கம்பீரமாய் களமிறங்கும் காற்பந்தாட்ட வீராங்கனைகள்

காற்பந்தாட்டக் களத்தில் கனவுகளுடனும் களைப்பறியா கால்களுடனும் அடியெடுத்து வைக்கிறார்கள் இந்தப் பெண்கள். தங்களின் முழுநேரப் பணிகளுக்கு இடையே காற்பந்து உலகிலும் சாதிக்க வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் ஓயாது ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.

சிங்கப்பூர் பிரிமியர் லீக் பெண்கள் காற்பந்துப் போட்டியில் கலக்கிக்கொண்டிருக்கும் இந்த நான்கு காற்பந்து வீராங்கனைகள் தங்களின் உழைப்பும் உந்துசக்தியும் நிறைந்த காற்பந்துப் பயணத்தைப் பற்றி நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்கள்.

தந்தை காட்­டிய வழி­யில் செல்ல ஆசை

காற்­பந்து பயிற்றுவிப்பாளரான தனது தந்­தை­யைப் பயிற்சி வகுப்பு ­க­ளின்­போது பார்த்­துப் பார்த்­துத் தனது காற்­பந்­தாட்ட ஆர்­வத்தை வளர்த்­துக்­கொண்­ட­தாக 25 வயது முனீரா முக­மது கூறுகிறார். தற்­போது இவர் நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் கணினி அறி­வி­யல் பொறி­யி­யல் துறை­யில் பட்­டப்­ப­டிப்பு படிக்­கி­றார்.

“நான் நான்கு வய­தாக இருந்­த­போதே சிறு­வர்­க­ளுக்­கான காற்­பந்­துப் பயிற்­சிப் பயி­ல­ரங்­கில் என் தந்தை என்­னைச் சேர்த்­தார்.

“ஒரு காற்பந்து வீராங்­க­னை ஆவதற்கு அவ­ரின் உட­லும் உள்­ள­மும் உறு­தி­யு­டன் இருக்க வேண்­டி­ய­தன் அவ­சி­யத்தை அவர் வலி­யு­றுத்­தி­ய­து­டன் எனக்­குப் பல்­வேறு பயிற்சிகளை அளித்­தார்,” என்­றார் முனீரா. லயன் சிட்டி சேய்லர்ஸ் அணிக்­காக விளை­யா­டும் முனீரா, பெண்­க­ளின் காற்­பந்­துப் போட்டி ­க­ளுக்கு அண்­மை­யில் ஆத­ரவு அதி­க­ரித்­து­ வ­ரு­வது குறித்­தும் பேசி­னார். சிங்­கப்­பூர் பிரி­மி­யர் லீக் பெண்­கள் காற்­பந்­துப் போட்­டிக்­குப் பிர­தான ஆத­ர­வா­ள­ராக டெலாய்ட் நிறு­வ­னம் $300,000 வெள்­ளியை வழங்­கி­யுள்­ளது.

“பெண்­கள் காற்­பந்­துப் போட்டி ­க­ளைக் காணப் பொது­மக்­க­ளுக்கு ஆர்­வமோ ஆசையோ இருந்­த­தில்லை. பொது­வாக போட்­டி­களின்­போது அரங்கில் பெரும்பாலும் காலி இடங்களைப் பார்ப்­பது ஏமாற்­றத்­தையே தந்­தது.

“தற்­போது டெலாய்ட் நிறு­வ­னத்­தின்ஆதரவுடன் அனைத்து போட்­டி­களும் யூடி­யூப் நேர­லை­யில் ஒளி­ப­ரப்­பப்­ப­டு­வ­தால் முன்­பை­விட அதி­கப் பார்­வை­யா­ளர்­கள் போட்டி­யைப் பார்க்­கி­றார்­கள். இது எங்­க­ளுக்கு ஊக்­கத்­தை­யும் உற்­சா­கத்­தை­யும் அளித்­துள்­ளது,” என்­றார் முனீரா. இந்­தக் காற்­பந்­துப் பரு­வத்­தில் வெற்­றி­யா­ளர்­க­ளுக்கு 25,000 வெள்­ளி­யும் இரண்­டாம், மூன்­றாம் இடத்­தில் வரு­வோ­ருக்­கு $10,000, $7,500 தொகையும் வழங்­கப்­ப­ட­வுள்­ளன.

வல்லவனுக்கு பிளாஸ்டிக் பாட்­டில்கூட ஆயுதம்தான்

சிறு­வ­ய­தில் தன் உற­வி­னர் வீட்டு சிறார்­க­ளு­டன் பிளாஸ்டிக் பாட்­டிலை உதைத்­துக் காற்­பந்து விளை­யா­டி­ய­தாக தற்­போது தொடக்­கப்­பள்­ளி­யில் உடற்­ப­யிற்சி ஆசி­ரி­ய­ரா­கப் பணி­யாற்­றும் எம் மோனிஷா நாயர், 27, நினை­வு­கூர்ந்­தார்.

“காற்­பந்து விளை­யாட்­டின் விதி­மு­றை­க­ளைப் பற்றி அறிந்­தி­ராத அந்த வய­தில்­கூட எங்­க­ளின் கைகளை முது­கின் பின்­னால் கட்­டிக்­கொண்டு விளை­யா­டி­னோம். சிறு­மி­யா­கத் தொலைக்­காட்­சி­யில் நான் கேலிச்­சித்­தி­ரங்­க­ளை­விட காற்­பந்து விளை­யாட்­டு­க­ளைத்­தான் அதி­கம் பார்த்­தேன்,” என்றார் மோனிஷா.

சிங்­கப்­பூர் பிரி­மி­யர் லீக் பெண்­கள் காற்­பந்­துப் போட்­டிக்­காக தியோங் பாரு அணி­யில் விளை­யா­டும் இவர், இரண்டு ஆண்டு

­க­ளுக்­குப்­பின் தன் அணி­யி­ன­ரு­டன் பயிற்சி மேற்­கொள்­வ­தும் போட்­டி­களில் கலந்துகொள்­வ­தும் மிகுந்த மகிழ்ச்சி அளிப்­ப­தா­கக் கூறி­னார். தன் அணி­யி­னரில் சிலர் கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­தால் முழு­மூச்­சுடன் பயிற்சி மேற்­கொள்­வ­தில் சிர­மம் ஏற்­பட்­டுள்­ள­தா­க­வும் அவர்­க­ளின் உடல் நிலை­யைக் கருத்­தில் கொண்டு பாது­காப்­பு­டன் பயிற்­சி­கள் மேற்­கொள்­ளப்­

ப­டு­வ­தா­க­வும் அவர் பகிர்ந்­து­கொண்­டார். சிங்­கப்­பூர் பிரி­மி­யர் லீக் காற்­பந்­துப் போட்­டி­யின் ஆண் விளை­யாட்­டா­ளர்­க­ளுக்­குத் தரப்­

ப­டு­வ­து­போல் பெண்­க­ளுக்கு மாதச் சம்­ப­ளம் ஏதும் தரப்­ப­டு­வ­தில்லை என்­றார் மோனிஷா.

விருப்­ப அடிப்­ப­டை­யில் விளை­யாடி வந்த தங்­க­ளுக்கு, 300,000 வெள்ளி பரி­சுத்­தொ­கை­யு­டன் டெலாய்ட் நிறு­வ­னம் தன்­னைப் பிர­தான ஆத­ர­வா­ள­ராக அறி­வித்­தி­ருந்­தது தமக்கு ஊக்கம் அளிப்­ப­தா­க­ இவர் கூறுகிறார்.

பெற்­றோ­ரின் ஆத­ர­வால் பிறந்த சாதனை வேட்கை

அம்­மா­வுக்கு விளை­யாட்­டு­களில் அதீத ஆர்­வம். தந்தை காற்­பந்து பயிற்றுவிப்பாளர். இவ்­வி­ரு­வர் தந்த ஊக்­கத்­தால் காற்­பந்து விளை­யாட்­டின் மீது மாளவிகா வுக்கு தீராத மோகம்.

ஸ்டில் ஏரி­யன் அணிக்­காக விளை­யா­டும் 27 வயது மாள­விகா ஹேமந்த், தள­வா­டத் துறையில் தனி­யார் நிறு­வ­னம் ஒன்றில் பணி­பு­ரிந்து வரு­கி­றார்.

“என்­னு­டைய பட்­டப்­ப­டிப்பு முடிந்த பிறகு ஜகார்த்­தா­வில்­

இ­ருந்து சிங்­கப்­பூ­ருக்கு எங்கள் குடும்பம் குடிபெயர்ந்தது. மாண­வ­ராக இருந்த நாள்­க­ளி­லும் சரி தற்­போது வேலை செய்­து­வ­ரும் காலத்­தி­லும் சரி காற்­பந்து பயிற்­சிக்­காக நேரத்தை ஒதுக்­கு­வது சவா­லான ஒன்­றா­கவே இருக்­கிறது.

“குடும்­பத்­திற்­கா­க­வும் நண்­பர்­க­ளுக்­கா­க­வும் எனக்­கா­க­வும் தனிப்­பட்ட நேரம் கிடைப்­பது அரிது.

“இருந்­தா­லும் பயிற்­சிக்­குப் பிறகோ போட்­டிக்­குப் பிறகோ கிடைக்­கும் மகிழ்ச்­சி­யும் மன­

நி­றை­வும் அள­விட முடி­யா­தவை,” என்று கூறுகிறார் இவர்.

இந்த லீக் போட்­டிக்­குத் தமது அணி சிறப்­பா­கத் தன்­னைத் தயார்­ப­டுத்தி உள்­ள­தா­க­வும் வெற்­றிக்­க­னி­யைக் கைப்­பற்­றும் நம்­பிக்கை தங்களுக்கு உள்­ள­தா­க­வும் இவர் கூறுகிறார்.

வாய்ப்­பைத் தானே உரு­வாக்­கிக்­கொண்டார்

சிறு­வ­ய­தி­லி­ருந்தே சரண்­யா­வுக்கு காற்­பந்து விளை­யாட்­டில் அதீத ஆர்­வம். ஆனால் அந்­தக் கால­கட்­டத்­தில் பெண் பிள்­ளை­க­ளுக்­கென பிரத்தி­யேக பயிற்சி ஏதும் அவ­ர் படித்த தொடக்­கப்­பள்­ளி­யில் இல்லை. இருப்­பி­னும் தன் ஆர்­வத்­தைச் சரண்யா கைவி­டு­வ­தாக இல்லை.

தன்­னு­டைய சகோ­த­ரர், நண்­பர்­கள் ஆகி­யோ­ரு­டன் விளை­யா­டத் தொடங்­கி­னார் சரண்யா. இன்று சிங்­கப்­பூர் பிரி­மி­யர் லீக் பெண்­கள் காற்­பந்­துப் போட்­டி­யில் தியோங் பாரு அணிக்­காக விளை­யா­டுகிறார் இவர்.

தனி­யார் நிறு­வ­னத்­தில் மென்­பொ­ருள் பொறி­யா­ள­ரா­கப் பணி­பு­ரி­யும் இவர், “முறை­யா­கக் காற்­பந்து விளை­யாட்­டைக் கற்­றுக்­கொள்ள வேண்­டும் என்ற ஆசை­யில், பெண்­க­ளுக்­கெ­னக் காற்­பந்­தாட்­டப் பயிற்சி அளிக்­கும் தொடக்­கக் ­கல்­லூ­ரியை நான் தேர்ந்­தெ­டுத்­தேன். பிறகு, என் பல்­க­லைக்­க­ழக நாள்­களில் என்­னு­டைய பயிற்றுவிப்பாளரின் ஊக்குவிப்­பால் இந்த அணி­யில் சேர்ந்­தேன். கடந்த ஐந்து ஆண்­டு ­க­ளாக அணிக்­காக விளை­யாடி வரு­கி­றேன்,” என்று கூறி­னார்.

காற்­பந்து விளை­யாட்­டில் ஆர்­வ­முள்ள பெண் பிள்­ளை­க­ளுக்­குத் தொடக்­கப்­பள்­ளி­களும் உயர்­நி­லைப்­பள்­ளி­களும் காற்­பந்­தாட்­டப் பயிற்சி பெறும் வாய்ப்பை உரு­வாக்­கித் தரு­வது அவ­சி­யம். விளை­யாட்­டுத் துறை­யில் ஆண், பெண் என்ற பிரி­வி­னை­யைத் தவிர்த்து திற­மைக்கு முக்­கி­யத்­து­வம் அளிப்­பதே சிறப்பு என்­றும் சரண்யா கூறுகிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!