பழந்தமிழரின் வரலாற்றைப் பதிவு செய்யும் கலைக் கண்காட்சி

அடை­யாள அர­சி­யலை (Identity Politics) மையப்­ப­டுத்­தும் கலை வடி­வங்­களை உரு­வாக்­கு­வ­தில் இளை­யர் ப்ரி­ய­கீதா டி, 30 கைதேர்ந்­த­வர். தனது படைப்­பு­களில் மர­பு­டைமை சார்ந்த விவ­ரங்­க­ளை­யும் புலம்­பெ­யர்ந்த நினைவு ­க­ளை­யும் பதிவு செய்­வ­தில் கவ­னம் செலுத்­தி­யும் வரு­கி­றார் காட்­சிக் கலை­கள் தொழி­ல­ரான (Visual Arts Practitioner) இவர்.

மலா­யா­வின் பிரிட்­டிஷ் கால­னி­யத்­துவ ஆட்­சிக்­கா­லத்­தில் ரப்­பர் தோட்­டத்­தில் வேலை பார்த்த தமி­ழர்­க­ளின் வர­லாற்­றை­யும் அவர்­களின் வாழ்க்­கை­மு­றை­யை­யும் பதிவு செய்­யும் வித­மாக ‘ஃபர்­கெட் மி, ஃபர்­கெட் மி நாட்’ (Forget Me, Forget Me Not) என்ற கலைக் கண்­காட்­சி­யைப் படைத்­துள்­ளார் இவர்.

கடந்த மே 21ஆம் தேதி முதல் இம்­மா­தம் 16ஆம் தேதி வரை முந்தைய கில்மன் ராணுவ முகாம் பகுதியில் நடை­பெற்­று­வ­ரும் இந்­தக் கண்­காட்சி குறித்து கூறும் ப்ரி­ய­கீதா, “அந்­தக் காலத்­தின் அறி­யப்­ப­டாத சாமா­னிய தமி­ழர்­களின் வர­லாற்றை வெளிச்­சத்­திற்­குக் கொண்­டு­வ­ரும் முயற்­சியே இந்தக் கண்­காட்சி.

“பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சி யின்கீழ் மலாயாவின் ரப்பர் தோட்டத் தில் வாழ்ந்த தமி­ழர்­க­ளின் வாழ்க்­கை­மு­றை­யைப் பற்றி இன்­றைய தலை­மு­றை­யி­னர் அறிந்­திட வேண்­டும். அதற்­காக ‘சிஜிஐ’ தொழில்­நுட்ப உத்­தி­யைப் பயன்ப­டுத்­திச் சுவ­ரில் வரை­ப­டங்­க­ளாக, உயர் ரக துணி­யில் அச்­சுப்­ப­டங்­க­ளாக, காணொ­ளி­க­ளாக, ‘லேட்டெக்ஸ்’ எனப்­படும் நீண்ட காலம் நீடிக்­கும் ரப்­ப­ரில் அவர்­க­ளின் மாதி­ரிப் படங்­களை அச்­சிட்டு காட்­சிப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றேன்,” என்று கூறுகிறார். இந்த மாதி­ரிப் படங்­கள் தொங்­கும் தூங்கு மஞ்­சம் (hammock) வடி­வில் மிக வித்­தி­யா­ச­மாக அமைந்­துள்­ளது.

ஓராண்­டிற்­கும் மேலாக வர­லாற்­றுப் பதி­வு­கள், ஆராய்ச்­சிக் கட்­டு­ரை­கள், கால­னித்­து­வ ஆவ­ணக் காப்­ப­கங்­கள் போன்றவற்றின் மூலம் கண்­காட்­சிக்­குத் தேவை­யான தக­வல்­க­ளைத் தான் திரட்­டி­ய­தாக ப்ரி­ய­கீதா குறிப்­பிட்­டார்.

அந்­தக் காலத்­தில் வாழ்ந்த தமி­ழ­ரின் மகள் ஒரு­வ­ரைச் சந்­தித்­துப் பேசி­ய­தன் மூலம் பல அரிய விவ­ரங்­க­ளை­யும் தான் தெரிந்­து­கொண்­ட­தா­கத் தெரி­விக்கிறார்.

கடந்த 2017ஆம் ஆண்­டில் வீவக அடுக்­கு­மா­டிக் கட்­ட­டப் படிக்­கட்­டு­க­ளைத் தங்­க­மு­லாம் பூசிய தாள்­களைக் கொண்டு அலங்­க­ரித்­த­தால் தான் வெகு­வாக விமர்­சிக்­கப்­பட்­ட­தாக ப்ரி­ய­கீதா பகிர்ந்­து­கொண்­டார்.

சமூ­கத் தளங்­களில் இவ­ரின் செயல் பர­வ­லா­கப் பேசப்­படுகிறது.

“என்­னு­டைய படைப்­பு­கள் பல­வாறு விமர்­சிக்­கப்­பட்­டன. மன­தைப் புண்­ப­டுத்­திய விமர்­ச­னங்­க­ளி­லி­ருந்து மீண்­டு­வ­ரு­வது கடி­ன­மாக இருந்­தது. இருப்­பி­னும் நோக்­கம், பின்­னணி, வேலைப்­பா­டு­கள் என ஒவ்­வொரு கலைப் படைப்­பும் எனக்கு மிகுந்த மகிழ்ச்­சி­யை­யும் மன­நி­றை­வை­யும் அளித்து வரு­கிறது. தொடர்ந்து இத்­து­றை­யில் புத்­தாக்­கச் சிந்­த­னை­யு­டன் பல ஆக்­க­பூர்­வ­மான கலைப் படைப்­பு­களை உரு­வாக்­கு­வேன்,” என்று உறு­தி­யா­கக் கூறு­கி­றார் ப்ரியகீதா.

செய்தி: மோன­லிசா

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!