்­புக்­குள் ஊடு­ருவி தர­வு­க­ளைத் திருட ஊடு­ரு­வி­கள் புதுப்­புது வழி­களைத் தேடிக்­கொண்டு இருப்­பதாகச் சொன்­னார்.

சிங்­கப்­பூர் இணை­யப் பாது­காப்பு ஆணை­யம் ஏற்­பாடு செய்த போட்டி ஒன்­றின் விருது நிகழ்ச்­சி­யில் நேற்று கலந்­து­கொண்டு பேசி­ய­போது டாக்­டர் ஜனில் இதைத் தெரி­வித்­தார்.

புதிய சாத­னங்­கள், வர்த்­தக முறை, தொழில்­நுட்­பங்­கள் அறி­முகப்­ப­டுத்­தப்­பட்டு வரும் வேளை­யில், இணை­யப் பாது­காப்பு சவால்­களும் தொடர்ந்து ஏற்­படும் என்­றார் அவர். எனவே, தனி­யார், அர­சாங்க அமைப்­பு­க­ளுக்கு இடையே பங்­கா­ளித்­துவ முயற்­சி­யில் ஈடு­பட வேண்­டி­ய­தன் முக்­கி­யத்­து­வத்தை டாக்­டர் ஜனில் வலி­யு­றுத்­தி­னார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!