உயர்கல்வி மாணவர்களுக்கு $165,000 உதவி; சிவதாஸ்-இந்து அறக்கட்டளை ஊக்கம்

யுகேஷ் கண்­ணன்

உயர்­கல்வி நிலை­யங்­களில் பயின்று வரும் 106 மாண­வர்­க­ளுக்கு ஏறக்­கு­றைய $165,000 மதிப்­பி­லான ஊக்­கத் தொகை­கள் சிவ­தாஸ்-இந்து அறக்­கட்­டளை வாரிய கல்வி நிதி செயற்­கு­ழு­வால் ஜூலை 2ஆம் தேதி வழங்­கப்­பட்­டன.

1937ஆம் ஆண்டு இந்­தி­யா­வி­லி­ருந்து சிங்­கப்­பூ­ருக்கு குடி பெயர்ந்து, ஆரம்­பத்­தில் ஆசி­ரி­ய­ரா­கப் பணி­பு­ரிந்து, பின்பு பத்­தி­ரி­கை­யா­ள­ராக சேவை­யாற்றி, இறு­தி­யில் சிறந்த முத­லீட்­டா­ள­ராக வலம் வந்­தார் திரு சிவ­தாஸ்.

அவர் இறப்­ப­தற்கு முன்பு 2009ஆம் ஆண்­டில் தனது சொத்து ­க­ளி­லும் பங்­கு­க­ளி­லும் பெரும் பகு­தியை இந்து மாண­வர்­க­ளுக்கு உதவ கோரி அறக்­கட்­டளை வாரி­யத்­தி­டம் ஒப்­ப­டைத்­தார்.

அவ­ரது விருப்­பத்தை நிறை­வேற்றும் நோக்­கு­டன் சிவ­தாஸ்-இந்து அறக்­கட்­டளை வாரிய கல்வி நிதி தொடங்­கப்­பட்­டது.

இந்­நிதி 2011ஆம் ஆண்­டி­ல் ­இருந்து 2021ஆம் ஆண்­டு­வரை ஏறத்­தாழ 2,300 மாண­வர்­க­ளுக்கு $4.6 மில்­லி­யன் வரை­யி­லான நிதி­உத­வியை வழங்­கி­யுள்­ளது.

நிகழ்ச்­சிக்கு சிறப்பு விருந்­தி­ன­ராக வந்­தி­ருந்த கலா­சார, சமூக, இளை­யர்­துறை அமைச்சு மற்­றும் சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்சு ஆகி­ய­வற்­றின் மூத்த நாடா­ளு­மன்ற செய­லா­ளர் எரிக் சுவா, அனைத்து மாண­வர்­க­ளுக்­கும் ஊக்­கத்­தொ­கை­களை வழங்­கி­னார்.

சிவ­தாஸ்-இந்து அறக்­கட்­டளை வாரிய கல்வி நிதிச் செயற்­கு­ழு­வின் தலை­வ­ரான நா. புரு­ஷோத் தமன், 72, தொழில்­நுட்ப கல்­விக்­க­ழ­கம், பல­து­றைத் தொழிற்­கல்­லூரி, தனி­யார், பொது பல்­க­லைக்­க­ழ­கங்­கள் ஆகிய கல்வி நிலை­யங்­க­ளைச் சேர்ந்த மாண­வர்­க­ளுக்கு இச்­செ­யற்­குழு இந்த ஊக்­கத்­தொ­கை­ களின் வழி உதவ முனை­கிறது என்று தெரி­வித்­தார்.

இந்த ஊக்­கத்­தொ­கை­கள் இம்­மா­ண­வர்­க­ளுக்கு பள்ளி கட்­ட­ணத்­தைச் செலுத்­து­வது, கணினி வாங்­கு­வது, படிப்­பிற்­குத் தேவை­யான இதர பொருள்­களை வாங்குவது போன்ற செல­வு­க­ளுக்கு உத­வும் என அவர் கூறி­னார்.

“இதுபோன்ற ஊக்­கத்­தொ­கை­கள் வழங்­கப்­ப­டு­வ­தால் மாண­வர்­கள் ஊக்­கம் பெற்று கல்­வி­யில் சிறந்து விளங்க முனை­வார்­கள்.

“இத­னால், குடும்­பங்­களில் அடுத்து வரும் தலை­மு­றை­யி­ன­ரை­யும் இவர்­கள் நன்கு கல்வி கற்க ஊக்­கு­விப்­பர்,” என்று நம்­பிக்கை தெரி­வித்­தார் இந்து அறக்­கட்­டளை வாரி­யத்­தின் தலைமை நிர்­வாக அதி­காரி திரு ராஜ­சே­கர், 60.

வாழ்­நாள் கற்­றல் மிக­வும் அவ­சி­யம் என கரு­து­கி­றார் இந்­நி­கழ்ச்­சி­யில் ஊக்­கத்­தொ­கைப் பெற்ற ஒரு­வ­ரான டேவிட் ஆரோக்­கி­ய­சாமி, 50.

இவர் தெமா­செக் பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யில் பகுதி நேர­மாக பாது­கா­வல், வேலை­யி­டப் பாது­காப்பு, ஆரோக்­கி­யம் எனும் துறையில் பட்­டயக் கல்வி பயின்று வரு­கி­றார். சிஸ்கோ நிறு­வ­னத்­தில் பணி­பு­ரி­யும் இவர், “எனது குடும்­பத்­தின் ஆத­ர­வோடு இவ்­வ­ய­தி­லும் தொடர்ந்து கல்வி கற்று வரு­கி­றேன். எனது கடின உழைப்­புக்கு இந்த ஊக்­கத்­தொ­கை­யின் வழி அங்­கீ­கா­ரம் கிடைத்­துள்­ளது. எனக்கு இந்த உதவி கிடைத்­துள்­ள­தைப் போல், நானும் என்­னால் முடிந்த உத­வியை சமூ­கத்­திற்­குத் தொடர்ந்து செய்­வேன்,” என்று குறிப்­பிட்­டார்.

நீ ஆன் பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யில் தமிழ் கல்­வி­யு­டன் கூடிய ஆரம்­பக்­கால கல்வி பட்­ட­யப்­ப­டிப்­பின் முத­லாம் ஆண்­டில் பயின்று வரும் சரண்யா ஆறு­மு­கம், 20, தன் குடும்­பத்­தில் தனது தந்தை ஒரு­வர் மட்­டுமே வேலை செய்து வரு­வ­தால், அவ­ரது பாரத்­தைக் குறைக்க இந்த ஊக்­கத்­தொகை மிக­வும் உத­வி­யாக இருக்­கும் என கூறி­னார்.

சிங்­கப்­பூர் சமூக அறி­வி­யல் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் வான்­வெளி அமைப்­பு­கள் இளங்­கலை பட்­டப் படிப்­பின் முத­லாம் ஆண்டு மாண­வ­ரான ம. செல்­வ­க­ண­பதி, 24,

இது­போன்ற ஊக்­கத்­தொ­கை­கள் நமது நிதிச் சுமை­க­ளைக் குறைப்­ப­தோடு கல்­வி­யில் சிறந்து விளங்க வேண்­டும் என்ற உத்­வே­கத்­தை­யும் ஏற்படுத்துகின்றன என்று கருதுகிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!