தந்தை காட்டிய வழியில் முன்னேறிச் செல்லும் ஷாஹீத்

யுகேஷ் கண்­ணன்

செங்­காங் வட்­டா­ரத்­தின் வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக அடுக்­கு­மாடி கட்­ட­டங்­க­ளின்­கீழ் அமைந்­துள்ள பூப்­பந்து மைதா­னங்­களில் சிறு வய­தில் தனது தந்­தை­யு­டன் டென்­னிஸ் விளை­யாடி வந்த ஷாஹீத் அலாம், 24, தற்­போது அமெ­ரிக்­கா­வின் ஃபுளோரிடா மாநி­லத்­தில் அமைந்­து உள்ள கெய்­சர் பல்­

க­லைக்­க­ழ­கத்­துக்­காக

டென்­னிஸ் விளை­யாட இருக்­கி­றார்.

ஷாஹீத் சிறு­வ­னாக இருந்த போது பல விளை­யாட்­டு­களை விளை­யா­டும் வாய்ப்பை அவ­ரது தந்தை ஏற்­ப­டுத்­திக் கொடுத்­தார். ஆனால், டென்­னிஸ் விளை­யாட்­டில் இவர் சிறந்து விளங்­கி­ய­தால் அவ்­வி­ளை­யாட்­டுக்­கான முறை­யான பயிற்­சி­க­ளுக்­குத் தன்னை தன் தந்தை அனுப்­பி­ய­தாக அவர் கூறி­னார்.

டென்­னிஸ் விளை­யாட்டை முழு நேர­மாக விளை­யா­டு­வது குறித்த எண்­ணம் அவ­ருக்கு 2013ஆம் ஆண்­டுக்கு முன்பு ஏற்­ப­ட­வில்லை.

ஆனால், பத்து வயது, 12 வய­துக்­குட்­பட்ட போட்­டி­களில் நன்கு விளை­யாடி வந்த ஷாஹீ­துக்கு சிங்­கப்­பூர் டென்­னிஸ் சங்கத்தின் முழு­நேர டென்­னிஸ் திட்­டத்­தில் இணை­யும் வாய்ப்பு வழங்­கப்­பட்­டது.

அத்­திட்­டத்­துக்­கான சோதனை விளை­யாட்­டு­க­ளுக்கு 2011ஆம் ஆண்டு சென்­ற­போது காயம் கார­ண­மாக ஷாஹீத்தால் தேர்ச்சி பெற முடி­ய­வில்லை. இரண்­டா­வது வாய்ப்பு தன்­னைத் தேடி வந்­த­போது அதை இவர் நழு­வ­வி­ட­வில்லை.

அத்­திட்­டத்­தில் முன்பே இணைந்த விளை­யாட்­டா­ளர்­க­ளின் திற­மைக்கு இணை­யாக உயர வேண்­டு­மா­னால், பள்­ளி­யி­லி­ருந்து ஓர் ஆண்­டு­கா­லம் இடை­வேளை தேவை எனத் தானும் தனது குடும்­பத்­தா­ரும் ஒரு முடி­வுக்கு வந்­த­தாக ஷாஹீத் தெரி­வித்­தார்.

அத­னால், அப்­போது செயிண்ட் ஆண்ட்­ரூஸ் உயர்­நி­லைப்­பள்­ளி­யில் பயின்று வந்த ஷாஹீத் ஓர் ஆண்­டிற்கு பள்­ளி­யி­லி­ருந்து விடுப்பு எடுத்­துக்­கொண்­டார்.

அதன் பின்பு 2014ஆம் ஆண்­டில், சிங்­கப்­பூர் விளை­யாட்­டுப்

பள்­ளி­யில் அவர் சேர்ந்­தார்.

அங்­குள்ள கல்­வித்­திட்­டம் விளை­யாட்­டா­ளர்­க­ளுக்கு ஏற்ப நீக்­குப்­போக்­காக இருந்­தது தனக்கு மிக­வும் உத­வி­யாக இருந்­த­தென அவர் கூறி­னார்.

சிங்­கப்­பூர் விளை­யாட்­டுப்

பள்­ளி­யில் இரண்­டாம் ஆண்டு மாண­வ­ராக இருந்­த­போது, அனைத்­து­லக டென்­னிஸ் சங்­கம் நடத்­திய இளை­யர் ஆண்­கள் ஒற்­றை­யர் போட்­டி­யில் தங்­கப் பதக்­கத்தை அவர் வென்­றார். இப்­போட்­டி­யில் வென்ற முதல் சிங்­கப்­பூ­ரர் எனும் பெருமை இவ­ரைச் சேரும்.

அதே ஆண்­டில் சிங்­கப்­பூ­ரில் நடை­பெற்ற தென்­கி­ழக்­கா­சிய விளை­யாட்­டு­களில் 16 வயது இளை­ய­ராக சிங்­கப்­பூ­ரைப் பிர­தி­நி­தித்து இவர் விளை­யா­டி­னார்.

சிங்­கப்­பூர் விளை­யாட்­டுப்

பள்­ளி­யில் தொடர்ந்து 2020ஆம் ஆண்டு வரை விளை­யாட்டு மேலாண்­மைப் பாடத்­தில் தனது

பட்­ட­யக் கல்­வி­யைப் பயின்­றார் ஷாஹீத். டேவிஸ் கிண்­ணம், 2017, 2019ஆம் ஆண்­டு­களில் நடை­பெற்ற தென்­கி­ழக்­கா­சிய விளை­யாட்­டு­கள் எனப் பல போட்­டி­களில் அவர் பங்­கேற்­றார்.

தேசிய சேவை கார­ண­மாக இவ்­வாண்டு நடை­பெற்ற தென்­கி­ழக்­கா­சிய போட்­டி­களில் பங்­கேற்க முடி­யா­மல் போன­தென ஷாஹீத் குறிப்­பிட்­டார்.

ஆனால், தேசிய சேவை­யில் தனது மேலதிகாரிகள் தன்­னை­யும் தனது தேவை­க­ளை­யும் புரிந்து கொண்­ட­தால் பயிற்­சி­க­ளுக்­கும் போட்­டி­க­ளுக்­கும் செல்ல அனு­மதி வழங்­கி­ய­தாக ஷாஹீத் கூறி­னார்.

தேசிய சேவையை முடித்­த­பின் பயிற்­று­விப்­பா­ளர் ஆக­லாமா அல்­லது தொடர்ந்து டென்­னிஸ் விளை­யா­ட­லாமா என்ற கேள்வி தனக்­குள் எழுந்­த­போது, தன் குடும்­பத்­தா­ரு­டன் அதைப் பற்றி ஷாஹீத்

கலந்து ஆலோ­சித்­தார்.

இத்­தனை நாள் கடும் உழைப்பை 23 வய­தி­லேயே முடி­வுக்­குக் கொண்டு வரு­வது சரி­யா­காது என்று ஷாஹீ­தும் அவ­ரது குடும்­பத்­தா­ரும் தீர்­மா­னித்­த­னர்.

மறைந்த தனது தந்­தை­யும் இவர் தொடர்ந்து விளை­யாட வேண்­டும் என்றே விரும்­பி­யி­ருப்­பார் என ஷாஹீத் கூறி­னார்.

அமெ­ரிக்­கா­வில் உள்ள

பல்­க­லைக்­க­ழ­கத்­தில் விளை­யாடு

வதன் மூலம் நல்ல பயிற்சித்

திட்­டங்­க­ளை­யும் போட்­டித்­தன்மை மிக்க சூழல்­களில் விளை­யா­டும் திறன்­க­ளை­யும் பெற­லாம் என அவர் நம்­பு­கி­றார்.

எனவே, அவ்­வாறு செயல்­பட அவர் முடி­வெ­டுத்­துள்­ளார்.

அத்­து­டன், இதன்­வழி இளங்­கலைப் பட்­டம் பெறும் வாய்ப்­பும் கிட்­டும் என்­பதை உணர்ந்து அதற்­குத் தேவை­யான ஏற்­பா­டு­க­ளைச் செய்­தார்.

அமெ­ரிக்­கா­வில் விளை­யாட்டு

களுக்­கெ­னப் பெரும் கட்­ட­மைப்பு, நிதி, உப­காரச் சம்­ப­ளங்­கள்

போன்­றவை ஒதுக்­கப்­பட்­டுள்­ளன என்­றார் அவர்.

அனைத்­து­லக டென்­னிஸ்

மன்­றத்­தின் இளம் விளை­யாட்

டாளர்­க­ளின் தர­வ­ரி­சை­யைக் கண்டு தனது 18, 19ஆம் வய­து­களில் அமெ­ரிக்­கா­வில் உள்ள பல பல்­க­லைக்­க­ழ­கங்­கள் தன்னை நாடி­ய­தாக ஷாஹீத் தெரி­வித்­தார்.

ஆனால், அக்­கா­ல­கட்­டத்­தில் பட்­ட­யப்­ப­டிப்­பில் அவர் கவ­னம் செலுத்தி வந்­த­தா­லும் வெளி­நாட்­டில் படிக்க வேண்­டும் என்ற எண்­ணம் இல்­லா­த­தா­லும் அந்த

அழைப்­பு­களை அவர் ஏற்­க­வில்லை.

இத­னால், தனது 23 வய­தில் தானே முன்­வந்து அமெ­ரிக்­கா­வில் உள்ள பல பல்­க­லைக்­க­ழ­கங்­களை மின்­னஞ்­சல்­வழி தொடர்­பு­கொண்டு வாய்ப்பு கேட்க வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டது என ஷாஹீத் கூறி­னார்.

அவ்­வாறு தொடர்­பு­கொண்ட பல்­க­லைக்­க­ழ­கங்­களில், கெய்­சர் பல்­க­லைக்­க­ழ­கம் கல்வி கட்­ட­ணம், தங்­கும் செலவு என அனைத்­தை­யும் உள்ளடக்கிய உப­கா­ரச் சம்­பளத்தை வழங்­கி­ய­தாக அவர் குறிப்­பிட்­டார். பிற்­கா­லத்­தில் சிங்­கப்­பூ­ரில் சொந்த டென்­னிஸ் பயிற்­சிப் பள்ளி ஒன்­றைத் தொடங்க விரும்­பும் ஷாஹீத், அத்­திட்­டத்­திற்கு உத­வும் என்ற நம்­பிக்­கை­யில், வர்த்­தக நிர்­வா­கப் பட்­டக் கல்­வி­யைப் பயில இருக்­கி­றார்.

"டென்­னிஸ் விளை­யாட்டை உயர்­மட்ட நிலை­யில் விளை­யாட அதி­கப் பணம் செல­வா­கும். எனவே, இந்த உப­கா­ரச்

சம்­ப­ளத்­தைப் பெற்­றி­ருக்­கா­வி­டில் பயிற்­று­விப்­பா­ள­ராகி இருப்­பேன்" என ஷாஹீத் குறிப்­பிட்­டார்.

வெளி­நாட்­டில் படிக்­கச் செல்­வது சற்று பய­மாக இருந்­தா­லும் ஆவ­லு­டன் அதை எதிர்­பார்த்­துக் காத்­தி­ருப்­ப­தாக அவர் கூறி­னார். இந்த வாய்ப்பு கிடைத்­தது தனக்கு மிகுந்த மகிழ்ச்­சி­யை­யும் பெரு­மை­யை­யும் அளிப்­ப­தாக ஷாஹீத் தெரி­வித்­தார்.

தனக்கு அனைத்து வகை­யி­லும் ஆதரவு அளித்துவரும் அவ­ரது குடும்­பத்­தி­ன­ருக்கு இவர் தனது நன்­றி­க­ளைத் தெரி­வித்­துக்­கொண்­டார்.

தனது வாழ்க்கைப் பய­ணத்­தில் அவர்­களை முக்­கிய தூண்­க­ளாக அவர் கரு­து­கி­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!