கட்டுமானத் திட்ட நிர்வாகத்தின் மேம்பாட்டுக்காகப் பொறியாளர் கழகம் வழங்கும் $350,000 நன்கொடை

கட்­டு­மா­னத் திட்ட நிர்­வா­கத்­தின் மேம்­பாட்­டுக்­காக நன்­யாங் தொழில்­நுட்பப் பல்­க­லைக்­க­ழ­கம் மேற்­கொள்­ளும் ஆய்­வுப்­ப­ணி­க­ளுக்­குப் பொறி­யா­ளர் கழ­கம் $350,000ஐ நன்­கொ­டை­யாக வழங்­கி­யது.

கட்­டு­மான திட்ட மேம்­பாட்டு நிதிக்­காக, ஐ.இ.ஸ் வோங் யூ சியோங் ஆய்­வைத் தொடங்கி வைப்­ப­தற்கு இந்த நன்­கொடை பயன்­படும். மேலும், இத்­து­றை­யில் புது செயல்­மு­றை­களை அம­லாக்­கம் செய்­யும் நோக்­கின் அடிப்­

ப­டை­யில் கட்­டு­மா­னத் திட்ட மேலா­ளர்­க­ளின் திறன்­களை மேம்­ப­டுத்­து­வ­தற்­காக இரண்டு முது­கலை ஆய்­வுத்­திட்­டங்­கள் மேற்­கொள்­ளப்­படும். அவற்­றுக்­கும் இந்த நன்­கொடை பயன்­படும்.

இரண்டு ஆண்­டு­க­ளுக்கு முன் திரு வோங் யூ சியோங் பொறி­யா­ளர் கழ­கத்­திற்கு ஒரு மில்­லி­யன் வெள்ளி நன்­கொடை வழங்­கி

இ­ருந்­தார்.

அந்த நன்­கொ­டை­யின் ஒரு பகு­தியே இந்த ஆய்­வுப்­ப­ணி­

க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது.

ஒவ்­வொரு திட்­டப்­ப­ணிக்­கும் பொறி­யி­யல் முனை­வர் பட்­டம் அல்­லது முது­கலை பட்­டம் பெற்ற ஒரு முழு நேர ஆய்­வா­ளர் தேர்ந்­தெ­டுக்­கப்­ப­டு­வார்.

தேர்­தெ­டுக்­கப்­பட்ட நபர்­கள் நன்­யாங் தொழில்­நுட்பப் பல்­க­லைக்

­க­ழக்­கத்­தின் கட்­டு­மான நிர்­வாக நிபு­ணர்­க­ளு­டன் பணி­பு­ரிந்து இத்­து­றைக்கு ஏற்ற சிறந்த செயல்­

மு­றை­க­ளைப் பரிந்­துரை செய்­வ­தோடு அவற்றை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­கான ஆத­ர­வை­யும் வழங்­கு­வார்­கள்.

பேச்­சுத்­தி­றமை, தலை­மைத்­து­வம் மற்­றும் நிர்­வாக திறன்­க­ளைக் கொண்ட இளம் பொறி­யா­ளர்­களை உரு­வாக்­கும் இளம் பொறி­யா­ளர் தலை­மைத்­துவ திட்­டத்­தின் திறப்பு விழா­வில் இந்­தக் காசோலை வழங்­கப்­பட்­டது.

தேசி­யத் தொழிற்­சங்க காங்­கி­ர­ஸின் உதவி தலை­மைச் செய­லா­ளர் மெல்­வின் யோங் இவ்­வி­ழா­வில் கலந்­து­கொண்­டார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!