அதிபர் ஹலிமா யாக்கோப்புடன் கொசோவோ அதிபர் சந்திப்பு

சிங்­கப்­பூ­ருக்கு வருகை மேற்­கொண்ட கொசோவோ அதி­பர் ஜோசா ஒஸ்­மானி சட்­ரியூ, இஸ்­தா­னா­வில் அதி­பர் ஹலிமா யாக்­கோப்பை நேற்று சந்­தித்­தார்.

சிங்­கப்­பூ­ருக்­கும் கொசோ­வோ­வுக்­கும் இடை­யி­லான நல்­லு­றவை இரு தலை­வர்­களும் மறு­உ­று­திப்­படுத்­தி­ய­தாக வெளி­யு­றவு அமைச்சு வெளி­யிட்ட அறிக்­கை­தெரி­வித்­தது.

இரு நாடு­களும் ஒத்­து­ழைக்­கக்­கூ­டிய புதிய அம்­சங்­கள் குறித்­தும் இவ்­வி­ரு­வ­ரும் ஆராய்ந்­த­னர்.

நாடா­ளு­மன்ற நாய­கர் டான் சுவான் ஜின், பிர­த­மர் அலு­வ­லக அமைச்­சர் மாலிக்கி ஒஸ்­மா­னை­யும் கொசோவோ அதி­பர் சந்­தித்­தார். இருநாட்டு உற­வைப் பற்றி பேசிய அவர்­கள், வட்­டார, அனைத்­து­லக நில­வ­ரம் குறித்து கருத்­து­களைப் பரி­மா­றிக்­கொண்­ட­தாக வெளி­யு­றவு அமைச்சு அறிக்கை விளக்கியது.

கொசோவோ அதி­பர் ஒஸ்­மானி சட்­ரி­யூ­வின் அதி­கா­ரத்­து­வப் பயணம் கடந்த சனிக்­கி­ழமை தொடங்­கி­யது. அதை முடித்­துக்­கொண்டு நேற்று சிங்­கப்­பூ­ரி­ல் இருந்து அவர் புறப்­பட்­டார்.

அதி­பர் ஹலிமா வெளி­யிட்ட ஃபேஸ்புக் பதிவு ஒன்­றில், "சிங்­கப்­பூ­ருக்கு முதன்­மு­றை­யாக பயணம் மேற்­கொண்ட கொசோவோ அதி­பர் டாக்­டர் ஜோசா ஒஸ்மானியை நான் சந்­தித்­தேன்.

"2016 டிசம்­பர் 1ஆம் தேதி அர­ச­தந்­திர உற­வு­கள் ஏற்பட்டதில் இருந்து இரு நாடு­களும் நல்லுறவு­களைக் கொண்­டுள்­ளன.

"அதி­பர் ஒஸ்­மா­னியை சிங்கப்பூ­ருக்கு வர­வேற்­ற­தில் நான் மகிழ்ச்சி அடை­கி­றேன். எதிர்­காலத்தில் அவரை மீண்­டும் சந்திக்க ஆவ­லு­டன் உள்ளேன்," என்று கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!