மேலும் 12,784 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று

சிங்­கப்­பூ­ரில் நேற்­றைய நில­வ­ரப்­படி மேலும் 12,784 பேருக்கு

கொவிட்-19 கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ளது. நேற்று முன்­தி­னம் பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை 5,946ஆகப் பதி­வா­னது.

அதை­விட நேற்­றைய பதிவு இரண்டு மடங்­கிற்­கும் அதி­கம்.

கடந்த செவ்­வாய்க்­கி­ழமை பதி­வான பாதிப்­பட்­டோர் எண்­ணிக்­கை­யை­வி­ட­வும் (11,504) நேற்­றைய எண்­ணிக்கை அதி­கம்.

கடந்த மார்ச் மாதம் 22ஆம் தேதிக்­குப் பிறகு நேற்­று­தான் ஆக அதி­க­மா­னோ­ருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டி­ருப்­ப­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

மார்ச் 22ல் 13,000க்கும் அதி­க­மா­னோ­ருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டது.

மற்ற நாள்­களில் அறி­விக்­கப்­படும் பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்­கை­யை­விட செவ்­வாய்க்­கி­ழ­மை­களில் அறி­விக்­கப்­படும் பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை பெரும்பாலும் அதிகமாக இருக்கும். வார­யி­று­தி­களில் கூடு­தல் ஒன்­று­கூ­டல்­கள் நிகழ்­வ­தால் மேலும் பல­ருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­ப­டு­வதே இதற்­குக் கார­ணம். வார அடிப்படையிலான தொற்று விகி­தம் நேற்று 1.34ஆகக் குறைந்­தது என்று சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது.

நேற்று முன்தினம் இந்த விகிதம் 1.45ஆக இருந்ததாக அமைச்சு கூறியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!