தமிழர் அடையாளம் காக்க தமிழ்மொழி கற்றல் அவசியம்

மோன­லிசா

தமி­ழர்­க­ளின் அடை­யா­ளத்தை முன்­னி­றுத்த தமிழ்­மொ­ழிக் கற்­றல் அவசி­யம் என்று தொடர்பு, தக­வல், சுகா­தார மூத்த துணை அமைச்­சர் டாக்­டர் ஜனில் புதுச்­சேரி வலி­யுறுத்­திக் கூறி­னார்.

மொழி­யும் கலா­சா­ர­மும் ஒன்­றுக்­கொன்று பின்­னிப் பிணைந்­தவை என்று குறிப்­பிட்ட அவர், இன்­றைய இளை­ஞர்­கள் தமிழ்­மொ­ழியை முழு­மை­யா­கக் கற்று அதன் மர­பு­டைமை கூறு­க­ளை­யும் கலா­சா­ரப் பின்­ன­ணி­யை­யும் அறிந்­து­கொள்ள வேண்­டி­யது மிக­வும் அவ­சி­ய­மான ஒன்று என்று தெரிவித்தார்.

சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­கழக தமிழ்ப் பேர­வை­யின் செயற்­குழு ஏற்­பாட்­டில் ‘நாளைய தலை­வர்­க­ளின் குரல்’ என்ற கருப்­பொரு ளு­டன் ‘சிங்­கப்­பூர் தமிழ் இளை­யர் மாநாடு 2022’ மெய்­நி­கர் வழி நடக்­கிறது.

இன்று முடி­வ­டை­யும் மாநாட்­டில் 16 முதல் 27 வரை வய­துள்ள உயர்­நி­லைப்­பள்ளி, புகுமுக வகுப்பு, பல்­க­லைக்­க­ழக மாண­வர்­கள், முழு­நேர தேசிய சேவை­யா­ளர்­கள், இளம் ஊழி­யர்­கள் கலந்­து­கொள்­கி­றார்­கள்.

அவர்­க­ளி­டையே நேற்று உரை­யாற்­றிய டாக்­டர் ஜனில், ஒவ்­வோர் இளை­ய­ரும் தமிழ்ச் சமூ­கத்­திற்குத் தன்­ பங்கை எப்­படி எப்­ப­டி­யெல்­லாம் ஆற்­ற­லாம் என்­பது பற்றி ஆராய வேண்­டும் என்றார்.

மொழி கற்­றல் என்­பது கல்­வி சார் பாட­மாக மட்­டும் அல்­லா­மல் கலா­சார அனு­ப­வ­மா­க­வும் இருக்க வேண்­டும் என்ற அவர், மொழி செழித்து வளர கற்­ற­லும் அனு­பவமும் பக்க பலம் என்றார்.

சிங்­கப்­பூ­ரின் ஒருங்­கி­ணைந்த சமூ­கத்­தில் தமி­ழர்­க­ளின் அடை­யா­ளத்தை நிலை­நி­றுத்த தமிழ்­மொழி­யின் பல்­வேறு சாராம்­சங்­களை அலசி ஆராய்ந்து அவற்றைப் பய­னுள்ள முறை­யில் இளை­ஞர்­களி­டம் கொண்டு சேர்க்க வேண்­டும் என்று கூறிய டாக்­டர் ஜனில், இதைப் பொறுத்­த­வரை இந்த மாநாடு போன்ற முயற்­சி­கள் வர­வேற்­கத்­தக்­கவை என்­றார்.

சிங்­கப்­பூர் தமிழ் இளை­யர் மாநாடு 2012 முதல் ஈராண்­டுக்கு ஒரு முறை என இந்த ஆண்டு நான்­கா­வது முறை­யாக நடக்­கிறது.

மாநாட்டின் நிறைவு விழா வரும் 9ஆம் தேதி மாலை சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக அரங்கில் நடக்கும்.

இத­னி­டையே, இந்த மாநாடு பற்றி கருத்து தெரி­வித்த தேசிய பல்­க­லைக்­க­ழக தமிழ்ப் பேர­வை­யின் தலை­வர் விஜ­ய­ராஜ் முத்­துக்­கு­ம­ரன், 23, சிங்­கப்­பூர் தமிழ் இளை­யரின் ஆர்­வத்­தை­யும் மொழி­ ஆற்­ற­லை­யும் தூண்­டு­வ­தற்­கான முயற்­சியே இந்த மாநாடு என்­றார்.

தமிழ் மொழி, கலாசா­ரம் சார்ந்த வர­லாற்­றுப் பதி­வு­க­ளை­யும் தர­வு­களை­யும் ஆராய்ந்து அறிய உத­வும் தள­மா­க­வும் இந்த மாநாடு அமை­யும் என்­றும் அவர் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!